Categories
உலக செய்திகள்

அதிபர் ட்ரம்ப் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று குறிப்பிட்டுள்ள வார்த்தை மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் ஜனாதிபதியாக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், ஜோ பைடனின் வெற்றியை ஏற்று கொள்ளாமல் “இந்த அதிபர் தேர்தல் இன்னும் முடியவில்லை. இதில் முறைகேடு நடந்துள்ளதால் நாங்கள் நீதிமன்றம் செல்வோம்” என்று ஏற்கனவே […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடன் அமைத்த சிறப்புக் குழு…. இடம்பிடித்து கலக்கிய தமிழ்நாட்டுப் பெண் …!!

அமெரிக்கா ஜனாதிபதி நியமித்துள்ள கொரோனாவை கட்டுப்படுத்தும் குழுவில் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் தற்போது நடந்த அதிபர் தேர்தலில் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடன், அங்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 13 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு ஒன்றை அமைத்துள்ளார். இதில் 3 பேர் தலைமை பொறுப்பில் உள்ள இதில்  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி இடம் பெற்றுள்ளார். இவரையடுத்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செலின் ராஜ் கவுண்டர்(35) […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபருக்கான அதிகாரம் இது தான்…. இந்த உத்தரவையெல்லாம் அவரால் போட முடியாது…!!

அமெரிக்கா ஜனாதிபதிக்கு என்னென்ன அதிகாரம் உள்ளது, அவரால் எந்தெந்த உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. நவீனமயமான இந்த ஜனநாயகத்தில் பலம் வாய்ந்த பல நாடுகளில் உள்ள தலைவர்களை விட அமெரிக்க அதிபருக்கு அதிக அதிகாரம் இருக்கிறது. அமெரிக்காவின் ஜனாதிபதி என்பவர் பிரான்ஸ் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு சமமான சக்தி வாய்ந்தவர் ஆவார். ஆனாலும் அமெரிக்க ஜனாதிபதிக்கு என்று சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அவரால் எல்லா உத்தரவுகளையுமே சுயமாக பிறப்பிக்க முடியாது. குறிப்பிட்ட சில […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே நம்பிக்கை கொடுத்த கொரோனா தடுப்பூசி… கண்டுபிடித்த ஆச்சரிய தம்பதிகள்… இதான் அவர்களின் பின்னணியாம் ….!!

Pfizer கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பிற்கு பின்னணியில் இரண்டு மருத்துவ தம்பதிகளின் பங்களிப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நிறுவனமான Pfizer கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது 90% செயல்திறன் உடையது எனவும் அறிவித்துள்ளது. எனவே இந்த செய்தி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இருப்பினும் இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனம் மட்டும் கண்டுபிடித்ததல்ல. இதனுடன் BioNTech என்கிற ஜெர்மனி நிறுவனமும் சேர்ந்து கண்டுபிடித்துள்ளது. இந்த ஜெர்மனி நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிப்பின் பின்னனணியில் இருக்கும் தம்பதிகள் Ugur Shahin(55) […]

Categories
உலக செய்திகள்

தோல்வியால் தூக்கம் வரல… நாட்டை விட்டே போலாமா ? என்ன செய்ய போறார் ட்ரம்ப்… வெளியான புதிய தகவல் ..!!

ஜனாதிபதி தேர்தலில் தன் தோல்வியை ஏற்க மறுக்கும் ட்ரம்ப், பதவியை இழந்த நிலையில் என்ன செய்வார் என்ற கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. அமெரிக்காவில் தற்போது புதிய ஜனாதிபதியாக ஜோ பிடன் அறிவிக்கப்பட்ட நிலையில் டொனால்ட் ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்துள்ளார். அதிபர் டிரம்ப்க்கு நெருக்கமான நபர் ஒருவர் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்துகொண்டிருந்த சமயத்தில், ஒருவேளை இந்த தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்ட கேள்விக்கு ட்ரம்ப் மூன்று […]

Categories
உலக செய்திகள்

பிரபல பத்திரிக்கையில்…. ட்ரம்பின் கேலிச்சித்திரம் இடம்பெற்றதாக…. கூறி வைரலாக புகைப்படம்…!!

ட்ரம்பின் கேலி சித்திரத்தை டைம் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளதாக கூறி அந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் பரபர வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், டிரம்ப் கேலி சித்திரமானது டைம் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த கேலி சித்திரத்தில் இருள் நிறைந்த அறையில் இருந்து டிரம்ப் வெளியேறுவது போன்ற படத்தில் நேரம் வந்து விட்டதை குறிக்கும் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. வைரலாக இந்த புகைப்படத்தை […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் நீக்கிய முக்கிய நபர்கள்… மீண்டும் நியமித்து அசத்திய பைடன்…!!

