தமிழக அரசியலில் அதிக நாட்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்த அதிமுகவின் நிலைமை தற்போது அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும் வகையிலேயே இருக்கின்றது. அனைத்து கட்சியினரையும் அதிமுகவை விமர்சித்து பேசும் நிலைக்கு உட்க்கட்சி பூசல் பெருமளவில் கனலாக கொதித்துக் கொண்டிருக்கின்றது. முக்கிய தலைவராக பார்க்கப்பட்ட ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து ஓரம் கட்டி, எடப்பாடி பழனிச்சாமி முழு அதிகாரத்தையும் தனதாக்கி கொண்டார். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரையும் நடவடிக்கை எடுத்து, கட்சியை விட்டு நீக்கினார். […]
