Categories
உலக செய்திகள்

சிதைந்து போன அமெரிக்கா… ”செதுக்க போகும் தமிழர்”… யார் தெரியுமா ?

அமெரிக்காவில் கொரோனாவால் இழந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க 6 இந்தியர்கள் உட்பட்ட குழுவை அதிபர் டிரம்ப் அமைத்துள்ளார் உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா பரவி 20 லட்சத்திற்கும் மேற்பட்டோரை பாதித்து ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் உயிரை பறித்துள்ளது. அவ்வகையில் அமெரிக்காவிலும் அதன் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் பொருளாதார வீழ்ச்சியையும் சந்தித்து வருகிறது அமெரிக்கா. நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக புதிதாய் குழு ஒன்றை அமைத்துள்ளார் அதிபர் டிரம்ப். ” மாபெரும் அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

கொரோனா சந்தையிலிருந்து பரவவில்லை….. அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

சீனாவின் சந்தையில் இருந்து கொரோனா பரவவில்லை அது வைரஸ் ஆய்வு கூடத்தில் இருந்து வெளி வந்துள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது சீனாவில் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா பல நாடுகளுக்கு பரவி அதிக அளவு உயிரிழப்பையும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சீனா மீது அமெரிக்கா பல குற்றச்சாட்டுகளை சுமத்தி சில அதிர்ச்சித் தகவல்களையும் வெளியிட்டுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருக்கும் இறைச்சி சந்தையிலிருந்து வைரஸ் பரவியது எனக் கூறப்பட்ட நிலையில் வூஹானில் இருக்கும் வைராலஜி […]

Categories
உலக செய்திகள்

தாய் பாசம்.. தாய் பாசம் தான்… கொரோனாவிலிருந்து மீண்டு குழந்தையை கொஞ்சும் தாய்… நெஞ்சை நெகிழ வைத்த காட்சி!

நியூயார்க் நகரில் ஒரு பெண் கொரோனா பிடியால் கோமா நிலைக்கு போய் அதிலிருந்து மீண்டு தான் பெற்றெடுத்த குழந்தையை முதல் முறையாகச் சந்தித்து கொஞ்சும் நிகழ்வு நெஞ்சை நெகிழச் செய்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா அதிவேகமாக பரவி வருகின்றது. அந்நாட்டின் நியூயார்க் நகரின் லாங் தீவை சேர்ந்த யானிரா சோரியானோ என்ற  நிறைமாத கர்ப்பிணிப்பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று வாரத்துக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிசேரியன் மூலம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் ஒன்றும் சலித்தவர்கள் இல்லை… கொரோனா தடுப்பூசி தயாரிக்க இந்தியா தீவிரம்..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோவிற்கு தடுப்பூசி தயாரிக்க அமெரிக்கா மற்றும் சீனாவுடன் இந்தியாவும் போட்டியில் குதித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 6 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவற்றில் சைடஸ் கேடிலா, சீரம் என இரு நிறுவனங்கள் மட்டுமே உலக சுகாதார அமைப்புகளிடம் பதிவு செய்து சர்வதேச அளவில் போட்டியில் இருப்பதை உறுதி செய்துள்ளது. உலகின் ஒட்டு மொத்த மக்கள் தொகை 700 கோடியை தாண்டி விட்டதால், ஒன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் தயாராவது வரவேற்கத்தக்கது என்று சர்வதேச தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

அவுங்கள இருக்கட்டும்னு விடக் கூடாது, உடனே சரி பண்ணனும் – சீண்டிய டிரம்ப்

உலக சுகாதார அமைப்பு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட வேண்டும் என அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார் உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் சீனாவில் பரவும் கொரோனா தொற்று குறித்த உண்மைகளை மறைப்பதாகவும் குற்றம்சாட்டி அதற்கு வழங்கி வந்த நிதியை நிறுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜப்பான் என ஜி 7 நாடுகளின் தலைவர்கள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விவாதம் மேற்கொண்டனர். […]

Categories
உலக செய்திகள்

35,000 பேர் உயிரும் போச்சு, 2.2 கோடி பேர் வேலையும் போச்சு – குமுறும் அமெரிக்கர்கள் ….!!

அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்புகள் அதிகமாவதோடு வேலை இழப்பு பிரச்சனையும் அதிகரித்துள்ளது உலக நாடுகளில் வெகுவாக பரவ தொடங்கிய கொரோனா தொற்றுக்கு 2152000 பேர் பாதிக்கப்பட்டு 145,000 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் புள்ளிவிபரம் கொடுத்துள்ளது. இதில் அதிக உயிர்களை பலி கொடுத்த நாடாக அமெரிக்காவே உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 67 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்  […]

Categories
உலக செய்திகள்

நடுங்க வைக்க போகும் கொரோனா – விஞ்ஞானிகள் கணிப்பில் உலகமே அதிர்ச்சி…!!

அமெரிக்காவில் கொரோனா குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டு 2025 ஆம் ஆண்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்னும் தகவலை வெளியிட்டுள்ளனர் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்து கணித கணக்கீடு மூலமாக அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். ஆய்வின் முடிவில் சில முக்கிய அம்சங்களை வெளியிட்டுள்ளனர். சமூக இடைவெளி விடுவதை உடனடியாக நிறுத்தினால் அது அதிக அளவு புதிய கொரோனா நோயாளிகளை உருவாக்கக்கூடும். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எதுவும் இதுவரை இல்லாத […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வந்த முதல் நபர் யார்..? சீனாவை கவனிக்க போகும் அமெரிக்கா …!!

உலகையே ஆட்டிப்படைக்கும் புதிய கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றி இருக்கும் அப்படின்னு சொல்லி எல்லார் மனசுலயும், ஒரு கேள்வி இருக்கிறது. விலங்கிலிருந்து மனிதனுக்கு வந்த வைரஸ் என்று நமக்குத் தெளிவாகத் தெரியும். விஞ்ஞானிகள் சரியாக இது எங்கிருந்து வந்திருக்கும் ? எப்படி விலங்கிலிருந்து மனிதனுக்கு வந்திருக்கும் ? என்ற ஒரு ஆய்வில் இறங்கி இருக்காங்க. இந்த ஆய்வினை சக்தி வாய்ந்த நாடுகளின் உளவுத் துறையும் சேர்ந்து உள்ளது. சீனா ஆய்வகத்தில் துள்ளி குதித்த வைரஸ்ஸா ?  கொரோனா சீனாவின் […]

Categories
உலக செய்திகள்

புரட்டி எடுத்த கொரோனா….. 7 லட்சம் பாதிப்பு, 35,000ஐ தொடும் மரணம் – 3 நாளில்10,977 பேர் பலி ..!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கொத்துக்கொத்தாய் மக்கள் செத்து மடிவது உலக நாடுகளை உலுக்கியுள்ளது.  கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.   நாளுக்கு நாள் பலி […]

Categories
உலக செய்திகள்

உட்கார்ந்த நிலையில் பிணங்கள், அரண்டு போன அமெரிக்கா …!!

அமெரிக்காவில் நாளுக்கு நாள் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சடலங்களை வைக்க இடமின்றி திணறி வருகிறது உலக நாடுகளில்  பரவத் தொடங்கிய கொரோனா தொற்று அமெரிக்காவில் சற்று அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாவதை கண்டு அமெரிக்கா அரண்டு போய் உள்ளது. லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இறந்தவர்களின் சடலங்களை வைக்க இடமின்றி பல மருத்துவமனைகள் தவித்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவின் டெட்ராயிடு நகரில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

மாஸ்க் கொடுங்க வேலை பாக்குறோம் – அமெரிக்காவில் செவிலியர்கள் சஸ்பெண்டு…!!

கலிபோர்னியாவில் மருத்துவமனை ஒன்றில் N95 மாஸ்க் தராமல் வேலை செய்ய மாட்டோம் எனக் கூறிய நர்சுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் அமெரிக்காவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டு 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் நர்சுகளும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் மருத்துவர்களின் முக்கிய பாதுகாப்பு கவசமான N95 […]

Categories
உலக செய்திகள்

ஏங்க..! இப்படி பண்ணுறீங்க – அமெரிக்கா முடிவால் அரண்டு போன சீனா …!!