அமெரிக்காவில் ட்ரம்ப் நீக்கிய முக்கிய இரண்டு நபர்களை ஜோ பைடன் மீண்டும் நியமித்துள்ளார். நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்காவில் 46 ஆவது அதிபராக தேர்வு செய்யப்பட இருக்கிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு தேர்வாகியுள்ள நிலையில் இருவரும் முறைப்படி 2021 ஆம் ஆண்டு 20 ஆம் தேதி அதிபர்களாக பதவி ஏற்கிறார்கள். இதனிடையே அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப் பதிவில் குளறுபடி என்றும்,  […]

Categories
உலக செய்திகள்

அதிரடியில் இறங்கிய ட்ரம்ப்…. பாதுகாப்புத் துறை மந்திரி…. திடீர் பதவி நீக்கம்…!!

பாதுகாப்புத் துறை மந்திரி மார்க் எஸ்பரை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக பதவி நீக்கம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை மந்திரியாக மார்க் எஸ்பர் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது அவரை அந்த பதவியில் இருந்து ட்ரம்ப் அதிரடியாக விலக்கியுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிரிஸ்டோபர் மில்லர் என்பவரை அப்பதவியின் பொறுப்பு அமைச்சராக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியமனம் செய்துள்ளார். இது குறித்து அதிபர் டொனால்ட் […]

Categories
உலக செய்திகள்

இன்னும் 70 நாள் தானே இருக்கு…! ஏன் இப்படி பண்ணுறாரு ? புலம்பவிட்ட ட்ரம்ப் …!!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியில் இருக்க இன்னும் 70 நாட்களே இருக்கும் நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சரை நீக்கியுள்ளது அனைவரையும் புலம்ப வைத்துள்ளது. அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வியுற்றார். பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபை சீட்டுகளை ஜோ பைடன் பெற்று அதிபராக பதவியேற்க இருக்கிறார். அதிகாரப்பூர்வமாக வருகின்ற ஜனவரி மாதம் இவர் பதவி ஏற்பார் என்று தெரிகிறது. இதனிடையே தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது, மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். எங்களுடைய […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் …!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டி இருக்கிறது. 210 நாடுகளில் தீவிரமாக பரவி வரும் கோவிட் 19 கொல்லுயிரி அமெரிக்காவில் அதிவேகம் எடுத்துள்ளது. இதுவரை 1 கோடியே 3 லட்சம் பேர் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மட்டும் 1 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 512 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 2,43,768 அதிகரித்துவிட்டது. இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் தரமான […]

Categories
உலக செய்திகள்

தேர்தலில் வென்ற ஜோ பைடனை ஏன் வாழ்த்தவில்லை ? முக்கிய நாடுகள் சொன்ன காரணம் …!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனுக்கு உலக நாட்டு தலைவர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அதிபராக தேவையான பெரும்பான்மை தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்று, தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை வீழ்த்தியுள்ளார்.தற்போதைய நிலையில் 270 தேர்தல் சபை வாக்குகள் தேவை என்ற நிலையில் ஜோ பைடன் 290 வாக்குகளை பெற்றுள்ளார். ஜனவரி மாதம் 20ஆம் […]

Categories
உலக செய்திகள்

தேர்தலில் தோற்று போன அதிபர்… இனி என்ன செய்வார் டிரம்ப்…? வெளியான முக்கிய தகவல் ..!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் தேர்தல் முடிவை ஏற்காத டிரம்ப் அடுத்தடுத்து என்ன செய்ய போகிறார் ? என தகவல் வெளியாகியுள்ளது. உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யபட இருக்கிறார். தோல்வி அடைந்த தோல்வியை ஒத்துக் கொள்ளாமல் சட்டரீதியாக தேர்தல் முடிவுகளை சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் என்று அடுக்கடுக்கான […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடனுக்கு வாழ்த்த தெரிவிக்க மறுத்துவிட்ட சீனா …!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வாழ்த்த தெரிவிக்க சீனா மறுத்துவிட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பை வீழ்ந்து, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்வாகியுள்ளார். ஜோ பைடன் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ளதற்கு உலகம் முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

எல்லாமே ரெடி…! ”கொரோனாவுக்கு ஆப்பு” உலகை காப்பாற்றிய USA, ஜெர்மன் ..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 5 கோடிக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு 12 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. பல […]

