Categories
உலக செய்திகள்

“பயங்கரவாதம் மூலம் இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது”… மத்திய வெளியுறவு துறை அமைச்சர் பேச்சு…!!!!!!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சைப்ரஸ் நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “பயங்கரவாதத்தின் மூலமாக இந்தியாவை யாரும் பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது. அதை நாம் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. அனைவருடனான உறவை சுமூகமான முறையில் பேணுவதற்கே இந்தியா விரும்புகிறது. ஆனால் அதற்காக சுமூகமான உறவு என்பதற்கு மன்னித்துக் கொண்டே இருப்பது அல்ல. விலகி நின்று பயங்கரவாதத்தை வேடிக்கை பார்ப்பது என்று அர்த்தம் கிடையாது. ஏனென்றால் இந்தியா இதில் தெளிவாக […]

Categories
மாநில செய்திகள்

“விமர்சனத்தை உதயநிதி தனது சேவை மூலம் நிரூபிப்பார்”… முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை பேச்சு…!!!!!

உதயநிதி ஸ்டாலின் குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வான போது எழுந்த விமர்சனத்தை உதயநிதி ஸ்டாலின் சேவை மூலமாக எதிர்கொண்டு நிரூபித்துள்ளார். அதேபோல் தற்போது அமைச்சரான பின்பும் எழுந்துள்ள விமர்சனத்தையும் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய சேவை மூலமாக நிரூபிப்பார் என முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏராளமான பொறுப்புகள் உள்ளது. அதாவது இளைஞர் நலன், விளையாட்டு, மகளிர் மேம்பாடு கிராமப்புற கடன்கள் மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கம் போன்ற முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டங்கள்…. இதை கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும்…. அமைச்சர் கோரிக்கை….!!!!

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “தற்போது சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அதேபோல் நமது நாட்டிலும் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக மத்திய,மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த2 ஆண்டுகள் தடைப்பட்டிருந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை இந்த ஆண்டு மிகுந்த உற்சாகத்துடன் நடத்த நட்சத்திர உணவகங்கள் தயாராகி வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு… “இத மறக்காம எடுத்துட்டு போங்க”…? அமைச்சர் உத்தரவு…!!!!!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நெருங்க இருக்கின்ற நிலையில் பொதுமக்கள் அனைவரும் பொங்கல் பரிசு தொகையை  எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, வருகிற டிசம்பர் 30,31 மற்றும் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படும். அதேபோல் புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதி டோக்கன் விநியோகம் இல்லை எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் நகர் பகுதிகளில் ஒரு நாளைக்கு 300 அட்டைதாரர்களுக்கும், […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல்… “சரி பார்க்கப்பட்ட தகவலை மட்டும் பகிர வேண்டும்”… மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சு…!!!!!

கொரோனா பரவல் தொடர்பாக சரிபார்க்கப்பட்ட தகவலை மட்டுமே பகிர வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சுமார் 100 பேருடன் திங்கட்கிழமை காணொலி  வழியாக கலந்துரையாடியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, “கொரோனா பாதிப்பை தடுப்பது தொடர்பான தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்து வருகிறது. இந்த கொரோனா பாதிப்பு தொடர்பாக சரிபார்க்கப்பட்ட தகவலை மட்டுமே மற்றவர்களுக்கு பகிர வேண்டும். ஏனென்றால் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

“குடிகாரனின் ஆயுள் ரொம்ப குறுகியது”…. பெண் பிள்ளைகளின் பெற்றோர் இதை மட்டும் பண்ணாதீங்க…. மத்திய மந்திரி கவுஷல் கிஷோர் வேதனை….!!!!!

குடிக்கும் ஆண்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைக்காதீர்கள் என மத்திய மந்திரி கவுஷல்  கிஷோர் கூறியுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லம்புவா  சட்டசபை தொகுதியில் போதைப்பழக்க  மீட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய வீட்டு வசதி மந்திரி கவுஷல்  கிஷோர் கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது, “எனக்கு ஆகாஷ் கிஷோர் என்ற மகன் இருந்தான். அவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து குடிக்க ஆரம்பித்தான். இதனால் நாங்கள் அவனை ஒரு போதை மீட்பு மையத்தில் சேர்த்தோம். அவன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“96 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணை”… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!!!

