அமெரிக்க பெண் ஊடகவியலாளர் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதைடுத்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அந்த நாட்டைவிட்டு வெளியேறத் தொடங்கினர். அதிலும் குறிப்பாக தலிபான்களுக்கு அஞ்சி நேட்டோ அமைப்பினருக்கு உதவி செய்தவர்கள் மற்றும் ஊடகவியலாளர் என பல தரப்பினரும் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதற்கிடையே அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனமான சி.என்.என்.-ல் பணிபுரியும் பெண் ஊடகவியலாளர் கிளரிசா தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது தொடர்பான செய்திகளை […]