Categories
உலக செய்திகள்

இப்படி பண்ணிட்டீங்களே ட்ரம்ப்… அதிர்ச்சியில் அமெரிக்கர்கள்… வெளியான முக்கிய தகவல் …!!தேர்தல் நைட் பார்ட்டி – அடுத்தடுத்து அதிர்ச்சி

அதிபர் ட்ரம்ப் தேர்தல் பரப்புரைகள் தொடர்பாக வெள்ளை மாளிகையில் ஆதரவாளர்களுடன் நடைபெற்ற பார்ட்டியானது கரோனா தொற்று பரவல் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கும் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் தேர்வாகியுள்ளார். அதேபோல், துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெற்றிப்பெற்றுள்ள போதும் அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதிதான் முறைப்படி அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இந்திய மக்களே…! அமெரிக்கர்கள் திருந்திவிட்டார்கள்… இதான் நாட்டுக்கு நல்லது… பாஜக மீது சிவசேனா தாக்கு …!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியுற்றதிலிருந்து, இந்தியா பாடம் கற்றால் நாட்டிற்கு நல்லது என சிவசேனா தெரிவித்துள்ளது. சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா வெளியிட்டுள்ள தலையங்கத்தில், “அமெரிக்க அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதியற்றவர். ட்ரம்பைத் தேர்ந்தெடுத்த தவறை அமெரிக்க மக்கள் நான்கு ஆண்டுகளிலேயே சரிசெய்தனர். அவரால் ஒரு வாக்குறுதியைக்கூட நிறைவேற்ற முடியவில்லை. டிரம்பின் தோல்வியிலிருந்து நாம் எதையாவது கற்றுக்கொள்ள முடிந்தால், அது நாட்டிற்கு நல்லது. அமெரிக்காவில் வேலையின்மை கொரோனா பாதிப்பைவிட அதிகளவு உள்ளது. இதற்கு ஒரு […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் தோல்வி…. கொண்டாடி மகிழ்ந்த மருமகள்…. வெளியிட்ட ட்விட்….!!

ட்ரம்ப் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததை அவரது மருமகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி ட்விட் செய்துள்ளார். கடந்த 2ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்த ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்று உள்ளார். இந்நிலையில் ட்ரம்பின் தோல்வியை அவரது மருமகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். பைடன், ஹாரிஸ் பெயர் பொறிக்கப்பட்ட தொப்பியை அணிந்து கொண்டு ஷாம்பியான் கோப்பையை கையில் வைத்துக் கொண்டு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். அதோடு ட்ரம்பின் மருமகள் மேரி எல் “அனைவரும் நன்றாக […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா-இந்தியா உறவு…. 2006ஆம் ஆண்டே தெளிவு படுத்திய ஜோ பைடன்….!!

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட இருப்பது இந்தியா-அமெரிக்கா இடையே உள்ள உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என நம்பப்படுகிறது. ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். இதனால் அமெரிக்க இந்தியா இடையே இருக்கும் உறவிற்கு அதிகபட்ச முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்கா- இந்தியா உறவுக்கு ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியாவை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர […]

Categories
உலக செய்திகள்

சுதந்திர தேவியின் கேலிச்சித்திரம்… அவமானத்தில் தலைகுனிந்த டிரம்ப்… வைரலாகும் வரைபடம்…!!!

அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலை டிரம்பிடம் அவரது பாணியில் அவரின் தோல்வியை கூறும் கேலிச்சித்திரம் வரையப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் ஜோ பைடன் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருந்தாலும் டொனால்டு டிரம்ப் தனது தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல், தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறியுள்ளார். அதனால் சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அவ்வகையில் அமெரிக்காவில் இருக்கின்ற புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலை டிரம்பிடம் அவரது […]

Categories
உலக செய்திகள்

முன்னாள் அதிபருக்கு வந்த சோதனை… டிரம்புக்கு நடுவிரல் காட்டிய பொதுமக்கள்…. வைரலாகும் புகைப்படம்….!!

வெள்ளை மாளிகைக்கு சென்ற ட்ரம்பை மக்கள் நடுவிரலை உயர்த்தி காட்டி கேலி செய்து அசிங்கப்படுத்தியாதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது நடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ட்ரம்ப் இரண்டாவது முறையாக தோல்வியை சந்தித்துள்ளார். இந்த தோல்வியை அடுத்து ட்ரம்ப், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வந்த போது அங்கு அவருக்கு மோசமான அனுபவம் ஒன்று அமைந்துள்ளது. கார் வர்ஜீனியாவிலுள்ள கோல்ப் மைதானத்திலிருந்து கிளம்பி வெள்ளை மாளிகைக்கு வரும் வழியில் டிரம்ப் காரை நெருங்கிய மற்ற கார்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

கெத்து காட்டும் இந்தியர்கள்… 5 லட்சம் பேருக்கு அமெரிக்க குடியுரிமை… ஜோ பைடன் எடுத்த முதல் முடிவு …!!

