தேச தந்தை மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள் விழா நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை காந்தியின் சிலைக்கும், புகைப்படத்துக்கும் மரியாதை செலுத்தினர். அதேபோன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் நினைவு நாளும் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஆகவே தமிழகத்தை சேர்ந்தவர்கள் காமராஜருக்கு மரியாதை செலுத்தினர். அந்த அடிப்படையில் அ.தி.மு.க சார்பாக மகாத்மா கந்தியின் பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவுநாளை முன்னிட்டு கிண்டியிலுள்ள காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபத்தில் மரியாதை […]