ஈரோடு மாவட்டத்தில்  சோலார் அருகே உள்ள சின்னியம்பாளையம் ஊராட்சி பாரதி நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் 96 குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து பயனாளிகளுக்கு நேற்று வீடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணணுண்ணி, மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் குணசேகரன், மாநில நெசவாளர் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்… முக கவசம் அணிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்…!!!!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்துள்ள போதிலும் பாதுகாப்பு கருதி மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார். சென்னை நூற்றாண்டு நூலக வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் மூதறிஞர் ராஜாஜி அவர்களின் 50 -ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புத்தகக் கண்காட்சியை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மா.சுப்பிரமணியன் போன்றோர் தொடங்கி வைத்தனர். அதன்பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தமிழகத்தில் முக கவசம் அணிய வேண்டும் என்கிற உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா….!! நேர்மையுடன் செயல்படாத 10 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு…. மாஸ் காட்டும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்….!!!!

மத்திய தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். மத்திய தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி நல்லாட்சி தினம் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நேர்மையுடன் பணி செய்யாத 10  அதிகாரிகளுக்கு  கட்டாய ஓய்வு சட்டத்தின் படி ஓய்வு அளிக்க மத்திய அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது உறங்கிய மூத்த பிஎஸ்என்எல் அதிகாரிக்கு […]

Categories
மாநில செய்திகள்

நம்ம ஸ்கூல் திட்டம்…. ஸ்டிக்கர் ஒட்டும் விழாவிற்கு 3 கோடி வீணாக்கப்பட்டதா….? இ.பி.எஸ்-க்கு பதிலடி கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்…..!!!!

எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நேற்று எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தோம். அந்த திட்டங்களுக்கு தற்போது புதிதாக பெயிண்ட் அடித்து ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை தான் திமுக அரசு செய்து வருகிறது. மேலும் நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது பள்ளிக்கல்வித்துறையில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட சி.எஸ்.ஆர். எனப்படும் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி திட்டத்திற்கு தற்போது இவர்கள் நம்ம ஸ்கூல் என்ற […]

Categories
மாநில செய்திகள்

மின்வாரியத்தில் மாத வருவாய் ரூ.1000 கோடியாக உயர்வு… அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!

தமிழகத்தில் மின் கட்டணம்  உயர்த்தப்பட்ட பின் மின்வாரியத்தின் மாத வருவாய் ரூ.1000 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனாலும் இது திட்டமிட்டதை விட சற்று குறைவாக தான் இருக்கிறது எனவும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தமிழக மின்வாரியத்திற்கு கூடுதலாக ரூ.19,000 கோடி வருவாய் ஈட்ட வேண்டும் என திட்டமிட்டு இருந்தோம். தற்போது வரை சில கட்டணங்களை நாங்கள் சில பிரிவுகளுக்கு அறிவிக்கவில்லை. இந்நிலையில் மாதத்திற்கு மின்வாரியத்திற்கு வருவாய் ஆயிரம் கோடியாக உள்ளது என செந்தில் பாலாஜி கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு… “கண்காணிப்பை தீவிரபடுத்துங்கள்”… மத்திய சுகாதாரத்துறை மந்திரி உத்தரவு…!!!!!!

ஜப்பான், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு வலியுறுத்தியுள்ளது. இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, கொரோனா பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றி மத்திய சுகாதாரத்துறை மந்திரி […]

Categories
மாநில செய்திகள்

“கோரிக்கைகள் வரும் பட்சத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்”… அமைச்சர் மா.சுப்ரமணியன் பேச்சு…!!!!!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த 2021 ஆகஸ்ட் 5-ஆம் தேதி மக்களை தேடி மருத்துவம் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்நிலையில் அந்தத் திட்டத்தின் மூலம் மக்கள் தொடர்ந்து பயனடைந்து வந்த நிலையில் தற்போது அது ஒரு கோடியை எட்டியுள்ளது. இதற்காக ஒரு கோடியாவது பெட்டகத்தை பெறும் நபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதில் திருச்சி மாவட்டம் சன்னாசிப்பட்டியை  சேர்ந்த அந்த நபருக்கு முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்குமா….? ஆலோசனை நடத்தும் அமைச்சர்…. வெளியான தகவல்….!!!!

