Categories
உலக செய்திகள்

இரக்கமற்ற கொரோனா… “கடைசி நிமிடம்”… கணவனை பார்க்க ஓடோடி வந்த மனைவி… செல்போனை பார்த்து அழுத சோகம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவனை மருத்துவமனைக்கு பார்க்க சென்ற மனைவி அவரது மொபைலை பார்த்து கதறி அழுத சம்பவம் நெஞ்சை உலுக்கியது  கொரோனா  தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவரை பார்க்க ஓடோடி   வந்த காதல் மனைவியால் இறுதியாக கணவரை பார்க்க முடியவில்லை. ஆனால் அவரது கணவன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தனது  மொபைலில் சில  பிரியாவிடை செய்திகளை விட்டு சென்றிருந்தார். அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியை சேர்ந்த ஜான் சுமார் ஒரு மாத காலம் கொரோனாவுடன்  போராடி வந்த […]

Categories
உலக செய்திகள்

வெண்டிலேட்டர் துட்டுக்கா?… சும்மாவா?… பாகிஸ்தானுக்கு அனுப்ப தயாரான அமெரிக்கா!

பாகிஸ்தானுக்கு நாங்கள் வென்டிலேட்டர்களை அனுப்பி வைப்போம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி பல உயிர்களை எடுத்துள்ள நிலையில் அமெரிக்காவில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்புகளுடன் சேர்ந்து பொருளாதாரமும் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல நாடுகளில் நோயாளிகளின் சிகிச்சைக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கும் செயற்கை சுவாச கருவி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் செயற்கை சுவாச கருவி தேவைப்படும் நாடுகளுக்கு நாங்கள் அனுப்பி வைப்போம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

இந்தாங்க வச்சிக்கோங்க…. மறுத்த அமெரிக்கா… WHO-க்கு கொடுத்த சீனா..!

உலக சுகாதார நிறுவனத்திற்கு மேலும் 30 மில்லியன் டாலர் நிதி வழங்கவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவை தலமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலக சுகாதார நிறுவனம் ஐநா சபையின் துணை அமைப்பாகும். உலக அளவில் சுகாதார விவகாரங்களை இந்நிறுவனமே  கையாண்டு வருகிறது. இந்தியா உட்பட 194 நாடுகள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆனால் இந்நிறுவனம் செயல்படுவதற்கான அதிகளவு நிதிப் பங்களிப்பை அமெரிக்கா தான் வழங்கி வந்தது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா  பரவி […]

Categories
உலக செய்திகள்

அதிவேக இணையசேவைக்கு… “7ஆவது கட்டமாக”… 60 செயற்கைகோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்..!

அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் நேற்று 7 வது முறையாக 60 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் வணிக தொடர்பாகவும் , தங்களது தேவைக்காகவும் செயற்கைகோள்களை விண்ணிற்கு செலுத்தி வருகின்றது. அதனடிப்படையில் உலகம் முழுவதிலும் அதிக வேகமான இணைய சேவையைவழங்க ‘ஸ்டார் லிங்க்’ என்னும் திட்டத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செயல்படுத்துவதற்கு முயற்சி செய்துவருகின்றது. இந்த திட்டத்தின்படி 12 ஆயிரம் செயற்கை கோள்களை 2024-ம் ஆண்டுக்குள்  விண்ணில் செலுத்துவதற்கு […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு காரணமாக தலைவிரித்தாடும் வேலையின்மை… இதுவரை 2.60 கோடி மக்கள் வேலையிழப்பு!

அமெரிக்காவில் ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 60 லட்சமாக அதிகரித்துள்ளது. அமேரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து மாகாணங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து பரிதவித்து வருகின்றனர். சீனாவில் உருவான இந்த கொரோனா வைரஸ் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் உலகளவில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27.44 லட்சம் (2,744,614) ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் […]

Categories
உலக செய்திகள்

பந்தயம் கட்டுகிறார்கள்…! ”நான் ஓய மாட்டேன்” டிரம்ப் ஆவேசம் …!!

அமெரிக்க முழுமையாக பொருளாதார வளங்களை மீட்டெடுக்கிற வரை நான்  ஓய மாட்டேன் என டிரம்ப் கூறியுள்ளார் கொரோனா பாதிப்பு காரணமாக வல்லரசு நாடான அமெரிக்கா கதிகலங்கி நிற்கின்றது. அங்கு 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளார். இதில் இருந்து மீண்டு வருவதற்கு வழி தெரியாமல் அதிபர் டிரம்ப் நிர்வாகம் திணறி வருகின்றது . இந்தநிலையில் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு டிரம்ப், பேட்டி அளித்தார். அதில் நிருபர் […]

Categories
உலக செய்திகள்

எங்களை பற்றி தெரியும்ல….! ”உங்கள நொறுக்கிடுவோம்” எச்சரித்த ஈரான் …!!