ஜோ பிடன் தலைமையிலான ஆட்சி 5 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அமெரிக்க தேர்தலில் வெற்றிபெற்று ஜோ பைடன் அதிபராகவும் கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் பதவி ஏற்க உள்ளனர். ஆட்சியில் அமர்ந்தவுடன் ஜோ பைடன் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு சென்றவர்களுக்கு குடியுரிமை அளிப்பதில் தான் முதல் கையெழுத்து போடுவார் என பலரும் கருதுகின்றனர். இதன்படி  ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் 1.10 கோடி புலம்பெயர்ந்த மக்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்குவதற்கான திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி […]

Categories
உலக செய்திகள்

14 ஆண் குழந்தை…. காத்திருந்தது வீண் போகல….. 15 ஆவதாக பிறந்த பெண் குழந்தை… மகிழ்ச்சியில் குடும்பம்…!!

பெண் குழந்தை மீது இருந்த அன்பினால் 14 ஆண் குழந்தைகளைப் பெற்ற பிறகு 15-ஆவதாக பெண் குழந்தையை பெற்றெடுத்த தம்பதியருக்கு வாழ்த்துக்கள் குவிகிறது அமெரிக்காவில் இருக்கும் மெக்சிகன் பகுதியை சேர்ந்த தம்பதியினர் கட்டேரி-ஜே ஸ்வாண்ட். இத்தம்பதியினருக்கு பெண் குழந்தையின் மீது அதீத அன்பு இருந்துள்ளது. ஆனால் இவர்களுக்கு பிறந்தது ஆண் குழந்தை. இருந்தாலும்  தங்களுக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக காத்திருந்து உள்ளனர். 14 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இத்தம்பதியினருக்கு  15 ஆவதாக பெண் குழந்தை […]

Categories
உலக செய்திகள்

அதிபர் ஜோ பைடன்…. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு…. கோல்ஃப் விளையாட்டில் ட்ரம்ப்….!!

அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியான சமயத்தில் ட்ரம்ப் கோல்ஃப் விளையாடி கொண்டிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியிருந்தது. தொடர்ந்து ஜோ பைடன் முன்னிலை வகித்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு சில தினங்கள் ஆனது. இதனிடையே தான் நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாகவும் ஓட்டு எண்ணிக்கையை நிறுத்த போவதாகவும் அடுத்தடுத்து ட்ரம்ப் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்தார். இவ்வாறு பரபரப்புடன் தேர்தலின் முடிவுகளை உலகம் […]

Categories
அரசியல் உலக செய்திகள்

“பயங்கர கலவரம்” பீதியில் அமெரிக்கா…. தோற்றாலும் கெத்து காட்டும் ட்ரம்ப்…!!.

ஜோ பைடன் ஜனாயதிபதியாக பொறுப்பேற்பதை எதிர்த்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வருகிற ஜனவரி 20ஆம் தேதி 46வது ஜனாதிபதியாக பொறுப்பேற்க இருக்கிறார். இந்நிலையில் குடியரசு கட்சி ஆதரவாளர்களுக்கும், ஜனநாயகக்கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 538 தேர்தல் சபை வாக்குகளில் இதுவரை ஜோ பைடன் 290 வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டொனால்ட் […]

Categories
உலக செய்திகள்

தேர்தலில் தோற்ற அதே நாளில்…. ஆடை மாற்றப்பட்ட ட்ரம்ப் மெழுகுசிலை…. வெளியான வீடியோ…!!

ட்ரம்ப் அவர்கள் அதிபர் தேர்தலில் தோற்ற அதே நாளில் லண்டனில் அவரின் மெழுகு சிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் 294 வாக்குகள் பெற்று அமெரிக்காவின் ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவரை எதிர்த்து போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் 214 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். இந்நிலையில் டிரம்ப் அவர்களுக்கு அதிபர் தேர்தலில் தோற்ற அதே நாளில் இங்கிலாந்தில் உள்ள ட்ரம்ப் மெழுகு சிலையில் மாற்றம் […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றி… குடியரசுத் தலைவர் வாழ்த்து… அதிபருடன் இணைய ஆர்வம்…!!!

அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்தியா மற்றும் அமெரிக்கா உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு ஜோ பைடனுடன் இணைந்து செயலாற்றுவதற்கு நான் […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடன் கேர கூடாது…. நானும் அப்படி கேட்பேன்… ட்ரம்ப் பரபரப்பு கருத்து …!!

அமெரிக்க தேர்தலில் வெற்றியை நெருங்கும் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் அதிபர் டிரம்ப் ட்விட்டரில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அமெரிக்க தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெறுகிறது. இந்நிலையில், பைடன் 290 இடங்களையும், ட்ரம்ப் 214 இடங்களையும், கைப்பற்றியுள்ளனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது டிரம்பெட் முன்னிலையில் இருந்தார். வாக்கு எண்ணிக்கை நிறைவடைய இருக்கும் சூழலில் வெற்றி பெற்றதாக டிரம்ப் அறிவித்துக்கொண்டார். பின்பு அஞ்சல் வாக்குகள் எண்ண தொடங்கியதும் ஜோ பைடன் வெற்றியை நெருங்கி விட்டார். […]

Categories
உலக செய்திகள்

பதவி இழந்த ட்ரம்ப்….. விவாகரத்து கேட்கப்போகும் மெலனியா…? வெளியான தகவல்…!!

அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த ட்ரம்பை மெலனியா விவாகரத்து செய்ய இருப்பதாக முன்னாள் உதவியாளர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அதிபர் தேர்தலில் ஜோ பைடன் 290 இடங்களில் வெற்றிக் கொடியை நாட்டி அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் தோல்வி அடைந்த ட்ரம்பை அவரது மனைவி விவாகரத்து செய்ய இருப்பதாக முன்னாள் உதவியாளர் ஒருவர் கூறியுள்ளார். ட்ரம்பிற்கு மெலனியா மூன்றாவது மனைவி. இந்நிலையில் முன்னாள் உதவியாளரான ஸ்டெபின்  கூறும்போது ட்ரம்ப்-மெலனியா மகன் வழி பேரனுக்கு சொத்தில் சம  […]

Categories
உலக செய்திகள்

இந்திய-அமெரிக்க உறவு மேலும் வலுப்பெறும்… ஜோ பைடன்,கமலா ஹாரிஸ் வெற்றி… பிரதமர் மோடி வாழ்த்து…!!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளை பெற்றுள்ளார். ஆனால் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளை பெற்று வெற்றி இலக்கை அடைந்துள்ளார். அதன் மூலமாக அமெரிக்காவில் 46வது அதிபராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடன் வெற்றி… ஜனநாயகத்திற்கு ஒரு புதிய அத்தியாயம்… தெருக்களில் ஆடிப்பாடி ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

[அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் அவரின் ஆதரவாளர்கள் தங்கள் கொண்டாட்டங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளை பெற்றுள்ளார். ஆனால் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளை பெற்று வெற்றி இலக்கை அடைந்துள்ளார். அதன் மூலமாக அமெரிக்காவில் 46வது அதிபராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அமெரிக்காவின் […]

Categories
உலக செய்திகள்

 ஜோ பைடன் ஆட்சியில் இது உருவாக வேண்டும்… இதுவே இந்தியாவின் எதிர்பார்ப்பு… சோனியா காந்தி…!!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து கூறியுள்ளார். அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளை பெற்றுள்ளார். ஆனால் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளை பெற்று வெற்றி இலக்கை அடைந்துள்ளார். அதன் மூலமாக அமெரிக்காவில் 46வது அதிபராக அவர் […]

Categories
உலக செய்திகள்

வரலாற்று சிறப்பு மிக்க தேர்தல்… கமலா ஹாரிஸ், ஜோ பைடன் வெற்றி… ஸ்டாலின் வாழ்த்து…!!!

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளை பெற்றுள்ளார். ஆனால் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளை பெற்று வெற்றி இலக்கை அடைந்துள்ளார். அதன் மூலமாக அமெரிக்காவில் 46வது அதிபராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

நிறையா வேலை இருக்கு…. பெருமை படுகிறேன்… ஜோ பைடன் நெகிழ்ச்சி …!!

கடந்த 4 நாட்களாக உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது அமெரிக்க அதிபர் தேர்தல். உலகமே உற்று நோக்கி இந்த தேர்தலில் ஒவ்வொரு நகர்வையும் கண்காணித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக அவரே வருவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை சந்தித்துள்ளார். இறுதியாக தற்போது வெளியான பென்சில்வேனியா மாகாண முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பைடன் அசத்தலான வெற்றியை பெற்றுள்ளார். பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: மண்ணை கவ்வினார் ட்ரம்ப் – வெளியான அறிவிப்பு …!!

