மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் 2 நாட்கள் பயணமாக புதுச்சேரிக்கு வந்துள்ளார். இதையடுத்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது “இந்திய அரசியல் சட்டப் படி தமிழக ஆளுநருக்கு கருத்து கூற உரிமை மற்றும் சுதந்திரம் இருக்கிறது. எனவே தி.மு.க அரசு நீட்டும் கோப்புகளில் கையெழுத்து போடும் கைப் பாவையாக ஆளுநர் இல்லை. இதனிடையில் கோப்புகளில் சந்தேகம் எழுந்தால் […]