அமெரிக்க அதிபர் உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்த உத்தரவிட்டது கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது உலக சுகாதார மையம் தனது கடமையில் இருந்து விலகி சீனாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது என அதற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டது கவலையை அளித்துள்ளது என சீனா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியதாவது, “உலக சுகாதார மையத்திற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை நிறுத்தியுள்ளது அதிக கவலை கொடுக்கிறது. இது ஒரு இக்கட்டான […]

Categories
உலக செய்திகள்

அலறும் அமெரிக்கா….. கொத்துக்கொத்தாக மரணம் – 2 நாளில் 4889 பேர் பலி …!!

அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் அபாயம் குறித்து எச்சரிக்கவில்லை: உலக சுகாதார மையத்திற்கு வழங்கும் நிதியை நிறுத்திய ட்ரம்ப்!

உலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார மையம் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். சீனாவில் உருவாகி இன்று உலகையே மிரள வைத்துள்ள கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு அமெரிக்காவில் உயிரிழப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கி வரும் நிதியை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளர். அதிபரின் இந்த குற்றசாட்டை உலக சுகாதார நிறுவனம் மறுத்தது. […]

Categories
உலக செய்திகள்

கதறி துடிக்கும் அமெரிக்கா…!! ஒரே நாளில் 2,407 பேர் பலி, 6 லட்சம் பேருக்கு கொரோனா …!!

அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.   நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா கொடுத்த சிகிச்சை…. கொரோனாவில் இருந்து மீண்ட இந்தியர்கள் …!!!

அமெரிக்காவில் புதிதாக கையாண்டு வரும் பிளாஸ்மா சிகிச்சையால் அமெரிக்கவாழ் இந்தியர்கள் மூவர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வருகின்றனர் அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்கவாழ் இந்தியர் மூவருக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களது உடலில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதோடு அவர்கள் குணம் அடைவதற்கான அறிகுறிகளும் தெரிவதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கின்றனர். கொரோனா தொற்றுக்கான தடுப்பு ஊசி தயார் செய்ய சிறிது காலம் தேவைப்படுகிறது. ஆனால் அதற்குள்ளாக கொரோனா […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து 16 மணிநேரம் வேலை…. அசந்து தூங்கிய நபர் உயிருடன் எரிப்பு… 15 நொடியில் சாம்பலான அதிர்ச்சி!

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் குவிந்து வரும் நிலையில், இறந்தவர் என நினைத்து ஒருவரை உயிரோடு எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா தான் கொரோனாவின் பிடியில் சிக்கி முதலிடத்தில் இருக்கிறது.அங்கு நாள்தோறும் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அந்நாட்டில் இதுவரை 22,115 பேர் பலியாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக நியூயார்க்கில் தான் அதிகப்படியான பாதிப்பு இருக்கிறது.நியூயார்க்கில் கொரோனா வைரசால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் முடங்கும் அமெரிக்கா: ஆபத்தில் இந்திய ஐடி நிறுவனங்கள்!

அமெரிக்கா முழுவதும் ஊடரங்கு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்திய ஐடித்துறை பெரிதும் பாதிக்கக்கூடும் நெருக்கடியில் உள்ளது. அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களும் பேரிடர் பாதித்த மாகாணங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாகாணங்களிலும் கடுமையான ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இந்த ஊடரங்கு உத்தரவால் தகவல் தொழில்நுட்பத்துறையில் பல்லாயிரம் பேர் வெளியிழக்கும் அப்பாயம் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்திலும், ராணுவத்திலும் வல்லராக கருத்தப்படக்கூடிய அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 22,115 பேர் பலியாகியுள்ளனர். அங்கு 5 லட்சத்து 60 […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் உச்சக்கட்ட ஆட்டம்: அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் ரெட் அலர்ட்!

