அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் மனைவி இவானா டிரம்ப் காலமானார். இவானாவுக்கு வயது 73. அவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மரணத்தில் அசாதாரணம் ஏதும் இல்லை என்றும் மாரடைப்பு தான் மரணத்திற்கு காரணம் என்றும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இவானாவின் மரணச் செய்தியை டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகமான ட்ரூத் சோஷியல் மூலம் வெளியிட்டார். இவானா டிரம்ப் டொனால்ட் டிரம்ப் ஜூனியர், இவான்கா டிரம்ப் மற்றும் எரிக் டிரம்ப் ஆகியோரின் […]