ஜல்லிக்கட்டு குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். தமிழர்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு உள்ளது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் போட்டி  நடைபெறும். அதிலும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. இதனை பார்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்நிலையில் ஜல்லிக்கட்டை  அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

ஆய்வு கூட்டம்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட 7 முக்கிய உத்தரவுகள்… என்னென்ன தெரியுமா…??

சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த ஆய்வில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மை செயலாளர் பெ. அமுதா விரிவாக எடுத்துரைத்துள்ளார். அந்த வகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் […]

Categories
அரசியல்

“எங்கு என்ன தவறு நடக்கும் என பல பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர்”…? முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!!!

சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற பால்வளத்துறை அமைச்சர் நாசரின் பேத்தியின் திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைத்துள்ளார். மணமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்தி பேசியபோது, “பால் விலையை குறைத்ததன் காரணமாக லட்சக்கணக்கானோர் பயனடைந்திருப்பதாகவும், கடந்த ஆட்சியை விட தற்போது ஆவின் நிறுவனத்தில் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து விமர்சனங்களை தவிர்ப்பதற்காக திருமணத்தை எளிமையாக நடத்துமாறு அமைச்சரிடம் தான் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் எங்கு என்ன தவறு நடக்கும் என பல பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர். தும்மினால் கூட செல்போனில் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் விளையாட்டு கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுமா…? எழுந்து வரும் எதிர்பார்ப்புகள்…!!!!!

தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் பதவியேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தை விளையாட்டின் தலைநகராக மாற்றும் திட்டம் உள்ளது. அதே போல் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல தி.மு.க ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் சிறிய அளவிலான விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என கூறியுள்ளார். விளையாட்டில் தமிழகம் சிறந்த மாநிலமாக உருவாக வேண்டும் என்றால் பள்ளி அளவில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு… மருத்துவர்கள் மீது அதிரடி நடவடிக்கை… அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு …!!!!!

மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட்டு அவர்களிடம் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டு தெரிந்துகொண்டுள்ளார். அதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை அரங்கம், பிரசவத்திற்கு பிந்தைய வார்டு, சித்தா பிரிவு, ஆய்வகம் போன்ற அனைத்து பிரிவுகளிலும் ஆய்வு அமைச்சர் மேற்கொண்டுள்ளார். அப்போது மருத்துவமனையில் உள்ள 16 மருத்துவர்களில் எந்த அறிவிப்பும் இல்லாமல் பணிக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இது லிஸ்ட்லயே இல்லையே”… உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு…? செம ஹேப்பியில் விளையாட்டு வீரர்கள்…!!!!!

ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூரில் அமைந்துள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் இன்று  வெகு சிறப்பாக தொடங்க உள்ளது. இன்று  தொடங்கி 22 -ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்ற இந்த போட்டியில் நீலகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்த 177 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இதில் ஓட்டப்பந்தயம், செஸ், நீச்சல், கோ-கோ, கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து மற்றும் குத்துச்சண்டை […]

Categories
மாநில செய்திகள்

வைகுண்ட ஏகாதசி…!! பிரபல கோவிலில் “திடீரென குறைக்கப்பட்ட தரிசன டிக்கெட் விலை”…. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!!!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நமது தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “திருவல்லிக்கேணியில் மிகவும் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி சாமி  கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் வைகுண்ட  ஏகாதேசியை முன்னிட்டு அதிக அளவில்  பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில்  இந்த வருடம்   தரிசன டிக்கெட் விலை ‌ குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 200 ரூபாயாக இருந்த  டிக்கெட்  தற்போது 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது” என அவர் அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகரை அமைச்சர் உருவ கேலி செய்தாரா…? கேரள சட்டசபையில் பரபரப்பு..!!!