ஈரான் நாட்டிற்கு ஊருவிளைவித்தால் வளைகுடாவில் அமெரிக்கக் கப்பல்கள் தரைமட்டமாக்கப்படும் என ஈரான் மேஜர் எச்சரிக்கை விடுத்துள்ளார் பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஆறு கப்பல்களை ஈரான் நாட்டிற்கு சொந்தமான 11 துப்பாக்கி ஏந்திய சிறிய படகுகள் சுற்றிவளைத்து வட்டமிட்டு உள்ளது. இந்நிலையில் அமெரிக்க கப்பலை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஈரான் படகுகளை சுட்டு வீழ்த்த கடற்படையினருக்கு உத்தரவு பிறப்பித்ததாக டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவ்வாறு ஏதேனும் நடந்தால் வளைகுடா […]

Categories
உலக செய்திகள்

சீனா மீது அமெரிக்கா வழக்கு – சீனா பதில்

அமெரிக்கா தொடுத்த வழக்கும் ஜெர்மனி கேட்ட இழப்பீடும் அபத்தமானது என்று சீனா பதிலளித்துள்ளது கொரோனா தொற்று தொடர்பாக அமெரிக்கா  சீனா மீது வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டு அபத்தமானது என்று சீனா பதிலளித்துள்ளது. கொரோனா காரணமாக தங்கள் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட சீனா 149 பில்லியன் யூரோ வழங்க வேண்டும் என ஜெர்மனி பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதே போன்று கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை கண்டறிய விசாரணை குழு […]

Categories
உலக செய்திகள்

மரண பிடியில் அமெரிக்கா… ஒரேநாளில் 3,176 பேர் கொரோனாவுக்கு பலி: 50 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்புகள்!

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,176 நோயாளிகள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் உயிரிழப்பிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது. சீனாவில் உருவான இந்த கொரோனா வைரஸ் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களை வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. உலகளவில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27.18 லட்சம் (2,718,699) ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, இதுவரை கொரோனாவால் […]

Categories
உலக செய்திகள்

ஆமாம்…! ஏதோ ஆகிவிட்டது…. ”கிம் ஜாங் உன்னுக்கு சிகிச்சை”- உறுதியான தகவல் …!!

நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட மருத்துவமனையில் கிம் ஜாங் உன் சிகிச்சை பெற்று வருகிறார் என வடகொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது வடகொரிய தலைவரான கிம் ஜாங் அவரது குடும்பத்திற்கு என கட்டப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார் என டெய்லி என் கே என்னும் வடகொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உதவியுடன் தெரிவிக்கப்பட்ட இந்த தகவலுக்கு தென் கொரியாவும் சீனாவும் மறுப்பு தெரிவித்துள்ளது. வடகொரியாவில் ஹியாங் சான் நகரில் இருக்கும் இந்த மருத்துவமனை இதயம் தொடர்பான […]

Categories
உலக செய்திகள்

இதுலாம் தப்பு …! ”சீனா ஸ்டைலில் அமெரிக்கா” இப்படி பண்ணாதீங்க …!!

அமெரிக்காவில் முதலில் அறிவிக்கப்பட்ட மரணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே முதல் மரணம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது வல்லரசு நாடான  அமெரிக்காவையும் கொரோனா தொற்று பெரிய அளவில் பாதித்துள்ளது. வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு  மிகவும் திணறிவருகிறது. மற்றொருபுறம் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு சிலர் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்துவருகிறார்கள். இந்நிலையில், முன்னர் அறிவிக்கப்பட்டதற்கு இரண்டு வாரம் முன்பே அமெரிக்காவில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கலிஃபோர்னியா […]

Categories
உலக செய்திகள்

சும்மா கிடையாது…! ”அவரு கட்டுப்பாட்டுல இருக்கு” அமெரிக்கா தகவல் ….!!

கிம் ஜாங் உடல்நிலை சரியில்லாத பொழுதிலும்  அனைத்து கட்டுப்பாடுகளையும் அவர் வசமே வைத்துள்ளதாக அமெரிக்கா ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உடல்நிலை மோசமாக இருப்பதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, சில நாட்களாக அதிபர் கிம் ஜாங் பொது நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. அதோடு வட கொரியாவை உருவாக்கியவரும், கிம்மின் தாத்தாவுமான கிம் சுங்கின் பிறந்த நாள் விழா கடந்த 15ஆம் தேதி நடந்தது. அந்த விழாவிலும் அதிபர் கிம் ஜாங் […]

Categories
உலக செய்திகள்

மதிக்கிறோம், பாராட்டுகிறோம் – ”எங்களுக்கு நிதி கொடுங்க” WHO கோரிக்கை …!!

உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்துவது குறித்து அமெரிக்கா  மறுபரிசீலனை செய்ய நிறுவனத்தின் தலைவர் கோரிக்கை வைத்துள்ளார் உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கொரோனாபரவலை தவறாக கணித்ததாகவும் அதிபர் டிரம்ப் குற்றம் சுமத்தி அந்த அமைப்பிற்கு வழங்கிவந்த நிதியை நிறுத்து உள்ளதாக அறிவித்தார். தொற்றிற்கு எதிராக உலக நாடுகள் முழுவதும் போராடி வரும் இச்சூழலில் டிரம்பின் இந்த முடிவு அனைத்து நாடுகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு உலக சுகாதார அமைப்புக்கு பின்னடைவாக இருந்தது. இந்நிலையில் நிதி […]

Categories
உலக செய்திகள்

சுட்டுத்தள்ளுங்க…! ”டிரம்ப் போட்ட தீடீர் உத்தரவு” அதிர்ந்து போன உலக நாடுகள் …!!

அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஈரான் கப்பல்களை சுட்டு தள்ளுங்கள் என்று அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்  பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஆறு கப்பல்களை ஈரான் நாட்டிற்கு சொந்தமான 11 துப்பாக்கி ஏந்திய சிறிய படகுகள் சுற்றிவளைத்து வட்டமிட்டு உள்ளது. இந்நிலையில் அமெரிக்க கப்பலை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஈரான் படகுகளை சுட்டு வீழ்த்த கடற்படையினருக்கு உத்தரவு பிறப்பித்ததாக டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். https://twitter.com/realDonaldTrump/status/1252932181447630848 டிரம்பின் இந்த கருத்து ஈரானுக்கு எச்சரிக்கை […]

Categories
உலக செய்திகள்

நீங்க சீனாவுக்கு சப்போர்ட்டா ? எரிச்சல் அடைந்த அமெரிக்கா …!!

உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதால் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது என அமெரிக்கா பாதுகாப்பு துறை ஆலோசகர் கூறியுள்ளார் சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கொரோனா தொற்று மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற உண்மையை முதலில் கூறாத காரணத்திற்காகவும்உலக சுகாதார அமைப்பிற்கு அளித்துவந்த நிதியை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்த இருப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க பாதுகாப்புத்துறை ஆலோசகர் கூறியிருப்பதாவது “இந்த நெருக்கடியான சூழலில் […]

Categories
உலக செய்திகள்

மூடி மறைத்த சீனா…! ”ரவுண்டு கட்டிய அமெரிக்கா” நீதிமன்றத்தில் வழக்கு …!!

அமெரிக்கா மாநிலமான மிசோரியில்  கொரோனா பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி சீனாவிற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது கொரோனா பாதிப்புகளை உலக நாடுகளுக்கு மறைத்தல், கொரோனா பற்றிய தகவல்களை அறிந்த நபர்களை கைது செய்தல், உலக நாடுகள் பலவற்றிற்கு பொருளாதார பாதிப்பையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்ட சீனாவை எதிர்த்து அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின் அரசு சார்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை பரப்பிய சீனாவை எதிர்த்து முதல் வழக்கை அமெரிக்காவில் இருக்கும் மிசோரி மாநிலம் தொடர்ந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

அமெரிக்காவின் புது முடிவு….!! சிக்கி கொண்ட இந்திய தேர்தல் ஆணையர் ….!!

அமெரிக்காவின் புதிய விதிமுறைகளால் தலைமை தேர்தல் ஆணையர் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார் உலகம் முழுவதிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி பல உயிர்களை எடுத்து வரும் கொரோனா  தொற்று காரணமாக அமெரிக்கா அதிக அளவு இழப்புகளை சந்தித்துள்ளது. இன்னிலையில் கொரோனா பாதிப்பினால் மேலும் இழப்புகளை சந்திக்காமல் இருப்பதற்காக தங்கள் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டவர்களுக்காக முக்கிய விதிகளை அமெரிக்க அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இந்தியாவிற்கு […]

Categories
உலக செய்திகள்

இதுக்கு பின்னால்… ”அமெரிக்கா இருக்கு’ …. சர்வதேச நிபுணர்கள் கணிப்பு …!!

வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அமெரிக்கா புரளியை கிளப்பி விட்டிருக்கலாம்  என சர்வதேச உளவு துறை நிபுணர்கள் கூறுகின்றனர் வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமானதாகவும் தகவல்கள் வெளியாகின. அமெரிக்க உளவு நிறுவனம் இத்தகவலை வெளியிட்டு தென் கொரிய ஊடகம் ஒன்று அதனை உறுதி செய்துள்ளது. ஆனால் தற்போது மோசமாக இருப்பதாக கிம் ஜாங் உடல்நிலை  […]

Categories
உலக செய்திகள்

அப்படி பேசாதீங்க…! ”நாங்க சொல்லுறத நம்புங்க” சீனா காரணமில்லை ….!!

கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் தயாரிக்கப்படவில்லை விலங்குகளிடமிருந்து வந்திருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகையே மிரட்டி மக்களை மரண அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொடூர கொரோனா வைரஸ் சீனா நாட்டின் உகானின் கடல் உணவு சந்தையில் இருந்த விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியதாக உலக நாடுகளால் நம்பப்படுகின்றது.ஏனென்றால் இதான் தாக்கம் முதல் முதலாக அங்கு தான் இருந்தது. ஆனாலும் இந்த சந்தையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் யார் என்று அடையாளம் காணும் பணியில் சீனா இதுவரை […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில்…! 2,804 பேர் மரணம்… ”8 லட்சத்தை தாண்டி” உருக்குலைந்த USA …!!

கொரோனாவின் ஆதிக்கமாக விளக்கும் அமெரிக்கா நீங்கா துயரில் இருந்து வருகின்றது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் […]

Categories
உலக செய்திகள்

நடுங்க வைக்கும் கொரோனா… 15 பக்கங்களுக்கு இரங்கல் செய்தி… சோகத்தில் அமெரிக்கா!!!

அமெரிக்காவில் ‘பாஸ்டன் குளோப்’ பத்திரிகையில் கொரோனாவால் இறந்தவர்களின் இரங்கல் செய்திகள் மட்டும் 15 பக்கங்களுக்கு அச்சிடப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கி சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. ஆனாலும் ஒரு சில நாடுகளில் மருந்து கண்டுபிடிப்பதில் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக அவ்வப்போது அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கொரோனா வைரசால் அதிக மக்களை இழந்த நாடாக அமெரிக்கா முதலிடத்தில்  […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BIG BREAKING: கொரோனா பாதிப்பு : 25 லட்சத்தை தாண்டியது ….!!

உலகளவில் கொரோனா பாதிப்பு 25 லட்சத்தை தாண்டியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று 210 நாடுகளுக்குப் பரவியுள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரம் படி உலகம் முழுவதும் 2,500,993 பேருக்கு […]

Categories
உலக செய்திகள்

ஒன்னும் ஆகல…! ”இருக்காரு, அப்படியே இருக்காரு”….. கிம் ஜாங் உன் எங்கே ?

வட கொரிய நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் பரவியது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் வட கொரிய நாட்டின் அதிபராக கிம் ஜாங் உன் பதவி வகித்து வருகிறார். அந்த நாட்டின் முன்னாள் அதிபர்களாக இருந்த அவரின் தாத்தா, தந்தை கிம் ஜாங்கின் மறைவுக்கு பிறகு கிம் ஜாங் உன் அதிபராக இருப்பதோடு, சர்வதேச அளவில் சர்ச்சை நாயகனாகவும் வலம் வருகின்றார். கொரோனா வைரசால் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா ஷாக்…! ”உள்ளே நுழையக் கூடாது” சீனா திமிர் பேச்சு …..!!

வூஹானுக்கு சென்று அமெரிக்க குழு ஆய்வு நடத்த டிரம்ப்  கோரிக்கை விடுத்ததை சீன அரசு நிராகரித்துள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் பரவி 200க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது. வூஹானில்  இருக்கும் ஆய்வு கூடத்தில் இருந்து வைரஸ் பரவியதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என டிரம்ப் கூறினார். அவரது கருத்திற்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜெங் ஷுவாங் கூறியிருப்பதாவது, “வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

யாரும் வர வேண்டாம்…! ”டிரம்ப் எடுத்த முடிவு” ட்விட் மூலம் தகவல் …!!

தற்காலிகமாக வெளிநாட்டினர் அமெரிக்கக் குடியேற்றத்திற்கு தடை விதிக்கப் போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார் சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவிய கொரோனா தொற்று அமெரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 42 ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இந்த தொற்றினால் தொழில்துறை முழுவதுமாக முடங்கி லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வேலை இழந்துள்ளனர். இந்நிலையில் மக்களின் நலனை கருத்திற்கொண்டு தற்காலிகமாக வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு தடை விதிக்கப் போவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் […]

Categories
உலக செய்திகள்

டிரம்ப் எடுத்த முடிவு…!! ”இந்தியருக்கு பொறுப்பு” குவியும் பாராட்டு …!!

