பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.தஞ்சையில் அன்பில் மகேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாகனங்கள் அணிவகுத்துச் சென்றபோது நோயாளியுடன் மருத்துவமனைக்குச் சென்ற ஆம்புலன்ஸை நீண்ட நேரமாக சாலையில் காத்திருக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தஞ்சை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி,ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அதிகாரிகள் அனைவரும் கொள்ளிடம் கரைகளை பார்வையிட்டனர். அப்போது கொள்ளிடம் ஆற்றுப்பகுதிகளில் ஆய்வு செய்ய அமைச்சர் மற்றும் கட்சி பிரமுகர்களின் 25 கார்கள் அனுபவித்து வந்தன. […]