கடந்த 4 நாட்களாக உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது அமெரிக்க அதிபர் தேர்தல். உலகமே உற்று நோக்கி இந்த தேர்தலில் ஒவ்வொரு நகர்வையும் கண்காணித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக அவரே வருவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை சந்தித்துள்ளார். இறுதியாக தற்போது வெளியான பென்சில்வேனியா மாகாண முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பைடன் அசத்தலான வெற்றியை பெற்றுள்ளார். பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடன் 284, ட்ரம்ப் 214…. அமெரிக்காவுக்கு புது அதிபர்… வெளியான முடிவுகள் …!!

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் முடிவுகள் நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒருவழியாக முடிவுக்கு வந்தது. ஜோ பைடன் 284 தேர்தல் சபை வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். 214 தேர்தல் சபை வாக்குகளை மட்டும் பெற்று அதிபர் ட்ரம்ப் பின்னடைவை சந்தித்துள்ளார். கடைசியாக பென்சில்வேனியா மாகாணத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதில் ஜோ பைடன் 49.7 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவருக்கு கூடுதலாக 20 தேர்தல் சபை வாக்குகள் கிடைத்துள்ளன. 264 வாக்குகளோடு ஜோ […]

Categories
உலக செய்திகள்

BIG BREAKING: அமெரிக்காவின் 46ஆவது அதிபரானர் ஜோ பைடன்!

அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 3ஆம் நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மூன்று நாளாக தொடர்ந்து நடைபெற்றுவந்தது. இந்நிலையில், பெரும்பான்மைக்கு 270 இடங்கள் தேவை என்ற நிலையில், பைடன் 284 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக, 264 இடங்களில் பைடன் வெற்றி பெற்றியிருந்தார். இழுபறி மாகாணங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில், பைடன் பெற்ற வெற்றி அவரை 46ஆவது அமெரிக்க அதிபராக அமரவைத்துள்ளது.

Categories
உலக செய்திகள்

நாம் எதிரிகள் அல்ல…. எதிர் எதிர் கட்சிகள் தான்…. டிரம்புக்கு பைடன் அட்வைஸ்….!!

ஜோ பைடன் அமெரிக்க தேர்தலில் வெற்றியை நெருங்கியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் ஆக இருந்தாலும் எதிரிகள் கிடையாது என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெறும் நிலையில், வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கிறார் ஜோ பைடன். ஆனால் அதிபர் டிரம்ப் வாக்கு எண்ணிக்கை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதாக கூறி வருகிறார். இவ்வாறு இருவரும் மறைமுகமாக மோதி வரும் நிலையில் டுவிட்டரில் பதிவுகள் மூலம் ஜோ பைடன் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில் நாம் […]

Categories
உலக செய்திகள்

நிறையா பிரச்சனை இருக்கு…. ஒன்னா நின்னு சாதிப்போம்… ஜோ பைடன் அழைப்பு …!!

அதிபர் தேர்தலில் வெற்றி உறுதி என அதிபர் வேட்பாளராக போட்டியிட்டு முன்னிலை வகிக்கும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னிலை வகிக்கும் ஜோ பைடன் நாட்டு மக்களிடம் பேசும் போது, உங்களுடைய வாக்குகளுக்கு பலன் உண்டு. அது நிச்சயம் எனப்படும், உங்களுடைய குரல்கள் கேட்கப்படும். ஒரு வளமான, வலுவான ஒரு ஒன்றியத்தை கட்டமைப்போம். இதுதான் நம்முடைய எண்ணம். நம்மிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு, அது பரவாயில்லை. ஜனநாயகத்தின் அழகே கருத்து வேற்றுமை தான் என […]

Categories
உலக செய்திகள்

எல்லாம் பேசிட்டு இருக்கேன்… பணியை தொடங்கிய பைடன்…. அதிபராவதற்குள் அசத்தல் …!!

பொருளாதாரம், கொரோனா போன்ற பல விஷயங்கள் குறித்து அதிபராவதற்ககு முன்பே ஜோ பைடன் ஆய்வாளர்களிடம் பேசிக்கொண்டு இருக்கின்றார். அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னிலை பெற்று, புதிய அதிபராக போகும் ஜோ பைடன் மக்களுக்கு உரையாற்றினார். எண்ணிக்கை ஒரு தெளிவான செய்தியை நமக்கு சொல்கின்றது. 24 மணி நேரத்துக்கு முன்னாடி ஜார்ஜியாவின் பின் தங்கி இருந்தோம். இப்போது நாம் முன்னேறி இருக்கின்றோம். பென்சில்வேனியாவில் நம்முடைய வெற்றி உறுதி. அரிசோனாவில் நாம வெற்றி பெற போறோம். நம்முடைய வெற்றி இரட்டிப்பாகி […]

Categories
உலக செய்திகள்

விமானத்தில் பறந்த இதயம்…. அடுத்து என்ன நடந்தது…? வெளியான அதிர்ச்சி வீடியோ…!!