கேரள சட்டசபையில் அமைச்சர் பிரபல நடிகரை உருவ கேலி செய்ததாக பரபரப்பு ஏற்பட்டது. மலையாள திரை உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தார் நடிகர் இந்திரன்ஸ். இவர் தமிழில் சங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் திரைப்படத்தில் சத்யராஜின் உதவியாளராக நடித்திருந்தார். அண்மையில் கேரள சட்டசபையில் அமைச்சர் வாசன் எதிர்க்கட்சியை விமர்சிக்கும் போது காங்கிரஸ் கட்சி முன்பு அமிதாப்பச்சன் போல இருந்தது. ஆனால் தற்போது நம்ம ஊர் நடிகர் இந்திரன்ஸ் போல ஆகிவிட்டது என தெரிவித்திருந்தார். இதன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உதயசூரியனும், உதயாவும்”…. ‌ நேருவின் பேனா, கலைஞரின் வரவேற்பு….. முதல் நாளில் அசத்தல் சம்பவம்….!!!!!

திமுக கட்சியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த செய்தி தான் தற்போது தமிழகம் முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றவுடன் தலைமைச் செயலகத்தில் உள்ள தன்னுடைய அறையில் சென்று அமர்ந்து கொண்டார். அப்போது உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து இடுவதற்கான கோப்புகளை அதிகாரிகள் மேஜையில் வைத்த உடன் ஒரு அதிகாரி பேனாவை கொடுக்க மூத்த அமைச்சர் கே.என் நேருவும் பேனாவை நீட்டினார். அந்த சமயத்தில் அமைச்சர் கே.என் […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 3 வருடங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு… சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்…!!!!!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த 2020-2022-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர் கூறியதாவது, தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாக இதய நோய், புற்றுநோய், வலிப்பு நோய் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பாக தொழில்நுட்ப உதவியும், நிதி […]

Categories
தேசிய செய்திகள்

நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் ஊடக விளம்பர செலவு… எவ்வளவு தெரியுமா..? மக்களவையில் அமைச்சர் தாகுர் தகவல்…!!!!!

மக்களவையில் செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகுர் ஊடகங்களில் மத்திய அரசின் விளம்பரங்களுக்காக நடப்பு நிதியாண்டில் ரூ.168.8 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விளம்பரங்களுக்காக மத்திய அரசின் செலவினங்கள் பற்றி மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி செல்வராஜ் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் தாகுர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் மத்திய அரசின் விளம்பரங்களுக்காக நடப்பு நிதி ஆண்டில் அச்சு ஊடகங்களில் ரூ.91.96 கோடியும், மின்னணு ஊடகங்களில் ரூ.76.84 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. அதாவது அச்சு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: மீண்டும் வெடித்தது சர்சை: சிக்கலில் அமைச்சர் மூர்த்தி ?

அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் கஜ பூஜை என்று யானைகள் பங்கேற்பதை வனத்துறைக்கு தெரிவிக்கவில்லை என்று தற்போது தகவல் வெளியாகி இருக்கின்றது. மதுரைக்கு வந்த யானைகள் அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்றன.  கஜ பூஜை என்று கூறி கேரளாவில் இருந்து இரண்டு யானைகள் மதுரைக்கு அழைத்து வரப்பட்டன.  அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழா வரவேற்புக்காக அந்த யானைகள் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. இதனை வனத்துறை கண்காணிக்கவில்லை என்று புகார் எழுந்திருக்கின்றனது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.3,000ஐ ரூ.6,000ஆக உயர்த்திய உதயநிதி…. அமைச்சராகி போட்ட அதிரடி கையெழுத்து….!!!!

தமிழகத்தின் 35 வது அமைச்சராக இன்று பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்புக்கு பின்பு தனது அலுவலகம் வந்த உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை சம்பந்தமான முக்கிய கோப்பில் கையெழுத்திட்டார். அதில் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படும் 3000 ரூபாயை 6000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கான பைலில் அமைச்சராக கையெழுத்திட்டார். அதேபோல முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி நடத்துவதற்கான கோப்பிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

நான் யாரையும் மிரட்டி படங்களை வாங்கவில்லை!…. உதயநிதி ஸ்டாலின் விளக்கம்….!!!!

