திருச்சி மாவட்டம் லால்குடி கிளை நூலகத்தில் மெய்நிகர் நூலகத்தின் செயல்பாடுகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார். அதனை போல நூலகத்தில் பணிபுரிந்து பணியின் போது உயிரிழந்த 3 நூல்கர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், பொது நூலக இயக்குனர் இளம்பாகவத், இணை இயக்குனர் பொது […]
