எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுகவின் அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார் உள்ளதாகவும், தன்மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகாரை சட்டப்படி சந்திப்பேன் எனவும் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கூறியுள்ளார். தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த நிலோபர் கபில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை தனது உதவியாளரான பிரகாசம் மூலம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்ததாகவும், பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு தன்னை […]