உச்சகட்ட கொரோனா பாதிப்பால் அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களும் பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும், படிப்படியாக சீனா மீண்டது. ஆனால், சுமார் 200 நாடுகளுக்கு அந்த கொடிய வைரஸ் பரவியது. ஐரோப்பிய நாடுகள், மற்றும் மேற்கத்திய தீவுகளை இந்த வைரஸ் கடுமையாக தாக்கி வருகிறது. இந்த நிலையில், உலகளவில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க மக்களை அதிர வைக்கும் கொரோனா…!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 190க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது.  அதிகமான பாதிப்பை பெற்றுள்ள அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரஸ் 5,33,351 பேரை பாதித்துள்ளது. 20,583 பேர் இறந்துள்ள நிலையில் 30,502 குணமடைந்துள்ளனர். கொரோனா பாதித்த 4,82,033 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 11,471 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்குள்ள நியூயார்க்கில் மட்டும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள நியூயார்க்கில் மட்டும் 1,81,144 பேருக்கு கொரோனா […]

Categories
உலக செய்திகள்

வீட்டை விட்டு வெளியேறாத பெண்ணிற்கு கொரோனா தொற்று… பொருட்களை தொட்டதால் பரவியதா…?

மூன்று வாரங்கள் வீட்டை விட்டு வெளியே வராத பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தோற்று பரவத் தொடங்கியதும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்த காரணத்தினால் சார்லோட்டே நகரை சேர்ந்த ரேச்சர் ப்ரமெர்ட் மருத்துவர்களின் அறிவுரைப்படி மூன்று வாரங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். வெளியில் சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வரும் கணவனும் தனி அறையிலேயே இருந்துள்ளார். கணவரது மருந்தகத்தில் பணிபுரிந்த பரமிஸ்ட்  மற்றும் வீட்டிற்கு […]

Categories
உலக செய்திகள்

6 நாளில் 11,717 பேர் மரணம்…. அமெரிக்காவில் பலி 10ஆயிரத்தை தாண்டியது …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவில் கடந்த 6 நாட்களில் மட்டும் 11,717 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் […]

Categories
உலக செய்திகள்

உலகத்துக்கே குட் நியூஸ் : 4 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர் ..!!

உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 லட்சம் பேர் குணமடைந்துள்ளது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.   […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொரோனாவுக்கு பலி… 1,500 பேர் பாதிப்பு!

அமெரிக்காவில் இந்தியா வம்சாவளிகள் 40க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1,500க்கும் அதிகமான இந்திய வம்சாவளியினருக்கு அமெரிக்காவில் கொரோனா இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. நியூயார்க் மற்றும் நியூஜெர்சியில் அதிக அளவிலான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அதில், கேரளாவைச் சேர்ந்த 17 பேர், குஜராத்தைச் சேர்ந்த 10 பேர் , பஞ்சாபைச் சேர்ந்த 4 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 2 பேர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் பலர் 60 வயதுக்கு மேற்பட்டோர் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

நேற்று மட்டும் 2,035 பேர் பலி….. 4 நாட்களில் 7,852 பேர் மரணம்…. 5 லட்சம் பேருக்கு கொரோனா ..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த 4 நாட்களில் மட்டும் 7,852 பேர் உயிரிழந்துள்ளது அமெரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.   நாளுக்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் பாதித்திருந்த தாய்மார்கள்…. தொற்றின்றி பிறந்த குழந்தைகள்….!!

அமெரிக்காவில் கொரோனா தொற்று இருந்த தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அமெரிக்காவில் பெரு மகாணத்தில் இருக்கும் எட்கர்டோ ரெபக்லியாட்டி மார்டின்ஸ் நேஷனல் மருத்துவமனை உள்ளது. இங்கு கொரோனா அச்சத்தினால் அதிகப் பாதுகாப்புடன் அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரசவத்தின்போது மகளிர் மருத்துவ வல்லுநர்கள், மகப்பேறு நிபுணர்கள் போன்ற பெரிய மருத்துவ குழுவினரே உடன் இருப்பார்கள். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி கொரோனா தொற்றுள்ள பெண் ஒருவருக்கு குழந்தை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

கொரோனா பலி – ஸ்பெயினை முந்திய அமெரிக்கா – 2ம் இடம் பிடித்தது …!!

கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் ஸ்பெயினை முந்தி அமெரிக்கா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.   நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவையும், இந்தியர்களையும் மறக்க மாட்டேன் – மோடிக்கு நன்றி சொன்ன ட்ரம்ப் ….!!

கொரோனா தடுப்புக்காக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அனுப்பிய இந்தியாவுக்கு அமெரிக்கா அதிபர் நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்புக்காக மலேரியாவுக்கு கொடுக்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டிருந்தார். இந்தியாவில் உள்நாட்டு பயன்பாட்டு பற்றாக்குறையாக மாறிவிடக் கூடாது என்பதால் இந்த மருந்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்து. இதனால் அமெரிக்க அதிபர், இந்தியாவுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி இருந்தார். இந்தியா மருந்து கொடுக்கவில்லை என்றால் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில்…! ”2 நாளில் 3,902 மரணம்” 4.34 லட்சம் பேருக்கு கொரோனா …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த 2 நாட்களில் மட்டும் 3902 பேர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.   நாளுக்கு […]

Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு ஆதரவா இருக்கீங்க, நிதி கொடுக்க மாட்டோம் – WHO-வை மிரட்டிய டிரம்ப்

இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்  தற்போது உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்திவிடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிக அளவு கொரோனாவால் பாதிப்பை சந்தித்த நாடு அமெரிக்கா. இந்நிலையில் அதிபர் டிரம்ப் இந்தியா ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து கொடுக்காமல்  இருந்தால் பின்விளைவுகளை சந்திக்க கூடும் என இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்ததோடு,  உலக சுகாதார அமைப்பு கொரோனா  குறித்து சரியான தகவல் அளிக்கவில்லை எனவும் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவர்களுக்கு வழங்கும் நிதியை நிறுத்த போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில்…! ”ஒரே நாளில் 1,970 மரணம்” 4 லட்சம் பேருக்கு கொரோனா …!!

அமெரிக்காவை சின்னாபின்னமாக்கும் கொரோனா வைரசால் நேற்று ஒரே நாளில் 1970 பேர் உயிரிழந்துள்ளது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் அமெரிக்கா பாதிக்கப்பட்டது எப்படி ?

கொரோனாவால் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏன் இத்தனை பாதிப்புகள் என்று உலகம் முழுவதுமே கேள்விகள் எழுப்பப்படுகிறது. அதற்கு விடை தேடும் தொகுப்பு இது தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக சீனாவில் இருந்து ஏராளமான மருத்துவக் கருவிகளும், பாதுகாப்பு கவசங்கள் விமானங்கள் மூலமாக இறங்கிக் கொண்டிருக்கின்றன. இதற்காக நியூ யார்க் நிர்வாகம் சீனாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இரு மாதங்களுக்கு முன்பு இதுபோன்று விமானங்கள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தாக்குதல்… அமெரிக்காவின் உதவி தேவையில்லை… ஈரான் திட்டவட்டம்!!

அமெரிக்காவிடம் ஒருபோதும் நாங்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உதவி கேட்க மாட்டோம் என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரானா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்த வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஈரான் 7ஆவது இடத்தில் இருக்கின்றது. ஈரானில் இதுவரை 60,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,739 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 24,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவிடம் ஒருபோதும் நாங்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உதவி கேட்க […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

மருந்து மூலப்பொருள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம் – வெளியான பரபரப்பு தகவல் …!!

மருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்ய இந்தியா விதித்திருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா  வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்காவை கதிகலங்க வைத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளை நடுங்கச் செய்துள்ள கொரோனா ஆயிரக்கணக்கான உயிர்களை  பறித்துச் சென்றது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகிறது. ஒட்டுமொத்த ஆய்வாளர்களும், ஆராய்ச்சியாளர்களும், மருத்துவர்களும் இதற்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா கதற […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்…. கொரோனா மருந்து கேட்டு மிரட்டும் டிரம்ப் ..!!