தற்போது தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதாவது, அமைச்சர், துணை முதலமைச்சர் என சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதியை சுற்றி வாரிசு அரசியல் நிலவுகிறது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதுதான் தமிழக அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்திருக்கிறது. முதன் முறையாக சென்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் நின்று எம்எல்ஏவாக தேர்வான உதயநிதி ஸ்டாலினுக்கு 17 மாதங்களில் அமைச்சர் பதவி தேடிவந்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என எதிர்கட்சிகள் அவரை விமர்சித்து […]

Categories
மாநில செய்திகள்

“நீங்க ரொம்பவே லேட்”…. உதயநிதிக்கு அமைச்சர் பதவி… விளக்கம் அளித்த அமைச்சர் பொன்முடி….!!!!

சென்னையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியது பற்றி செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அதாவது முதல்வர் ஸ்டாலின் உதயநிதிக்கு அமைச்சர் பதவியை மிகவும் தாமதமாக கொடுத்திருக்கிறார் என நினைக்கிறேன்.  அவரை முதலிலேயே அமைச்சராக்கி இருக்க வேண்டும். கடந்த தேர்தலிலேயே தெரியும் உதயநிதி திறமை மிக்க  இளைஞர் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். மேலும் “சட்டமன்ற உறுப்பினராக அவர் சில காலம் பயிற்சி பெறட்டும் என்று தான் முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல்… எந்தெந்த படகுகளுக்கு எவ்வளவு நிவாரணம்…? அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விளக்கம்…!!!!

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மாண்டஸ் புயல் பாதிப்பால் சேதமடைந்த படகுகளில் எந்தெந்த வகை படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாடு மையத்தில் சனிக்கிழமை ஆய்வு பணிகளை மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது கூறியதாவது, புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால் மிகப்பெரிய உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது. மேலும் புயல் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!…. மாஸ் காட்டும் பிஎஸ்என்எல்…. என்னன்னு நீங்களே பாருங்க…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். டெல்லியில் வைத்து நேற்று இந்திய தொழிலக கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரயில்வே மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்  கலந்து கொண்டுள்ளார். பின்னர் அவர் கூறியிருந்ததாவது, “நமது நாட்டில் கண்டுபிடிக்கப்படும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை ஆண்டுக்கு 4,000 கோடியாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 1 லட்சத்து 35 ஆயிரம் கைப்பேசி கோபுரங்களை கொண்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 2,000 துணை சுகாதார நிலையங்கள்… அமைச்சர் வெளியிட்ட தகவல்…!!!!!!

மாமல்லபுரத்தில் கடந்த 3 நாட்களாக பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் பன்னாட்டு சுகாதார மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஆராய்ச்சியாளர்கள், அறிவியலாளர்கள் மற்றும் சர்வதேச வல்லுநர்கள் உட்பட 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர் . இந்த மாநாட்டில் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பங்கள் குறித்த பல்வேறு அமர்வுகளும், 250 கட்டுரைகள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற நிறைவு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியுள்ளார்‌. அவர் கூறியதாவது, […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!!…. 5 வருடத்தில் 2,49,914 பேருக்கு மத்திய அரசு பணிகள்…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!!

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நமது நாட்டின் வேலை வாய்ப்பு  குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இங்கு  நாட்டில் உள்ள அனைத்து துறைகளின் செயல்பாடுகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. அதேபோல் இன்று நமது இந்தியாவின் வேலை வாய்ப்பு மற்றும் மத்திய அரசு பணியாளர் நியமனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு விண்வெளித் துறை அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் கூறியதாவது, “கடந்த 2017 -ஆம் ஆண்டு முதல் இதுவரை மத்திய அரசின் […]

Categories
தேசிய செய்திகள்

செம…. செல்போன் ஆப் மூலம் குடிநீர் தொட்டி இயக்கம்… கோவையில் புதிய அறிமுகம்…!!!!!

