தமிழக சாரணர் இயக்கத்தின் தலைவராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக அளவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவர்களிடம் நாட்டுப்பற்று, ராணுவ கட்டுக்கோப்பு, இறைப்பற்று, அன்பு, கருணை போன்றவற்றை வளர்ப்பதற்காக கடந்த 1908-ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த பேடன் பவல் என்பவர் சாரணர் இயக்கத்தை அறிமுகப்படுத்தினார். இவர் தான் சாரணர் இயக்கத்தின் தந்தை ஆவார். இந்த சாரணர் இயக்கத்தில் இணையும் மாணவர்களுக்கு பொதுநல சேவைகள், கைத்தொழில், நன்னடத்தை, உடற்பயிற்சி மற்றும் தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிகள் […]