கொரோனா மருந்து கேட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவை மிரட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் 13 லட்சத்து 45 ஆயிரத்து 653 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளன. 74 ஆயிரத்து 644 பேர் மாண்டுள்ளனர். 2 லட்சத்து 78 ஆயிரத்து […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் கேட்ட மருந்துகளை தரவில்லை என்றால்.. இந்தியாவிற்கு தகுந்த பதிலடி கொடுப்போம்.. அதிபர் ட்ரம்ப் மிரட்டல்..!!

அமெரிக்காவிற்கு இந்தியாவிடம் ஆர்டர் செய்த மருந்து உபகரணங்களை அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுப்போம் என்று அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து […]

Categories
உலக செய்திகள்

கொரோனோவிடம் சிக்கி தவிக்கும் அமெரிக்கா… பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது..!!

அமெரிக்காவில் கொரோனாவின் கோரப்பசிக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் உலக அளவில் […]

Categories
உலக செய்திகள்

கடும் தட்டுப்பாடு… காரின் உதிரி பாகத்தில் வெண்டிலேட்டர்கள்… யூடியூப்பில் வீடியோ வெளியிட்ட TESLA நிறுவனம்!

அமெரிக்காவில் வாகன உதிரி பாகங்களால் வெண்டிலேட்டர்கள் தயாரிக்கப்படும் என்று பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தெரிவித்துள்ளது. உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது கொரோனா வைரஸ்.இந்த வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் அனைத்து நாட்டு மக்களும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுள் தற்போது முதலிடத்தில் இருப்பது வல்லரசு நாடான அமெரிக்கா தான்.அமெரிக்காவில் கொரோனா வைரஸால் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

பிரபல ஹாலிவுட் நடிகை கொரோனாவால் மரணம்!

ஹாலிவுட் நடிகை லீ ஃபியெரோ (Lee Fierro) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த வைரசால் பிரபலங்கள் சிலரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் 1975 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘ஜாஸ்’ (“Jaws,”) திரைப்படத்தில் […]

Categories
உலக செய்திகள்

அடுத்த எச்சரிக்கை….. ”விலங்குக்கு பரவும் கொரோனா” மனிதன் மூலம் புலிக்கு பரவியது …!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மனிதனிடம் இருந்து விலங்குக்கு பரவியுள்ளது இதன் தாக்கத்தை உணர்த்துகின்றது. உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவை சின்னாபின்னமாக்கியுள்ளது. கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்த நாடுகளில் வரிசையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கின்றது. அங்கு 336,830 பேருக்கு கொரோனா தொற்று  ஏற்ப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 1,272,860- பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 69,424- பேர் உயிரிழந்துள்ளனர். மனிதனை தாக்கும் கொரோனா வைரஸ் விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாக  பேசப்பட்டன. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

“அடுத்த 2 வாரங்களில் நிறைய மரணம் ஏற்படும்”… அச்சத்தில் அதிபர் டிரம்ப்!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் அடுத்த இரண்டு வாரங்களில் பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்பு நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அச்சம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து அச்சுறுத்தி வருகின்றது கொரோனா வைரஸ். இந்த வைரசின் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 3 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா…. பீதியில் உறைந்த உலக நாடுகள் ….!!

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அசுரத்தனமாக பரவி வருவது உலக மக்களை மரண பீதியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சு …!!

அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார்கள்.  சிங்கப்பூர் போன்ற நாடுகள் கொரோனாவை மிக வலிமையாக எதிர்த்துப் போராடுகின்றது. அதற்கு அடுத்தபடியாக கொரோனவை கட்டுப்படுத்துவதில்  இந்தியா சிறப்பாக இருந்து வருவதை நாம் பார்க்கிறோம். சற்று காலம் தாழ்த்தப்பட்டாலும் கூட முழுமையான ஊரடங்கு அமல் படுத்தி நாட்டு மக்களை ஒருங்கிணைத்து அதில் ஓரளவு நாம் முன்னேறி இருக்கிறோம். அமெரிக்காவில் இது சற்று கையை மீறி விட்டதாகவே பார்க்க முடிகிறது.குறிப்பாக நியூயார்க்கில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏராளமாக ஏற்படுகிறது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து ரெடி… எலிக்கு நடத்திய சோதனையில் வெற்றி… காத்திருக்கும் ஆராய்ச்சியாளர்கள்!

