ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறுவது குறித்து அமெரிக்க அரசுக்கும், ராணுவ படைக்கும் இடையே ஆலோசனை நடைபெற்று வருவதாக அதிபர் ஜோ பைடன் தகவல் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்ற முடிவில் மாற்றம் இருக்காது. தலிபான்கள் அப்பாவி மக்களையும் அமெரிக்கப் படைகளையும் குறி வைப்பார்கள் என எங்களுக்குத் தெரியும். அதனால் விழிப்புடன் கண்காணித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
