அமெரிக்க தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், முடிவுகளை மாற்ற ஜனநாயக கட்சி சதி செய்ய முயற்சிப்பதாக ட்ரம்ப் குற்றம்சாட்டிய பதிவை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்கியுள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், முடிவுகளை மாற்ற ஜனநாயகக்கட்சி சதி செய்ய முயற்சிப்பதாக […]
