காஞ்சிபுரம் செவிலிமேட்டில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக 300-க்கும் அதிகமான பெண்களுக்கு சமுதாய வளைகாப்புவிழா அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் நடந்தது. அப்போது மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சிகுழு துணை தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் போன்றோர் கருவுற்ற தாய்மார்களுக்கு நலங்கு வைத்து ஆரத்தி எடுத்து சீமந்த விழா நடத்தினர். இந்நிலையில் மாற்று மொழிகளின் ஆக்கிரமிப்பால் தமிழ் பெயர்களை அழிய விடக்கூடாது என்று பெற்றோர்களுக்கு அமைச்சர் அன்பரசன் […]