தேசிய அறிவியல் வாரியத்திற்கு உறுப்பினராக இந்திய அமெரிக்கரை அதிபர் டிரம்ப்  நியமித்துள்ளார். அமெரிக்காவின் தேசிய அறிவியல் வாரியத்திற்கு இந்திய அமெரிக்கரான சுதர்சனம் பாபு என்பவரை உறுப்பினராக அதிபர் டிரம்ப் நியமியத்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் 6 வருடங்கள் அப்பதவியில் நீடிக்க முடியும். 1986ஆம் ஆண்டு கோவையில் இருக்கும் பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்து, 1988ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஐஐடியில் முதுநிலை தொழில்நுட்பம் பிரிவில் பட்டம் பெற்று, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார் சுதர்சனம் பாபு. […]

Categories
உலக செய்திகள்

நான் மகிழ்ச்சியாக இல்லை…. ”சீனா இப்படி பண்ணிட்டு”…. டிரம்ப் வேதனை …!!

கொரோனா தொற்று எப்படி பரவியது என விசாரணை நடத்த அமெரிக்க நிபுணர்களை சீனாவுக்கு அனுப்ப விரும்புகிறேன் என டிரம்ப்  தெரிவித்துள்ளார் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று பல நாடுகளுக்கும் பரவி ஏராளமான உயிர்களை எடுத்து வருவதில் அதிக இழப்பை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. இதுவரை அமெரிக்காவில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டு 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா  பரவத்தொடங்கியது முதலே சீனா மீது இருந்த சந்தேகத்தை அமெரிக்க அரசு […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை…. ”நாங்க பரப்பவில்லை” அமெரிக்காவுக்கு சீனா பதிலடி …!!

கொரோனா தொற்று எங்களிடம் இருந்து வரவில்லை என வூஹான் ஆய்வக அதிகாரி தெரிவித்துள்ளார்  உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று சீனாவில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்கள் சந்தையிலிருந்து உருவானது என வெகு காலமாக சொல்லப்பட்ட தகவல்கள் வெளி உலகுக்கு வரவும் அந்த சந்தை மூடப்பட்டது. இதுவரை அந்த சந்தை மூடியே இருக்கும் நிலையில் கொரோனா தொற்று இயற்கையாக உருவாவது அல்ல அது வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து வெளிவந்துள்ளது என அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா – கொத்து கொத்தாக மடியும் மக்கள்….திணறும் அமெரிக்கா..!!

இரண்டு நாட்களில் 5 ஆயிரம் உயிர்களை கொரோனா வைரஸ் பறித்து சென்றிருப்பது அமெரிக்காவில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்நாட்டிலுள்ள 50 மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 30000 பேர் கோவிட்-19 வைரஸிற்கு இலக்காகி இருக்கின்றனர். பாதிப்பும், பலியும், நியூயார்க் நகரில் கட்டுக்கடங்காமல் உள்ளது. அங்கு ஒரே இரவில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சற்றும் பலன் தராத நிலையில் மாநில ஆளுநர்களிடம் அதிபர் டொனால்டு ட்ரம்ப், துணை அதிபர் […]

Categories
உலக செய்திகள்

கவலைக்கிடமாக….!! ”வட கொரிய அதிபர் உடல்நிலை” அமெரிக்கா பகீர் தகவல் …!!

அதிபர் கிம் ஜாங் உன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் அவர் ஆபத்தான நிலையில்  இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் வட கொரிய நாட்டின் அதிபராக கிம் ஜாங் உன் பதவி வகித்து வருகிறார். அந்த நாட்டின் முன்னாள் அதிபர்களாக இருந்த அவரின் தாத்தா, தந்தை கிம் ஜாங்கின் மறைவுக்கு பிறகு கிம் ஜாங் உன் அதிபராக இருப்பதோடு, சர்வதேச அளவில் சர்ச்சை நாயகனாகவும் வலம் வருகின்றார். இவர் உலக […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் பல்சுவை

ரூ. 0 கூட கிடையாது… கொதறிய கொரோனா…. உலக வரலாற்றில் பேரதிர்ச்சி ….!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை உலக வரலாற்றில் இல்லாத அளவுக்கு 0 டாலருக்கும் கீழே சென்றுள்ளது. சீனாவில் தொடங்கிய கொடூர கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக நாடுகள் அனைத்தும் நிலைகுலைந்துள்ளது. கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடக அமெரிக்கா இருந்து வருகின்றது. அதோடு அல்லாமல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சத்தால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடங்கி அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்காவின் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

உலகமே அதிர்ச்சி…!! ”பூஜியத்துக்கும் கீழ் சென்ற” கச்சா எண்ணெய் விலை …!!

