அதிமுக உட்கட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டி இன்றி தேர்வாகினர். இதனையடுத்து மாவட்ட வாரியாக உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என 4-காக பிரிக்கப்பட்டிருக்கும் கடலூர் மாவட்டத்தில் டிசம்பர் 22, 23-ம் தேதிகளில் தேர்தல் நடக்கும் என்று தகவல் வெளியானது. கடலூர், பண்ருட்டி என 2 தொகுதிகளைக் கொண்ட வடக்கு மாவட்ட அதிமுக-வில் கடலூர் நகரச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் ஏற்கெனவே நீக்கப்பட்ட நிலையில் […]
