தேசிய நெடுஞ்சாலையில் 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு குறைவாக செயல்படும் சுங்கச்சாவடிகள் மூடப்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கான இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று மக்களவையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் மற்றும் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல் திருமாவளவன் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள சுங்க சாவடிகள் விதிகளை மீறி செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பாஜகவை சேர்ந்த மத்திய சாலை போக்குவரத்து […]
