அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 இலட்சத்தை எட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 215 நாடுகளுக்கும் மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56 இலட்சத்தை எட்டியுள்ளது. அதுமட்டுமன்றி மீண்டும் 500க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். […]
