அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஓ மை டாக் படம் வரும் 21ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியாகிய “ஓ மை டாக்” படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி குழந்தைகளது இதயத்தை வென்றதுடன், செல்லபிராணிகள் வளர்ப்பவர்களது மனதையும் வென்றுள்ளது. ஆகவே விரைவில் வெளியாக இருக்கும் இத்தமிழ் எண்டர்டெயினர் திரைப்படம், அர்ஜூனுக்கும் ( ஆர்ணவ் விஜய் ), அவனது செல்லபிராணி சிம்பாவிற்கு இடையில் உள்ள பந்தம் மற்றும் அன்பு தொடர்பான கதையை கூறுகிறது. […]
