காந்தாரா திரைப்படம் நாளை ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கன்னடத்தில் செப் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் உலக அளவில் ரூபாய் 400 கோடி வசூல் செய்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. […]