இந்தியாவில் நாளுக்கு நாள் நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் அரசூர் ஊராட்சியில் இதனை மெய்பிக்கும் விதமாக பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகிக்க ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக குடிநீர் தொட்டி புதியதாக கட்டப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டி செல்போன் செயலி மூலம் இயங்கும் புதிய முறையை தனியார் மென்பொருள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக தொட்டியில் இருந்து தண்ணீர் நிரம்பி வழிதல் மற்றும் குடிநீர் தொட்டியின் நீர்மட்டம் போன்றவற்றை […]

Categories
மாநில செய்திகள்

“4 1/2 வருடங்கள் வக்காலத்து வாங்கி பேசி விட்டேன்”… தி.மு.க-வில் இணைந்த கோவை செல்வராஜ் பரபரப்பு பேட்டி….!!!!!!

அ.தி.மு.க-வில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கோவை மாவட்ட செயலாளராக இருந்த கோவை செல்வராஜ் கடந்த 3-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,  கோவை மாவட்ட தொழிற்சங்க தலைவர் பாரதி மற்றும் மாநகர் மாவட்ட பொருளாளர் தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் கலந்து பேசி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தி.மு.க-வில் இணைந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்கள் இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்திய அரசு….!!!!!

பிரபல அமைச்சர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.  ராமச்சந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் நமது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இது   தமிழகத்தில் 366.2 மி.மீ மழையாக பதிவாகியுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது “அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவு  தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

Categories
மாநில செய்திகள்

“பொங்கல் பரிசு தொகை 5,௦௦௦ கொடுங்க”…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி ஸ்பீச்…!!!!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்து  பேசியபோது, பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது கொரோனா காலகட்டத்தில் பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கியபோது தி.மு.க அரசு குறை கூறியது. ஆனால் தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்கினால் போதும் என நினைக்கிறது. இதன் காரணமாக வெள்ளம், பச்சரிசி, கரும்பு, மஞ்சள் […]

Categories
மாநில செய்திகள்

“சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய மாணவர்கள்”… அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு…!!!!!

பள்ளி கல்வித்துறை சார்பாக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய் கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளார். அவர் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். பின்னர் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் நிகழ்ச்சியையும் அவர் தொடங்கி வைத்துள்ளார். அப்போது மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை சைகை மொழியில் பாடியது […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்”..!!!

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து கிராமத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் 3.5 கோடி மதிப்பீட்டில் 33 கிலோ வாட் அளவிலான துணை மின் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார். மேலும் கூடுதலாக 50,000 […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. 3 நாட்கள் சர்வதேச புத்தக கண்காட்சி…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழகத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வரும் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி மாதம் 16,17,18 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3  நாட்களும் சர்வதேச அளவில் புத்தக கண்காட்சி நடைபெறும். இதில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஏராளமானோர் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ஜனவரி 16,17,18 ஆகிய தேதிகளில் சர்வதேச புத்தக கண்காட்சி…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேற்று பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதராக அதிகாரிகளை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் முதல்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. அதுவும் சென்னையில் வருகின்ற ஜனவரி மாதம் 16,17,18 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் தொடர்ந்து புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் 40 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தமிழக வாசிப்பாளர்களுக்கும் மாணவர்களுக்கும் மிக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 15000 புதிய வீடுகள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு குடிசை மாற்று வாரியத்தின் பெயரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று மாற்றியமைத்தார். அந்தத் திட்டத்தின் விதிமுறைகளையும் மாற்றி அமைத்துள்ளார். அதே சமயம் குடும்பத் தலைவியின் பெயரில்தான் வீடுகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்க திட்டத்தின் கீழ் நகர்ப்புற வீடுகள் கட்டித் தரப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் விளையாடுவதற்கான தனியாக மைதானம் கட்டித் தரப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் அன்பரசன், தற்போது […]

Categories
மாநில செய்திகள்

மின் எண்ணுடன் ஆதாரை இணைப்பதால்..‌. இது ரத்து செய்யப்படாது…? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!!!!

