நெதர்லாந்து நாட்டிற்கான அமெரிக்க தூதராக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ஷெபாலி ரஸ்தான் துக்கால்(50) என்ற பெண் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான முறையான ஒப்புதலை அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை வழங்கி இருக்கிறது. காஷ்மீரி பண்டிட் இனத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவில் இன்றைய உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்வாரில் பிறந்திருக்கின்றார். தனது இரண்டு வயது முதலே குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறியுள்ளார். அங்குள்ள மியாமி பல்கலைக்கழகத்தில் பட்டமும் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமும் பெற்றுள்ளார். இந்த நிலையில் தனது நியமனம் தொடர்பாக கடந்த […]