உலக வரலாற்றில் என்றுமே இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் அமெரிக்கா சந்தையில் சரிந்துள்ளது. உலகம் முழுவதும் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகரித்து வருவதால் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு நோய் தொற்றுக்கு மருந்து கண்டு பிடிக்கவில்லை என்பதால் சமூக விலகலை கடைப்பிடித்து நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனால் வாகன போக்குவரத்து பெருமளவு முடங்கி, அனைத்து நாடுகளிலும் விமானங்களும் சேவை இல்லாமல் ஓய்வு எடுத்து […]

Categories
உலக செய்திகள்

நீங்க சொல்லுறது பொய்….!! அப்படிலாம் பண்ண முடியாது – சீனா பதிலடி …!!

கொரோனா வைரஸை மனிதர்களால் உருவாக்க முடியும் என்பது சாத்தியமற்ற செயல் என வூஹான் வைராலஜி இன்ஸ்டியூட்டின் இயக்குனர் தெரிவித்துள்ளார் சீனாவில் ஆரம்பித்து உலக நாடுகள் முழுவதிலும் பரவத்தொடங்கிய கொரோனா தொற்று வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி இன்ஸ்டியூட்டில் இருந்து வெளிவந்தது என கூறப்பட்ட நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அந்த இன்ஸ்டியூட் கொடுத்துவந்த நிதியை நிறுத்த போவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் சர்ச்சைக்குள்ளான இன்ஸ்டியூட்டின் இயக்குனர் யுவான் ஜிமிங் டெலிவிஷன் ஒன்றில் பேட்டி […]

Categories
இந்திய சினிமா சினிமா

காப்பாத்துங்க…! தங்க இடமில்லை, உணவு இல்லை – கதறும் இந்திய நடிகை …!!!

அமெரிக்காவில்  தவிக்கும் எங்களுக்கு அரசு உதவி புரிய வேண்டுமென சௌந்தர்யா கோரிக்கை வைத்துள்ளார் அனுபம் கேர் தயாரித்த ராஞ்சி டைரீஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமான சௌந்தர்யா ஷர்மா இத்திரைப்படத்திற்கு அறிமுக நடிகை விருதை வாங்கியவர். பல் மருத்துவரான சௌந்தர்யா நடிப்பில் இருந்த ஆர்வத்தினால் தேசிய நாடகப் பள்ளியில் பயின்று சொந்தமாக மஸ்டர்ட் அண்ட் ரெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். தனது அடுத்தப்பட வேலைக்காக அமெரிக்கா நியூயார்க் நகரில் பிலிம் அகடமி நடத்தும் ஒர்க்‌ஷாப்பில் பங்கேற்க […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கானு யாரு சொன்னது, சீனா தான் – எனக்கு தெரியும் – டிரம்ப் பதிலடி .!!

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவை விட அதிகம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகையே வேட்டையாடும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை பதம்பார்த்துள்ளது. அங்கே 7 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகி,  39ஆயிரத்துக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திபில் ட்ரம்ப்பிடம் கேள்வி கேட்ட போது, கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா அல்ல, சீனா என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவில் கொரோனாவால்ஏற்பட்டுள்ள உயிரிழப்பை சீனாவிடம் ஒப்பிட்டால் […]

Categories
உலக செய்திகள்

ஆட்டத்தை தொடங்கிய அமெரிக்கா…. அலற போகும் சீனா…. உற்றுநோக்கும் உலக நாடுகள் …!!

வூஹானின் ஆய்வுக் கூடத்திலிருந்து தொற்று பரவியதா என்பது குறித்து அமெரிக்கா விசாரணை மேற்கொண்டு உண்மையை கண்டறியும் என டிரம்ப் கூறியுள்ளார் உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று சீனாவில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்கள் சந்தையிலிருந்து உருவானது என வெகு காலமாக சொல்லப்பட்ட தகவல்கள் வெளி உலகுக்கு வரவும் அந்த சந்தை மூடப்பட்டது. இதுவரை அந்த சந்தை மூடியே இருக்கும் நிலையில் கொரோனா தொற்று இயற்கையாக உருவாவது அல்ல அது வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து வெளிவந்துள்ளது […]

Categories
உலக செய்திகள்

வேணும்னு பண்ணி இருந்திங்கனா – நீங்க அவ்வளவு தான் – டிரம்ப் எச்சரிக்கை ..!!