தானம் அளிக்கப்பட்ட இதயத்தை கொண்டு சென்ற விமானம் திடீரென விபத்துக்குள்ளான சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று தானமாக அளிக்கப்பட்ட இதயத்தை எடுத்துக்கொண்டு, இரண்டு ஊழியர்கள் மற்றும் பைலட்டுடன் புறப்பட்டது. இதையடுத்து தெற்கு கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் கெக் மருத்துவமனையின் மேல் விமானம் தரையிறங்கும் போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இதில் தானம் அளிக்கப்பட்ட இதயத்தை கொண்டு வந்த தனியார் ஏர் ஆம்புலன்ஸில் இருந்த இரண்டு சுகாதார ஊழியர்கள் மற்றும் பைலட் ஆகியோர் […]

Categories
உலக செய்திகள்

இதுவரை இல்லாத புதிய உச்சம்…. 1 கோடி பேருக்கு கொரோனா…. வேட்டையாடப்படும் USA

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகாண் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, உலக நாடுகளை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. ஏறக்குறைய 10 – 11 மாதங்கள் ஆகியும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. தற்போதைய சூழலில் உலக அளவில் கொரோனாவின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதுள்ளது. உலக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா தொற்றில் முதலிடம் வகித்துள்ளது. முதலில் ஒரு நாளைக்கு […]

Categories
உலக செய்திகள்

வாக்கு எண்ணிக்கை முடியல…! ”ட்ரம்ப் ஜெயிக்கும்” தேர்தல் மையத்தில் நடந்த செயல்… வைரலாகும் வீடியோ…!!

ட்ரம்ப் வெற்றி பெற அவரது ஆதரவாளர்கள் தேர்தல் மையத்திற்கு வெளியில் பிரார்த்தனை செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் முடிவில் இழுபறி தொடர்ந்து வரும் நிலையில், டொனால்டு ட்ரம்ப் ஆதரவாளர்கள் அவர் வெற்றி பெற வேண்டும் என்று தேர்தல் மையத்திற்கு வெளியே பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது ட்ரம்ப் 213 வாக்குகள் பெற்று பின்னடைவிலும், ஜோ பைடன் 253 வாக்குகளும் பெற்று வெற்றி விளிம்பிலும் இருக்கிறார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறுவதால் இழுபறி […]

Categories
உலக செய்திகள்

வெற்றி விளிம்பில் பைடன் …. உளவுத்துறை அதிரடி முடிவு…. பரபரப்பில் அமெரிக்கா….!!

ஜார்ஜியாவில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் ஜார்ஜியாவில் ஜோபைடன் வெற்றி பெற்றுள்ளார். இதனால் உளவுத்துறை அவருக்கு அதிரடியாக பாதுகாப்பை அதிகரித்துள்ளது. ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலை வகித்த வந்த நிலையில் வெற்றி வாகை சூடியுள்ளார். ட்ரம்ப் 214 வாக்குகள் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், நொவோடா மற்றும் கடும் இழுபறியிலுள்ள ஜார்ஜியா மாகாணங்களில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பில் ஜோ பைடன் ஜார்ஜியாவில் வெற்றி பெற்றுள்ளார். […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அமெரிக்கா தேர்தல்: ஜார்ஜியாவிலும் முந்தினார் பைடன் …!!

ஜார்ஜியா மாகாணத்திலும் அதிபர் ஜோ பைடனை ட்ரம்ப் முந்தியதால் அவரின் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். ஜோ பைடன் அடுத்தடுத்து டொனால்ட் ட்ரம்ப்பிடம் உள்ள ஒவ்வொரு மாநிலமாக கை பற்றிக் கொண்டிருக்கிறார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே சற்று முன்பு வரை தொடர்ந்து முன்னிலையில் இருந்த ஜார்ஜியா என்ற ஒன்று மாநிலத்திலும் தற்போது முன்னிலை வகித்து வருகின்றார். இன்று காலை இந்திய நேரப்படி இருவரும் சம அளவிலேயே இருந்தார்கள். படிப்படியாக இருவருக்கும் இடையான வாக்கு வித்தியாசமானது குறைந்து கொண்டே […]

Categories
உலக செய்திகள்

“ஜாலியாக படம் பாருங்கள் ட்ரம்ப்” கலாய்த்த தன்பெர்க்…. வைரலாகும் கர்மா ஒரு பூமராங்…!!

