பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் இம்ரான்கான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் இம்ரான்கான் அமெரிக்காவின் சதி தான் தான் பதவி இழந்ததற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாகிஸ்தானில் அமெரிக்காவால் இறக்குமதி செய்யப்பட்ட அரசு ஆட்சியில் அமர்ந்துள்ளதாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இம்ரான்கான், அமெரிக்க எம்.பி. இல்கான் ஒமரை சந்தித்து பேசியுள்ளார். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. […]
