ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் சிறந்த வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின்போது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தான் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து பொங்கல் […]