ட்ரம்பின் டுவீட்க்கு கலாய்த்து பதில் அனுப்பிய பூமராங் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருப்பதால் அதிக பதற்றத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில் அதிபர் தேர்தல் முடிவுகளில் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் தான் வெற்றி பெற்றுவிட்டதாகவும் அதனால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்றும் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். ஆனால் டிரம்பின் நடவடிக்கைகள் எல்லாமே தோல்வியில் முடிந்துள்ளன. ஆனாலும் டிரம்ப் தான் […]

Categories
உலக செய்திகள்

இப்படிலாம் நடக்கவே கூடாது….! ”அவமானபட்ட அமெரிக்கா”…. உலக நாடுகள் விமர்சனம்…!!

தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட சிக்கலால் நடந்த போராட்டங்கள் அமெரிக்காவுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாக உலக நாடுகள் விமர்சித்துள்ளன. அமெரிக்க நாட்டில் நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இறுதி முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் நடந்த ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவிற்கு அவமானத்தை ஏற்படுத்துவதாக உலக நாடுகள் விமர்சனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் நியூயார்க் மற்றும் பிற நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் – காவல்துறையினருக்கும் இடையே நடந்த சண்டையினை ரஷிய ஊடகம் வெளியிட்டுள்ளது. மேலும் அமெரிக்க தேர்தல் முடிவுகளில் தெளிவு இல்லாதால் இது உலக […]

Categories
உலக செய்திகள்

மொதல்ல ஜெயிக்கிறேன்… அப்பறம் பாருங்க… வெறும் 77 நாட்கள் போதும்… அடித்துச் சொன்ன ஜோ பிடன் …!!

அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் பாரிஸ் ஒப்பந்தத்தில் 77 நாட்களில் அமெரிக்காவை இணைப்பதாக ஜோர்டன் தெரிவித்துள்ளார். ஒரு நாடு பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்றால் மூன்று வருடங்கள் அதற்காக காத்திருக்க வேண்டியது அவசியம். எனவே 2017 ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கான முடிவை ட்ரம்ப் வெளியிட்டார். நேற்றுடன் அந்த காலம் முடிவடைந்ததால் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அதிகாரபூர்வமாக அமெரிக்கா வெளியேறியதாக தகவல்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ஜோ பைடேன் தனது ட்விட்டர் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அமெரிக்க அதிபர் யார் ? முடிவு அறிவிக்க 1 மாதம் ஆகும்… வெளியான புதிய தகவல் …!!

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாக மேலும் பல நாட்கள் ஆகும் என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை போக்கு வேறு மாதிரி சென்று கொண்டிருக்கின்றது. ஜோ பைடன் முன்னிலை வகித்தாலும்,  ரொம்ப பின்னடைவை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. வாக்குப்பதிவில் முறைகேடு, தேர்தலில் முறைகேடு, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு, வாக்கு எண்ணிக்கை நிறுத்துங்கள் என்றெல்லாம் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை வைத்து வைத்து வருகின்றார். மேலும் பல இடங்களில் ட்ரம்ப் தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது. இதனால் […]

Categories
அரசியல் உலக செய்திகள் சற்றுமுன்

எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை ? ட்ரம்ப் எடுத்த முக்கிய முடிவு ….!!

அமெரிக்க அதிபரின் மிரட்டல் தொனியிலான ட்விட் உலக அளவில் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை வகிக்கிறார். முடிவுகள் அறிவிக்கப்பட்டது முதலே ஜோ பைடன் முன்னிலை பெற்று வருவதை ஏற்றுக்கொள்ள முடியாத தற்போதைய அதிபர் டிரம்ப் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தவேண்டும். தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்றெல்லாம் அடுத்தடுத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். இந்த நிலையில் தற்போது அதிபர் ட்ரம்ப் மிரட்டும் தொனியில் வாக்கு எண்ணிக்கையை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அமெரிக்க மக்கள் பாவம்…! இப்படி ஒரு அதிபரா ? சிக்கலில் மக்களாட்சி …!!

வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்க என டிரம்ப் ட்விட் பதிவிட்டது அந்நாட்டு மக்களாட்சிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகின்றது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் நிலையில் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில் ட்ரம்ப் ஒரு கருத்தை தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என்று ட்விட்டரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதிவிட்டிருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜோ பைடன் முன்னிலை வகிப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் […]

Categories

Tech |