கொரோனவை சீனா வேண்டுமென்று பரப்பி இருந்தால் கடும் விளைவுகளை சந்திக்கும் என்று அமெரிக்க அதிபர் எச்சரித்துள்ளார். சீனாவின் மத்திய பகுதியில் உள்ள உகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் கொத்து கொத்தாக மரணம் அடைந்து வருவது மக்களின் மன நிம்மதியை உலுக்கியுள்ளது. உலகிலேயே வல்லரசு நாடாக விளங்கும் அமெரிக்கா கொரோனவால் சிக்கி சின்னாபின்னமாகி விட்டது. இது சீனாவில் உருவாக்கப்பட்டது என்றும், அமெரிக்காவின் பொருளாதாரத்தை சிதைத்து சீனா முன்னேறுவதற்கு சீனா தொடுத்த […]

Categories
உலக செய்திகள்

எப்படி வந்துச்சுன்னு தெரியல… 17 பிள்ளைகளுக்கு கொரோனா… தாயால் பரவிய அதிர்ச்சி..!

 நியூயார்க் நகரில் குடியிருக்கும் தாயார் (brittany jencik) ஒருவர் தத்தெடுக்கபட்டவர்கள் உள்ளிட்ட 17 பிள்ளைகளுக்கு  கொரோனா வைரஸை பரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது… அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்துவரும் பிரிட்டானி ஜென்சிக் (brittany jencik) என்பவர் கடந்த ஐந்து வாரங்களுக்கு முன் கொரோனவால் பாதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை என்பதால் தனது பிள்ளைகளுடன் சாதாரணமாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் அவருக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்தது. இதனால் அவரது பிள்ளைகளுக்கும் கொரோனா அறிகுறி […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் என்ன தான் நடக்கிறது… நான் சந்தோஷமா இல்ல… அதிபர் டிரம்ப்!

கொரோனா பாதிப்பை பொருத்தவரை சீனாவில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். உலகளவில் நாளுக்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா போரில் களமிறங்கி கைகொடுக்கும் நாசா….!!

கொரோனா தொற்றைத் தடுக்க முடியாமல் திணறி வரும் அமெரிக்காவிற்கு உதவ நாசா மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க தொடங்கியுள்ளது சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றிலும் பெருமளவு பாதித்து பல உயிர்களை பலி எடுத்துள்ளது. அதில் அமெரிக்கா அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. தொற்றினை சமாளிக்க தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் அமெரிக்கா பெரிதும் திணறி வருகிறது. இச்சூழலில் அந்நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கலிபோர்னியா மாகாண […]

Categories
உலக செய்திகள்

பிறந்த நாள்…. யாரும் வரல, அணிவகுத்து சிறுவனை வாழ்த்திய போலீசார் ….!!

தனது பிறந்த நாளுக்கு வாழ்த்த யாரும் வரவில்லை என வருத்தமடைந்த சிறுவனுக்கு காவல் துறையினர் சைரன் ஒலித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர் அமெரிக்காவில் கொரோனா பரவி ஏராளமானோர் பாதிக்கப்பட்டு பல உயிர்கள் போன காரணத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வீட்டில் இருந்து வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்க முடியாத சூழலில் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் வீட்டில் எளிமையான முறையில் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய சிறுவனை வாழ்த்த நண்பர்கள் […]

Categories
உலக செய்திகள்

சீனாவை விட்டுறாதீங்க, உடனே விசாரியுங்க – டிரம்புக்கு கோரிக்கை …!!

கொரோனா தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ள அதிபர் டிரம்ப்க்கு  7 எம்பிக்கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர் அதிபர் டிரம்புக்கு நாட்டின் குடியரசு கட்சியின் செனட் சபை எம்.பி. மார்கோ ரூபியோ தலைமையிலான எம்பிகள் குழு ஒன்று திரண்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். கடிதத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் முடிவு, கொரோனா வைரஸின் தோற்றம் ஆகியவை பற்றி வெளிப்படையான விசாரணையை தொடர நட்பு நாடுகளான தென்கொரியா, ஐரோப்பிய, ஜப்பானுடன் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி 7 எம்பிக்கள் […]

Categories
உலக செய்திகள்

நான் அதிபர் மகள் – காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்… டிரம்ப் மகளால் சர்சை …!!

அதிபர் டிரம்பின் மகளான இவாங்கா டிரம்ப் ஊரடங்கை மீறி குடும்பத்தினருடன் நியூஜெர்சிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் கொரோனா தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர தேவை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பது உத்தரவு. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மகளான இவாங்கா வெள்ளை மாளிகையில் ஜனாதிபதிக்கு மூத்த ஆலோசகராக இருக்கிறார். இவரது கணவரும் ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்து வருகிறார்.அமெரிக்காவில் […]

Categories
உலக செய்திகள்

வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நாய்… யோசிக்காமல் உயிரை பணயம் வைத்து மீட்ட இளைஞர்கள்!

