டுவிட்டர் கணக்கு முடக்கத்தை எதிர்த்து டிரம்ப் அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் ஜோ பைடன் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டிருந்த நிலையில் வெற்றி பெற்றார். அதேசமயம் அதிபர் டிரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டிருந்த நிலையில் தோல்வியை சந்தித்தார். ஆனால் டிரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தோல்வியை ஏற்க மறுப்பு தெரிவித்தார். இதன் காரணமாக டிரம்ப் ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
