இலங்கையில் அதிபரும் பிரதமரும் ராஜினாமா செய்த நிலையில் நாட்டின் முக்கிய அமைச்சர்களும் பதவி விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால் அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே, பல மாதங்களாக மக்கள் தீவிரமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிபர் பதவி விலக வேண்டும் என்று அரசாங்கத்தை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்தது. எனவே மக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று திரண்டு நேற்று அதிபரின் மாளிகைக்குள் அதிரடியாக புகுந்தனர். மேலும், அதிபரின் வீட்டிற்குள்ளும் போராட்டக்காரர்கள் புகுந்து […]
