அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காமராஜரின் 48வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள காமராஜர் நினைவகத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கிங்மேக்கராக இருந்து பல தலைவர்களை உருவாக்கிய பெருமை காமராஜருக்கு இருக்கிறது. தற்போது குழப்பத்தின் உச்சத்தில் திமுக அரசு உள்ளது. திமுகவில் உள்ள அமைச்சர்களுக்கு தெளிவு இல்லை. அரசு மட்டுமல்லாமல் அரசு அதிகாரிகளும் குழம்பி விட்ட சூழலில் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் யாரும் சசிகலா பக்கம் செல்லமாட்டார்கள் . […]