அமெரிக்காவில் பீட்டர்ஸ்பர்க் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவுக்கு புதிதாக தடுப்பு மருந்து கண்டுபிடித்து அதனை எலிக்கு செலுத்தி வெற்றி கண்டுள்ளனர்.  உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் காட்டு தீயை போல வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இந்த வைரஸை ஒழிக்க மக்களை குணப்படுத்தும் மருந்துகளையும், தடுப்பு மருந்துகளையும் கண்டுபிடிக்க அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள […]

Categories
உலக செய்திகள்

அதிபர் தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும்… இ-மெயில் வாக்களிப்பு இல்லை: ட்ரம்ப் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி!

கொரோனா பிடியில் சிக்கி தவிக்கும் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் திட்டமிட்டபடி நவம்பர் 3ம் தேதி நடக்கும் என அறிவித்துள்ளார். கொரோனா தாக்கத்தால் கதிகலங்கி நிற்கும் மக்கள் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனாவால் நேற்று மட்டும் 1,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப் கூறியதாவது, ” திட்டமிட்டபடி நவம்பர் 3 தேதி அதிபர் தேர்தல் நடக்கும் என அறிவித்தார். நேரில் சென்று வாக்களிப்பது கொரோனா வைரஸ் தொற்றுக்கு […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி தகவல் ”காற்றில் பரவும் கொரோனா வைரஸ்” அமெரிக்க விஞ்ஞானி தகவல் ….!!

கொரோனா வைரஸ்  சுவாசம், பேசுவதால் காற்று வழியாக பரவும் என்று அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தேசிய சுகாதார தொற்று நோய் ஆய்வகத்தின் தலைவரான அந்தோனி பவுசி கூறுகையில், இருமல், தும்மலுக்கு மாறாக, மக்கள் பேசும்போது கூட கொரோனா வைரஸ்பரவும். இதனால் அனைவருக்கும் முகமூடி பயன்படுத்த அரசாங்கம் பரிந்துரைக்க தயாராக உள்ளது. கொரோனா தொற்றால் நோய்வாய்ப்பட்டவர்கள்  தங்கள் முகங்களை மறைக்க வேண்டும். நோய்வாய்பட்டவர்களை வீட்டில் பராமரிப்பவர்களும் முகங்களை மறைத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். இது தொடர்பாக அமெரிக்க சுகாதார […]

Categories
உலக செய்திகள்

ரஷியா அளித்த மருத்துவ உபகரணங்கள்.. பல உயிர்களை காப்பாற்றும் – அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவிற்கு ரஷியா அதிபர் வழங்கிய மருத்துவ உபகரணங்கள், பலரது உயிரை காப்பாற்றும் என அதிபர் ட்ரம்ப் கூறினார். உலகையே நிலைகுலைய செய்யும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  சீனாவில் இருந்து உருவெடுத்தது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் தற்போது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நாட்டில் தற்போதைய நிலவரப்படி, 2 லட்சத்து 77 ஆயிரத்து 161 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதல் காரணமாக 7 ஆயிரத்துக்கும் 392 பேருக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்றினால் ஏற்படும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் நேற்று மட்டும் 1,321 மரணம் …… கொரோனா பலி 7ஆயிரத்தை தாண்டியது ..!!

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 1,321ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 5,560 பேர் பலி…. உலகை மரண வேட்டை ஆடும் கொரோனா …!!

உலகளவில் கொரோனா தொற்றால் நேற்று மட்டும் 5560 பேர் உயிரிழந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். தினந்தோறும் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 854 மரணம்….. கொரோனா பிடியில் அமெரிக்கா ….!!

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 854ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர்.   தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி […]

Categories

Tech |