அமெரிக்காவில் வெள்ளத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நாயை இரு  இளைஞர்கள் தாங்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய காட்சி வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள ஒரு பாலத்தில் 26 வயதான சாமுவேல் ரெயிஸ் (Samuel Reyes) என்பவர் வழக்கம்போல நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது ஆற்று வெள்ளத்தில் ஒரு நாய் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்தார் சாமுவேல். இதையடுத்து சற்றும் யோசிக்காமல் ஆற்றுக்குள் குதித்த சாமுவேல் நாயை இறுகப் பிடித்துக் கொண்டார். பின்னர் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு அஞ்சி நடுங்கிய சீனா… உலக நாடுகளிடம் அம்பலப்பட்டது …!!

கொரோனா வைரஸ் உயிரிழப்பால் அமெரிக்கா பெரும் துயரை சந்தித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் […]

Categories
உலக செய்திகள்

இரையான அமெரிக்கா…!! நேற்று 2,535 பலி, 4 நாட்களில் 13,514 பேர் மரணம் …!!

கொரோனா வைரஸ் உயிரிழப்பால் அமெரிக்கா பெரும் துயரை சந்தித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , […]

Categories
உலக செய்திகள்

கொத்துக்கொத்தாக மரணம்…. சரியான நேரத்தில், அற்புத கண்டுபிடிப்பு – அசத்திய மருத்துவர் …!!

ஒரே சமயத்தில் ஏழு நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கும் கருவியை கண்டுபிடித்த மருத்துவரை மக்கள் பாராட்டியுள்ளனர் உலக அளவில் கொரோனாவின் தாக்கத்தால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களில் சுவாசப் பிரச்சனையால் அவதிப்பட்டு செயற்கை சுவாசம் சரியான சமயத்தில் கிடைக்கப்பெறாமல் அதன் காரணமாக இறந்தவர்கள் அதிகம் உள்ளனர். இதன் காரணமாக செயற்கை சுவாசம் வழங்க வென்டிலேட்டரின்  தேவை அதிகமாகி உள்ளது. உரிய நேரம் கொடுக்கப்படாத செயற்கை சுவாசம் நோயாளியின் மரணத்தை உறுதி செய்கிறது. அமெரிக்காவில் […]

Categories
உலக செய்திகள்

இரத்தம், வியர்வை சிந்தி வளர்த்த கீரைகள்… விவசாயிகளே அழிக்கும் வேதனை..!

அமெரிக்காவில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதால் விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட கீரையை அழித்து வருகின்றனர்.. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக அமெரிக்கா தான் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது. அந்தநாட்டில் தினமும் ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். அதேபோல பாதிக்கப்பட்டவன் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.. இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஹால்ட்வில்  என்னும் ஊரைச் சேர்ந்த ஜாக் வாசி, தேவ் புக்லியா […]

Categories
உலக செய்திகள்

இந்த முடிவு எடுக்காதீங்க…. மக்களை காப்பாத்துங்க…. டிரம்ப் மீது ஆளுநர்கள் அதிருப்தி …!!

பொருளாதாரத்தின் வீழ்ச்சியை சரிசெய்ய டிரம்ப் எடுத்திருக்கும் முடிவிற்கு ஆளுநர்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர் உலக நாடுகளில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று அமெரிக்காவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி அதிக அளவில் உயிர் பலியையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதனை அடுத்து வரும் மாதங்களில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது பற்றியும் மூன்று கட்டங்களாக ஊரடங்கு தளர்த்துவது பற்றியும் மாநில ஆளுநருக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். மாநிலங்கள் ஊரடங்கை படிப்படியாக […]

Categories
உலக செய்திகள்

ஒழுங்கா சுத்தமா இருங்கள் – சீனாவுக்கு மிரட்டல்….. அசிங்க படுத்திய அமெரிக்கா …!!

சீனா உலகிற்கு கொரோனா வைரசை பரப்பியதா என்று விசாரணை நடப்பதால் சுத்தமாக இருங்கள் என சீனாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.  சீனாவில் வூஹான் மாகாணத்தில் இருக்கும் கடல் உணவு சந்தையிலிருந்து கொரோனா பரவியதாக கூறப்பட்டது ஆனால் விஞ்ஞானிகளின் கவனக்குறைவினால் வூஹானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து பரவியது என்ற செய்திகளும் வெளிவந்தன. அமெரிக்க  அறிவியலாளர் ஸ்டீவன் மாஷர், கொரோனா தொற்று பரவியதாக கூறப்படும் சந்தைக்கும் வைரஸ் ஆராய்ச்சி மையத்திற்கும் 10 மைல் தூரம் தான் இருக்கிறது என்பதை […]

Categories

Tech |