சென்னையில் இன்று மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாமை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, ஆதார் எண்ணை மின் இணைப்பு என்னுடன் இதுவரை 15 லட்சம் மின் இணைப்பு தாரர்கள் இணைத்து இருக்கின்றனர். இன்று முதல் வருகிற டிசம்பர் 31-ம் தேதி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதற்காக இன்னும் விரிவாக பணிகளை மேற்கொள்ள தமிழக […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவமனைகளில் கொரோனா கட்டாய பரிசோதனைக்கு தளர்வு…? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை ஐந்து விளக்கு பகுதியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்து  பேசியுள்ளார். அப்போது கூறியதாவது, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு விரைவில் தளர்வு அளிக்கப்படும். அறுவை சிகிச்சை செய்யப்படுபவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படும். கொரோனா பாதிப்பானது சீனாவில் தொடர்ச்சியாக இருந்து வந்தாலும் இந்தியாவில் பாதிப்பு இல்லை. அதனால் சர்வதேச விமான நிலையங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றது. மேலும் வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை […]

Categories
மாநில செய்திகள்

சீன பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்….!!!!!

மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர்  செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். மத்திய அரசு சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தல்கள் கட்டாயமாக பின்பற்றப்படும். ஆனால் விமான நிலையங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய  தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனைகளில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

ஒருவர் 5 மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் இலவசம் தான்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒருவர் ஐந்து மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தமிழகத்தில் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளது. அதனைத் தவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும் 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் […]

Categories
மாநில செய்திகள்

ஆதார் எண் இணைக்காவிட்டால் மின்கட்டணம் செலுத்த முடியாது?…. அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
மாநில செய்திகள்

“இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை”…? அமைச்சர் பொன்முடி புகழாரம்…!!!!

ராணி மேரி கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியுள்ளார். சென்னையில் அமைந்துள்ள ராணி மேரி கல்லூரியின் 104-ஆவது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி பேசிய போது, முதல்வர் ஸ்டாலின் இந்தியாவில் உள்ள அமைச்சர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றார். இந்த கல்லூரி 33 மாணவிகளுடன் தொடங்கப்பட்டது. ஆனால் இன்று இந்த கல்லூரியில்  5,000 மாணவர்கள் படித்து வருகின்றார்கள். இதுதான் […]

Categories
மாநில செய்திகள்

“டிசம்பர் 2-வது வாரத்திற்கு பின் இருக்காது”… மெட்ராஸ் ஐ குறித்து அமைச்சரின் மா.சுப்ரமணியன் பேச்சு …!!!!!

தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக  மெட்ராஸ் ஐ பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இது ஆடினோ வைரஸ் எனும் கிருமியால் கண்ணில் கன்சங்டிவா என்னும் விழி வெண் படலத்தில் ஏற்படும் நோயாகும். இது குறித்து மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, செப்டம்பர் மாததொடக்கத்தில்  இருந்து தமிழகத்தில் மெட்ராஸ் ஐ பரவல் அதிகரித்துக் வருகிறது. இதன் அறிகுறிகளானவை சிவந்த நிறம், கண்ணில் உருத்தல், வீக்கம், அதிக கண்ணீர் […]

Categories
மாநில செய்திகள்

குடிசை மாற்று வாரிய மக்களுக்கு …”ரூ.24,0000 வழங்கப்படும்”… வெளியான முக்கிய தகவல்…!!!!!

குடிசை மாற்று வாரியம் சீரமைப்பு பணி நடைபெறுவதன் காரணமாக வாடகைக்கு தங்குபவர்களுக்கு ரூ.24,000 வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, சேதமடைந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடங்களை இடித்து கட்டித்தர 18 மாதம் ஆகும் என்ற காரணத்தினால் வெளியே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு சீரமைப்பு பணியின் போது வாடகைக்கு வீடு எடுத்து வெளியே தங்குபவர்களுக்கு ரூ.24,000 வழங்கப்படுகிறது. மேலும் 420 அடி அளவில் […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி….!!!!

அ.தி.மு.க பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசன் நெஞ்சு வலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இதயவியல் மருத்துவர்கள் திண்டுக்கல் சீனிவாசனுக்கு முதற்கட்ட பரிசோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திண்டுக்கல் சீனிவாசன் கடந்த 2020 ஆம் வருடம் வனத்துறை அமைச்சராக இருந்த போதிலும் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |