Categories
உலக செய்திகள்

“அவசரக்கால தடுப்பூசி”… ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் single- doseக்கு அங்கீகாரம்… அமெரிக்காவின் முக்கிய முடிவு….!!

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரித்துள்ள single- dose என்ற தடுப்பு மருந்தை அவசரக்கால தடுப்பூசியாக பயன்படுத்தலாம் என்று அமெரிக்க அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிறுவனமான FDA  ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவது குறித்து பல கட்டங்களாக ஆய்வு நடத்தியது. அதற்குப் பிறகு இந்த நிறுவனத்தின் தடுப்பூசியை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து வயதுள்ளவர்களுக்கும் செலுத்தலாம் என்று கடந்த சனிக்கிழமை அங்கீகாரம் […]

Categories
உலக செய்திகள் விபத்து

கட்டுப்பாட்டை இழந்த விமானம்…. குடியிருப்பின் மீது விழுந்து விபத்து…. 3 பேர் உயிரிழப்பு….!!

கட்டுப்பாட்டை இழந்த விமானம் வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கெயின்ஸ்வில்லே நகரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஒற்றை இன்ஜினுடன் குட்டி விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. கெயின்ஸ்வில்லே விமான நிலையத்திலிருந்து புளோரிடா மாகாணம் டேடோனா கடற்கரை பகுதி நோக்கி புறப்பட்டு சென்ற விமானத்தில் விமானி உட்பட 3 பேர் பயணித்துள்ளனர். விமானம் கிளம்பிய சில நிமிடத்திலேயே விமானம்  விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த […]

Categories
உலக செய்திகள்

அம்மாடியோ… 2 நாய்களை கண்டுபிடித்தால் 3.6 கோடி பரிசா?… அப்படி என்ன நாய் அது?…!!!

அமெரிக்க பாடகி லேடி காகா வளர்க்கும் இரண்டு நாய்களை கண்டுபிடித்து தந்தால் 3.6 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகை மற்றும் பாடகியுமான லேடி காகா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகின்றார். அவர் பிரெஞ்ச் புல்டாக் இனத்தை சார்ந்த கோஜி மற்றும் குஸ்டவ் ஆகிய இரண்டு நாய்களை வளர்த்து வருகின்றார். அவரின் வீட்டு வேலைக்காரர் கடந்த புதன்கிழமை இரவு, நாய்களை நடை பயணத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக […]

Categories
உலக செய்திகள்

5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…. புவிசார் ஆய்வாளர்கள் தகவல்…. பீதியில் மக்கள்….!!

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் மெக்கென்சி பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்சம் ஏற்படுத்தியுள்ளது.   அமெரிக்காவிலுள்ள அலாஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியான மெக்கன்சி பகுதியில் நிலநடுக்கம் தென்பட்டதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்தள்ளது. இந்த நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவுகோலில்  பதிவாகியுள்ளது.   அங்கு குடியிருந்த மக்கள் வீடுகள் கிடுகிடுவென குலுங்க தொடங்கியவுடன் வீட்டிலிந்து வெளியேறியுள்ளனர். பின் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.  இச்சம்பவம் குறித்து விசாரித்தத்தில் எற்பட்டுள்ள […]

Categories
உலக செய்திகள்

5 கோடி மக்களுக்கு…. இந்த தடுப்பூசி போட்டாச்சி…. பைடன் வெளியிட்ட தகவல்…!!

அமெரிக்காவில் தற்போதுவரை 5 கோடி மக்களுக்கு பைசர், மாடர்னா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதுவரை 2,90,55,491 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மேலும் 5,20,878 பேர் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் கூறியுள்ளது. அந்நாட்டில் பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி […]

Categories
உலக செய்திகள்

ஒரே மாதிரி இருந்த தோழிகள்… டிஎன்ஏ கிட்டால் தெரிந்த உண்மை… நாடு தாண்டி சென்று தந்தையிடம் கேள்வி…!!

அமெரிக்காவில் தோழிகளாக இருந்த இருவரும் டிஎன்ஏ பரிசோதனையில் சகோதரிகள் என்று தெரியவந்ததால் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள்.  அமெரிக்காவை சேர்ந்த Cassandra Madison (32) மற்றும் Julia Tinetti (31) ஆகிய இருவரும் தோழிகள். இவர்கள் பார்ப்பதற்கு சகோதரிகள் போன்று இருப்பதாக பலரும் கூறிவந்த நிலையில், இருவரின் உடலிலும் டொமினிக்கன் குடியரசின் கொடி பச்சை குத்தப்பட்டிருப்பதை தற்செயலாக கவனித்துள்ளனர். இதனால் நாம் இருவரும் உண்மையாகவே சகோதரிகளாக இருப்போமோ? என்ற சந்தேகம் இருவருக்கும் உண்டானது. மேலும் இருவருமே தத்து கொடுக்கப்பட்டவர்கள் […]

Categories
உலக செய்திகள் தலைவர்கள்

சவுதி மன்னருடன் தொலைபேசி உரையாடல்… அமெரிக்க அதிபர் பேசியது என்ன….?

அமெரிக்க அதிபர் சவுதி மன்னருடன் இரு நாடுகளுக்ககு இடையேயான உறவு குறித்து தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளார் . அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோபைடன் ஜனவரி மாதம் 20ஆம் தேதி பதவி ஏற்றார். மேலும் பதவியேற்றதிலிருந்து உலக நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொருவரையும் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு அவர்களுடன் உரையாடல் நடத்தி வருகிறார். இதுவரையில் சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருடன் உரையாடல் நடத்தி வந்ததுள்ளார்.   இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

புறப்பட்ட சில விநாடிகளில் விபத்தான விமானம்… வீட்டின் கூரை மேல் விழுந்த இறக்கை… 3 பேர் பலியான சோகம்…!!

அமெரிக்காவில் ஒரு என்ஜின் கொண்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகி 3 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  அமெரிக்காவில் வடகிழக்கு ஜார்ஜியாவில் இருக்கும் Gainsville விமான நிலையத்தில் Cessna182 என்ற ஒற்றை என்ஜின் விமானம் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை புளோரிடாவிற்கு மூன்று நபர்களுடன் சென்றுள்ளது. இந்நிலையில் விமான நிலையத்தில் இருந்து சென்ற விமானம் சுமார் 3.2 கிலோ மீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளாகியது என்று மத்திய விமான போக்குவரத்து துறை தெரிவித்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து உடனடியாக தீயணைப்புத்துறையினர் சம்பவ […]

Categories
இராணுவம் உலக செய்திகள்

அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல்…. ஈரான் ராணுவ தளம் அழிப்பு…. அதிரடியாக கொடுத்த பதிலடி…!!

ராணுவ வீரர்களை தாக்கியதால் அமெரிக்கா ஈரானின் ராணுவ தளத்தை முற்றிலுமாக அழித்து பதிலடி கொடுத்துள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ படைத்தளங்கள் மீது சமீப காலத்தில் ராக்கெட் குண்டு  மூலம் தாக்குதல் நடத்தியதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். இதை காரணமாக கொண்டு எதிராளியை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கோடு நேற்று சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களின் படை தளங்களின் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது.   இந்த தாக்குதலினால் அப்பகுதி முற்றிலுமாக அழிக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

பிரபல பயிற்சியாளர் தற்கொலை… பல்வேறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் எடுத்த விபரீத முடிவு…!

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பெண்கள் அணியின் பயிற்சியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கின் முன்னாள் பயிற்சியாளராக இருந்தவர் ஜோன் கெடெர்ட். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பெண்கள் அணியின் பயிற்சியாளராக இருந்தார். மேலும் பெண்கள் ஜிம்னாஸ்டிக் அணியின் தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் அவர் மீது 20 மனித கடத்தல், முதல்நிலை பாலியல் வன்கொடுமை, இரண்டாம் நிலை பாலியல் வன்கொடுமை, குற்றவியல் தொழில் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

பைடன் போட்ட அதிரடி உத்தரவு…! அமெரிக்கா பதிலடி தாக்குதல்…. பிரபல நாடு மீது குண்டு மழை …!!

அமெரிக்க போர் விமானங்கள் சிரியாவில் இருக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற போராளிகள் மீது குண்டு வீசி அழித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத்துறை இதுபற்றிக் கூறுகையில் , ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் ஜோ பைடனின் உத்தரவினாலே  ராணுவ படைகள் சிரியாவில் உள்ள குழுக்களுக்கு எதிராக வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக உறுதியளித்துள்ளது. தாக்குதல் குறித்து அமெரிக்க பாதுகாப்பு துறை வெளியிட்டதில், […]

Categories
உலக செய்திகள்

கடுமையான பனிப்பொழிவு…. செயற்கையானதா…? இயற்கையானதா…? வைரலாகும் வீடியோ…!!

டெக்சாஸில் பெய்த பனிப்பொழிவு செயற்கையானது என்று மக்கள் சதி கோட்பாடு என்னும் தலைப்பில் சமூக வலைதளங்களில் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கடுமையான பனி பெய்துள்ளது.  இந்த பனிப்பொழிவின் காரணமாக 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அத்தியாவசிய தேவையான தண்ணீர், மின்சாரம் போன்றவை கிடைக்காமல் தவித்து வந்துள்ளனர். மேலும் பனிபொழிவினால் 20 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பனிப்பொழிவு குறைந்து வருவதால் தற்போது தான் மக்கள் இயல்பு […]

Categories
உலக செய்திகள்

இதயத்தை வெட்டி எடுத்து உருளைக்கிழங்குடன் வதக்கி விருந்து… அமெரிக்காவில் நடந்த பயங்கரம்…!!!

அமெரிக்காவில் பெண்ணை கொலை செய்து இருதயத்தை வெட்டி எடுத்து உருளைக்கிழங்குடன் சமைத்து பரிமாறி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஆக்லஹோமா நகரைச் சேர்ந்தவர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன் (42). இவர் பக்கத்து வீட்டு பெண்ணை கொடூரமாக கொலை செய்து அவரின் இருதயத்தையும் வெட்டி எடுத்து தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு விருந்து சமைத்து பரிமாறிய ஹோமிசைட் கொலைகாரனை அமெரிக்கா  போலீஸ் கைது செய்தது. அதுமட்டுமன்றி மாமா மற்றும் மாமாவின் பேத்தியையும் கொலை செய்துள்ளான். மேலும் செவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

“பாதி ஆண், பாதி பெண் போல” இருக்கும்…. அரிய வகை பறவை…. வைரலாகும் புகைப்படம்…!!

அமெரிக்காவின் பறவை ஆர்வலரான ஜேமி ஹில் எடுத்த அரிய வகை பறவையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அமெரிக்காவில் கடந்த 48 வருடங்களாக பறவைகள் குறித்து ஆய்வு செய்து வருபவர் ஜேமி ஹில். பறவை ஆர்வலரான இவர் அமெரிக்காவின் கிராண்ட் வேலி பகுதியில் தென்பட்ட கர்தினால் என்னும் அரிய வகை பறவையை படம் பிடித்துள்ளார். இந்தப் பறவை குறித்து அவர் கூறுகையில், “கர்தினால் என்பது ஒரு வகை  குருவியாகும். இதில் ஆண் குருவி சிவப்பு […]

Categories
உலக செய்திகள்

இந்திய பெண்ணை கௌரவிக்கும் அமெரிக்கா… குவியும் பாராட்டு…!!!

அமெரிக்க அரசு இந்தியாவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் உள்ளிட்ட 12 பேருக்கு விருது வழங்கி சிறப்பிக்க உள்ளது. அமெரிக்காவில்  ஜோ பைடன் புதிய ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளார். இவரது நிர்வாகம் சர்வதேச ஊழல் தடுப்பு சாம்பியன்விருது என்ற பெயரில் ஒரு விருதை புதிதாக உருவாக்கியுள்ளது. இவ்வகையில் இந்த விருதை பெறுவதற்கு இந்தியாவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் உள்ளிட்ட 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர் தகவல் அறியும் உரிமை இயக்கத்தில் தேசிய […]

Categories
உலக செய்திகள்

தனியாக நின்று அழுது கொண்டிருந்த சிறுவன்….”கால் தடத்தை” பின் தொடர்ந்த போலீசார்… காத்திருந்த அதிர்ச்சி…!

அமெரிக்காவில் தனியாக நின்று அழுது கொண்டிருந்த சிறுவனின் தாயின் சடலம் குளத்தில் மிதந்து கொண்டிருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கில் ஒரு சிறுவன் தன் தாயை காணாமல் அழுதபடி நின்று கொண்டிருந்தான். இதனை அறிந்த போலீசார் சிறுவன் இருந்த இடத்திற்கு விரைந்து சென்று அவனிடம் விசாரணை செய்தனர். அப்போது சிறுவன் நின்று கொண்டிருந்ததற்கு அருகே சில கால்தடங்கள் இருப்பதை போலீசார் கவனித்தனர். அதனை தொடர்ந்து சென்ற பொது […]

Categories
உலக செய்திகள்

அடப்பாவிகளா…! பொம்மையையும் விட்டு வைக்கலையா ? பார்சலை பிரிந்து ஆடிப்போன பெற்றோர் …!!

அமெரிக்காவில் குழந்தைக்கு சர்ப்ரைஸாக பரிசு வாங்கிய பொம்மையில் போதை மாத்திரைகள் இருந்ததை  கண்டு அதிர்ந்து போனா பெற்றோர் . அமெரிக்காவின்  அரிசோனா பகுதியை சேர்ந்த பெற்றோர் தங்கள் மகளுக்கு பரிசாக பொம்மை ஒன்று ஏற்கனவே பயன்படுத்திய விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வாங்கியுள்ளனர். அந்த பொம்மையை தன் குழந்தையிடம் கொடுப்பதற்கும் முன் அது ஏற்கனவே பயன்படுத்திய பொம்மை என்பதால் அந்த குழந்தையை தாய் சுத்தப்படுத்த நினைத்தார். அப்படி அவர் சுத்தம் செய்யும் போது அந்த பொம்மைக்குள் […]

Categories
உலக செய்திகள்

இந்திய வம்சாவளி பெண்ணா ? ”வேண்டவே வேண்டாம்” எதிர்க்கும் அமெரிக்க எம்பிக்கள் …!!

இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரா டாண்டன்  அமெரிக்க வெள்ளை மாளிகையில் பட்ஜெட் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுவதில்  பிரச்சனை ஏற்பட்டுள்ளது . அமெரிக்கா வெள்ளை மாளிகையில் பட்ஜெட் நிர்வாக அலுவலக இயக்குனராக நீரா டாண்டன் நியமிக்கப்படுவதாக செய்திகள் வெளியானது. ஆனால் அவர் நியமிக்கப்படுவதற்கு சில எம்பிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவர் நியமிக்கப்படுவதில்  சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகக்கட்சி எம்.பி ராபர்ட் போர்ட்மன் மற்றும் சூசன் கலின்ஸ் உள்ளிட்ட குடியரசு கட்சி எம்.பிகளும் நீரா டாண்டன் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப் […]

Categories
உலக செய்திகள்

நாசா அனுப்பிய 6 பேருக்கு தெரிந்த ரகசிய செய்தி… ஊரெங்கும் தெரியவந்த சுவாரஸ்யம்…!!

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சிவரென்ஸ் ரோவரில் பயன்படுத்திய பாராசூட்டில் பொறிக்கப்பட்ட ரகசிய செய்தி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாசாவின் பெர்சிவரென்ஸ் ரோவரில் உபயோகப்படுத்தப்பட்ட மிகப் பெரிதான பாராசூட்டில் ரகசிய செய்தி ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. அதில் பைனரி குறியீட்டு முறையில் “Dare Mighty Things” என்ற தொடர் வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களை கொண்டு ரகசியமாக பாராசூட்டில் எழுதப்பட்டுள்ளது. அதாவது வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த விண்வெளி முயற்சியில் பாராசூட்டில் வித்தியாசமான வடிவத்தை பொறிக்க Lan clark என்ற பொறியாளர் […]

Categories
உலக செய்திகள்

“1700 பேரை கடத்திய நபர்”… இதனால தான் நான் கடத்துனேன்… அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா….?

1700 பேரை கனடாவிற்கு கடத்திய நபர் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். மோகன், ரிச்சி என்ற பெயரால் அழைக்கப்படும் ஸ்ரீ கஜமுக செல்லையா என்ற நபர் கனடாவை சேர்ந்தவர். இவர் சுமார் 1700 பேரை இதுவரை கடத்தியுள்ளார். படகு மூலம் 154 புலம்பெயர்ந்தோருடன் அமெரிக்காவுக்கு தப்பி செல்ல முயன்ற செல்லையாவை Turks and Caicos அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் ஒரு வருடம்  Turks and Caicos -வில் சிறை தண்டனை அனுபவித்ததார் செல்லையா. அதற்கு […]

Categories
உலக செய்திகள்

குடியுரிமை பெறவிரும்புவோருக்கு…. ஒரு மகிழ்ச்சி செய்தி…. பைடன் அதிரடி அறிவிப்பு…!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த 2008ம் ஆண்டு இருந்த குடியுரிமை முறையை பின்பற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் வேலையின் காரணமாக பெரும்பாலான அயல்நாட்டவர்கள் அந்நாட்டின்  குடியுரிமை பெறுகின்றனர். இந்த குடியுரிமை பெறுவதில் இந்தியர்கள் இரண்டாவது இடத்தில் இருக்கின்றனர்.மேலும் அந்நாட்டு குடியுரிமை பெற விண்ணப்பிப்பவர்களுக்கு குடியுரிமை தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் அதிக அளவு அயல்நாட்டவர்கள் குடியேறுவதை குறைப்பதற்காக அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் இத்தேர்வில் சில மாற்றங்களை கொண்டு வந்தார். அதனடிப்படையில் கடந்த 2008 […]

Categories
உலக செய்திகள்

“இதுவும் அவசரக்கால தடுப்பூசி தான்”… பிரபல நிறுவனத்தின் தடுப்பூசிக்கு… அங்கீகாரம் வழங்கிய அமெரிக்கா…!!

அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிரபல மருந்து நிறுவனமான ஜான்சன் அண்ட்  ஜான்சன் கொரோனாவுக்கு எதிராக தயாரித்துள்ள சிங்கிள் டோஸ் என்ற தடுப்பூசிக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் FDA அங்கீகாரம் வழங்க  முடிவு செய்துள்ளது. உலகில் உள்ள நாடுகளில் கொரோனாவுக்கு எதிராக சுமார் 44 ஆயிரம் பேருக்கு இந்த நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் இந்த தடுப்பூசி கொரோனா வைரஸ்களை எதிர்க்கும் […]

Categories
உலக செய்திகள்

வீட்டில் வயதானவர்கள் & குழந்தைகளை…. கவனிக்கும் அரசு ஊழியர்களுக்கு…. ரூ.15 லட்சம் சம்பளம் – அமெரிக்க அரசு அதிரடி…!!

வீட்டில் குழந்தைகள், வயதானவர்களை கவனித்து கொண்டிருக்கும் அரசு ஊழியர்களுக்கு ரூ.15 லட்சம் வரை சம்பளம் வழங்கப்டும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “அமெரிக்காவில் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளி செல்லாத தங்களுடைய குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் மத்திய அரசின் பெற்றோர்களுக்கு செப்டம்பர் 30 வரை சம்பளத்துடன் விடுப்பு கிடைக்கும். முழுநேர அரசு ஊழியர்கள் 600 மணி நேரம் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு 35 டாலர்கள் வாரத்திற்கு 1500 டாலர்கள் […]

Categories
உலக செய்திகள்

முன்னாள் காதலியின் 2 வயது மகனை கொன்ற நபர்… “என் குழந்தையோட சாவுக்கு நானே காரணமாயிட்டேன்”… கதறும் தாய்….!!

அமெரிக்காவில் 2  வயது சிறுவன் கொலை செய்யப்பட வழக்கில் தாயின் முன்னாள் காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் Cheyanne என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று Athian Rivera என்ற 2 வயது ஆண் குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளது. இதுகுறித்து காவல் துறையினரிடம் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் பொதுமக்களும் காவல்துறையினரும் குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் குப்பைத் தொட்டி ஒன்றிலிருந்து Athian Rivera சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக Athian Rivera-ன்  […]

Categories
உலக செய்திகள்

“தப்பே பண்ணாதவங்கள எப்படி அர்ரெஸ்ட் பண்ணலாம்”… உடனே ரிலீஸ் பண்ணுங்க… சீனாவை எச்சரிக்கும் ஜோ பைடன்…!!

குற்றம் செய்யாத 2 கனேடியர்களை  உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று ஜோ பைடன் சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கனடா பிரதமர்  ஜஸ்டின் ட்ரூடோ- வுடன் தனது முதல் அதிகாரபூர்வ சந்திப்பை தொடங்கினார். அப்போது பைடன் தனது முதல் சந்திப்பிலேயே சீனாவை எச்சரித்துள்ளார். ஏனென்றால் சீன தகவல் தொடர்பு நிறுவனமான Huawei-ன்  தலைமை செயல் அலுவலராக பணிபுரியும் Meng Wanzhou என்ற பெண் வங்கி மோசடி செய்ததால் அமெரிக்க அரசு அவர் மீது […]

Categories
உலக செய்திகள்

“தலைவனுக்கு தில்ல பாத்தியா..?” ஆவிகள் இடத்திலிருந்து வரமறுக்கும் தொழிலதிபர்… ஹோட்டல் திறக்க போறாராம்..!!

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியிலிருக்கும் சுரங்க பகுதியில் ஆவிகள் நடமாட்டம் இருந்தும் ஒரு இளம்தொழிலதிபர் அங்கிருந்து வர மறுக்கிறாராம்.  அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியிலிருக்கும் சுரங்கங்கள் நிறைந்துள்ள பகுதியில் இடம் ஒன்றை, டெக்ஸாஸில் வசிக்கும் 32 வயதுடைய இளம் தொழிலதிபரான Brent Underwood என்பவர் வாங்கியுள்ளார். இந்நிலையில் 1.4 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கிய அந்த இடத்தை பார்வையிட கடந்த மார்ச் மாதத்தில் Brent அங்கு சென்றிருக்கிறார். அப்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அங்கேயே ஒரு வாரம் தங்குவதற்கு Brent முடிவெடுத்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி…!! குழந்தைக்கு வாங்கப்பட்ட பொம்மை… உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த 5,000 போதை மாத்திரைகள்…!!

அமெரிக்காவில்  குழந்தைக்கு வாங்கிய பொம்மைக்குள் 5,000 போதை மாத்திரைகள் இருந்துள்ளது. அமெரிக்காவில் ஒரு தம்பதியினர் தங்கள் மகளுக்கு கடையில் பொம்மை வாங்கி கொடுத்துள்ளனர். அந்த பொம்மை ஏற்கனவே மற்றொருவர் பயன்படுத்தியது (second-hand) என்பதால் குழந்தையின் தாய் அதனை கழுவி சுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளார். பின்பு அந்த பொம்மையை கழுவும் பொழுது பொம்மைக்குள் இரண்டு கவர்கள் இருப்பதை அவர் கவனித்துள்ளார். பின்னர் தனது கணவனை அழைத்து கவருக்குள் பார்த்தபோது உள்ளே மாத்திரைகள் இருந்து உள்ளது. அவை போதை மாத்திரை  […]

Categories
உலக செய்திகள்

“பேரதிர்ச்சி”! சுக்கு நூறாக நொறுங்கிய கார்… காரிலிருந்து மீட்கப்பட்டது இந்த பிரபலமா…? அதிர்த்தியில் ரசிகர்கள்…!!

அமெரிக்காவில் பிரபல கோல்ப் விளையாட்டு வீரர் காரில் பயணித்த போது பயங்கர விபத்து ஏற்பட்டு கார் நொறுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவை சேர்ந்த டைகர் வுட்ஸ் என்ற பிரபல கோல்ப் விளையாட்டு வீரர் லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற நகரில் காரில் சென்று கொண்டிருந்தபோது ரோலிங் ஹில் எஸ்டேட் என்ற பகுதியில் அவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு வெளியை உடைத்துச் சென்று உருண்டு விழுந்ததில் நொறுங்கியது. இதுகுறித்து லாஸ் ஏஞ்செல்ஸ் கவுண்டி ஷெரிப் Allex villeneva […]

Categories
உலக செய்திகள்

சிறுவயதில்… “நண்பரால் இனரீதியாக அவமானப்படுத்தப்பட்ட ஒபாமா”… பதிலடி கொடுக்க அவர் என்ன செய்தார் தெரியுமா….?

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தனது இளமை பருவத்தில் நடத்த மறக்க முடியாத சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா “Renegades”  என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஒபாமா, அமெரிக்காவின் பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியரான Bruce Springsteen என்பவருடன் தனது இளமைப் பருவத்தில் நடந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். அதில், ” சிறுவயதில் நானும் என் நண்பனும் ஒன்றாக சேர்ந்து கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது எங்களுக்கு இடையே […]

Categories
உலக செய்திகள்

4 வருடத்தில் இவ்வளவு வருமானமா….? ட்ரம்ப் பற்றி வெளியான தகவல்…. !!

அமெரிக்காவின் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் 4 ஆண்டுகளில் ஈட்டிய வருவாயும் செய்த நன்கொடை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.  அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் 4 வருடங்கள் பதவி வகித்துள்ளார் அப்போது அவர் சுமார் 1.6 பில்லியன் டாலரை வருமானமாக சம்பாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 2016 மற்றும் 2020 இடையேயான காலக்கட்டத்தில் ட்ரம்ப் குழுமம் மற்றும் பிற வழிகளில் இருந்து இந்த வருமானத்தை ஈட்டி உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அவர்களே வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். மேலும் இவர் தனது […]

Categories
உலக செய்திகள்

“வந்தேமாதரம்” வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு…. அமெரிக்காவில் கார் பேரணி…!!

அமெரிக்காவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா வாழ் இந்தியர்கள் கார் பேரணி நடத்தியுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள உழவர்கள் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வணிகம், உழவர்கள் ஒப்பந்தத்தின் மீதான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள்,  இன்றியமையாத பொருள்கள் ஆகிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் […]

Categories
உலக செய்திகள்

உங்க சவகாசமே வேண்டாம்…! ப்ளீஸ் எல்லைக்குள்ள வராதீங்க…! முக்கிய தடை போட்ட பிரிட்டன் அரசு ..!!

ப்ரட்ட் மற்றும் விட்னி4000-112 இன்ஜின் கொண்ட போயிங் 777 விமானங்கள்  பிரிட்டன் வான்வெளியில் நுழைய தடை விதித்துள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான ப்ரட்ட் மற்றும் விட்னி 4000-112 இன்ஜின் கொண்ட போயிங் 777 பயணிகள் விமானம் நடுவானில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் விமானத்தை விமானிகள்  பத்திரமாக தரை இறக்கப்பட்டு  எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று விமான நிறுவனம் கூறியது. இந்நிலையில் பிரிட்டன் நாட்டின் வான்வெளியில் ப்ரட்ட் மற்றும் விட்னி 4000-112 இன்ஜின் கொண்ட […]

Categories
உலக செய்திகள்

“Dating app-ஆல் வந்த வினை”… 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… 2 ஆண்டுகளுக்கு பின்பு கம்பி எண்ணும் இளைஞன்…!!

15 வயது சிறுமியிடம்  இளைஞர் ஒருவர் தவறான முறையில் நடந்து கொண்ட சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தெரிய வந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Isaih Ramirez என்ற 20 வயது நபருடன் 15 வயது சிறுமி ஒருவர்  நட்புடன் பழகி உள்ளார். அதற்குப் பிறகு  கடந்த 2019ஆம் ஆண்டு Isaih Ramirez  அந்த சிறுமியுடன் டேட்டிங் சென்றுள்ளார். டேட்டிங் சென்ற இடத்தில் அவர் 15 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்ததுடன் தவறான முறையில் நடந்துள்ளார் .  இரண்டு […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா! 2 மாடி வீட்டை வண்டியில் ஏற்றி…. கொண்டு செல்லும் ஆச்சர்யம்…. வைரலாகும் வீடியோ…!!

விக்டோரியன் ஹோம் என்ற பழமையான வீட்டை வண்டியில் ஏற்றிச்சென்று மாற்றியமைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ என்ற பகுதியில் சுமார் 139 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டுள்ள கலை வேலைப்பாடுகள் கூடிய பழமையான வீடு ஒன்று அடியோடு பெயர்க்கப்பட்டது. பின்னர் அது சுமார் 482 மீட்டருக்கு அப்பால் உள்ள காலியான இடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. இந்த பழமையான வீடு நகரின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க வில்லை என்பதால் அந்த வீட்டை இடிக்காமல் […]

Categories
உலக செய்திகள்

இராணுவ தலைவர்கள் மீது அதிரடி நடவடிக்கை… பிரபல நாடு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

மியான்மர் ராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு தலைவர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி ப்ளிகேன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மியான்மரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஆளும் இராணுவத் தலைவர்கள் குழுவைச் சேர்ந்த விமானப் படைத் தளபதி ஜெனரல் மங் க்யாவ் மற்றும் மோ மைண்ட் டன் ஆகியோர் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவில் உள்ள அவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் […]

Categories
உலக செய்திகள்

தலைவரே…! என் கூட வாங்க…. சேர்த்து போகலாம்…. கிம்மை அழைத்த டிரம்ப்… வெளியான முக்கிய தகவல் …!!

வடகொரிய அதிபருக்கு அமெரிக்காவின் முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் விமானத்தில் லிஃப்ட் கொடுக்க விரும்பியது பிபிசி ஆவணப் படம் மூலம் தெரியவந்துள்ளது. அணு ஆயுத சோதனைகள் மூலம் உலக நாடுகள் மற்றும் வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் தேசமாக வடகொரியா திகழ்கிறது. இதன் காரணமாக வட கொரியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தும் சலைக்காமல் சாதூர்யமாக வடகொரிய அதிபர் கிம் சாங் சமாளித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அப்போது […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் 5 நாட்களுக்கு… “தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்”… ஜோ பைடன் அறிவிப்பு…!!

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முக்கிய முடிவு ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்  உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. மேலும் பல நாடுகளில் கொரோனா புதிதாக உருமாற்றம் அடைந்ததுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே கொரோனாவுக்கு  எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில்,   மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு  […]

Categories
உலக செய்திகள்

“டேய்…அங்க பார்ரா வீடு நகர்ந்து போகுது”…வீதியில் சுவாரஸ்ய நிகழ்வு…வியந்துபோன பொதுமக்கள்…!

அமெரிக்காவில் பழைமை வாய்ந்த மாடி கட்டிடம் ஒன்று வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு வண்டி மூலம் நகர்த்தப்பட்ட காட்சி அப்பகுதியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவில் உள்ள விக்டோரியன் ஹவுஸ் 139 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.  1882 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த வீடு, கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேறொரு இடத்திற்கு ட்ரக்கின் மூலம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதனை பலர் ஆர்வமுடன் வேடிக்கை பார்த்தனர். ஒரு குடியிருப்பு பகுதியை கட்ட இடம் […]

Categories
உலக செய்திகள்

நாங்க சண்டை போட்டா கண்டுக்காதீங்க…! அமெரிக்காவுக்கு சீனா நிபந்தனை …!!

சீனா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான வாங் யி அமெரிக்காவிடம் சீனாவிற்கு மற்ற நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளில் தலையிட வேண்டாம் என்று கூறியுள்ளார் . அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்கு எதிராக பல வர்த்தகத் தடைகளை விதித்திருந்தார். அந்த தடைகளை கைவிடுமாறு தற்போதைய அதிபரான ஜோ பைடன் நிர்வாகத்திற்கு சீன அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி  ஹாங்காங் ,தைவான் மற்றும் திபெத் ஆகிய நாடுகளுக்கு இடையேயான சீனாவின் பிரச்சினைகளில் […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் திக்.. திக்….! தீ பிடித்த விமாமன்ம்…. பதறி போன 237பேர்…. சுதாரித்த விமானிக்கு குவியும் பாராட்டு …!!

அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட விமானம் இஞ்சின் கோளாறால் பத்திரமாக தரையிறக்கப்பட நிலையில் அதில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது . அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங் ரக விமானம் சனிக்கிழமை அன்று 10 ஊழியர்கள் மற்றும் 237 பயணிகள் உட்பட ஹொனலுலுவிமான நிலையத்திற்கு புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடத்திலே வலதுபுறம் இஞ்சின் தீப்பற்றி எரிந்து அதன் பாகங்கள் ப்ரூம் பீல்டின் குடியிருப்பு பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை நெருங்கும் பேரழிவு… இயற்கை பேரிடர் அறிவிப்பு… ஜோ பைடன் வேதனை…!!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இயற்கைப் பேரிடர் பகுதியாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தென்மேற்குப் பகுதியில்  கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குளிர் மற்றும் பனிப்பொழிவு காணப்படுகிறது.  பனிப்புயலானது  அதிகமாக இருப்பதால் வீடுகளிலும் சாலைகளிலும் பனி மூடப்பட்டுள்ளது. அதிக பனிப்பொழிவால் மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பனிப்பொழிவினால் மின்சார உற்பத்தியானது முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் முடங்கி இருக்கும் சுமார் 30 லட்சம் மக்கள் வீடுகளில் மின்சாரமின்றி அவதிப்படுகின்றனர். குடிக்கும் […]

Categories
உலக செய்திகள்

“அட இது நல்லாயிருக்கே” தன் கர்ப்பத்தை சொல்ல…. கணவனுக்கு கொடுத்த சர்பிரைஸ்…. வைரல் வீடியோ…!!

மனைவி ஒருவர் தன்னுடைய கர்ப்பத்தை கணவரிடம் வித்தியாசமான முறையில் தெரிவிக்கும் விடியோவை 3 பில்லியன் பேர் கண்டு கழித்துள்ள்ளனர். அமெரிக்காவில் வசிப்பவர் Hayil. இவர் மிகவும் டிக் டாக்கில் மிகவும் பிரபலமானவர். இந்நிலையில் அண்மையில் தான் கருவுற்றிருப்பதை சோதனை செய்து அவர் தன்னுடைய கர்ப்பத்தை உறுதி செய்துள்ளார். இதையடுத்து இந்த சந்தோசமான விஷயத்தை தன்னுடைய கணவருடன் சொல்ல நினைத்த அவர் சாதாரணமாக சொல்லாமல் அதை சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சொல்ல நினைத்துள்ளார். இதையடுத்து அவர் தன்னுடைய கணவருக்கு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் 60 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் முதியவர்… ஜெர்மனிக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவு…!

அமெரிக்காவில் 60 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் முதியவர் தற்போது ஜெர்மனிக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 60 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ப்ரீட்ரிக் பெர்கர் என்ற 90 வயது முதியவர் ஜெர்மனிக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தர விடப்பட்டுள்ளது. ஏனென்றால், அவர் கடந்த 1945ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள சித்திரவதை முகாம் ஒன்றில் காவலராக பணியாற்றி உள்ளார். அந்த சித்ரவதை முகாமில் 40 ஆயிரம் கைதிகள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து ப்ரீட்ரிக் பெர்கர் தெரிவித்ததாவது, தான் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க எல்லையில் “கொரோனா சோதனை”… விதிகளை மீறினால் “சிறை”… கனடா அதிரடி நடவடிக்கை…!

அமெரிக்கா எல்லைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை கனடா அரசு விதித்துள்ளது. நாடு முழுவதும் புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க எல்லைகளில் சோதனைகளை வலுபடுத்த கனடா அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அமெரிக்கா-கனடா  நுழைவு துறைமுகங்களில் பயணிகளுக்கு ஆன்சைட் ஸ்வாப் சோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கனடாவுக்குள் நுழைவதற்கு 72 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்ட கோவிட்-19க்கு  எதிர்மறையான சான்றிதழ்களை கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சோதனையின்போது யாருக்காவது கோரோனோ இருப்பது […]

Categories
உலக செய்திகள்

“செம ட்விஸ்ட்”…! இப்படி யாரும் “கருவுற்றத” சொல்லி இருக்க மாட்டாங்க…பல மில்லியன் மக்களை கவர்ந்த “வைரல் வீடியோ”…!

அமெரிக்காவில் கணவரிடம் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மனைவி சொன்ன போது எடுக்கபட்ட வீடியோ தற்போது பல மில்லியன் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவில் உள்ள அரிஸோனாவை சேர்ந்த ஹெய்லி பேஸ் என்பவர் டிக்டாக்கில் மிகவும் பிரபலம் வாய்ந்தவர். இவர் தான் கருவுற்றிருப்பதை அறிந்து கொள்ளும் சிப் மூலம் வீட்டில் சோதனை செய்தார். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார். இந்த சந்தோசமான விஷயத்தை அவர் தனது கணவரிடம் சாதாரணமாக சொல்லாமல் ஒரு சர்ப்ரைஸ் […]

Categories
உலக செய்திகள்

உறைந்த குளத்தில் தவறி விழுந்த 6 வயது சிறுமி… கண்ணிமைக்கும் நேரத்தில் அண்ணன் எடுத்த முடிவு… உயிரிழந்த பரிதாபம்….!

அமெரிக்காவில் உறைந்த குளத்தில் தவறி விழுந்த தங்கையை காப்பாற்ற குதித்த அண்ணன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் அபிகாயில் லக்கெட் என்ற 6 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் சகோதரர்களுடன் வீட்டின் அருகே உள்ள உறைந்த குளத்தின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது சிறுமி திடீரென குளத்துக்குள் தவறி விழுந்துள்ளார். அவருடைய 10 வயது சகோதரன் பெஞ்சமின் சகோதரியை காப்பாற்ற சிறிதும் யோசிக்காமல் குளத்தில் குதித்தான். பிறகு இருவரும் தண்ணீரில் இருந்து வெளியே […]

Categories
உலக செய்திகள்

“நம்மை நாம் நம்ப வேண்டும்” அப்போது பொது கழிப்பறையில்…. இப்போது சொகுசு பங்களாவில்…. நல்ல எடுத்துக்காட்டு…!!

நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும் ஒரு வாலிபரின் வாழ்கை கதையை இப்போது பார்க்கலாம். வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் வாழ்க்கையில் வறுமையை மட்டுமே பார்த்து வளர்ந்து வந்த வாலிபர் ஒருவர், அவருடைய இடைவிடா முயற்சியின் காரணமாக சொகுசு பங்களா, லம்போர்கினி கார் என்று அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து கோடீஸ்வரர் ஆகியுள்ளார். அமெரிக்காவின் விர்ஜினியாவில் வசிப்பவர்  பிராண்டன் காண்டி. இவர் சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால் தாயின் பாதுகாப்பில் வளர்ந்துள்ளார். இவருடைய குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கி அதனுடையே […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் ராணுவ ஜெட் விமானம் விபத்து… இரு விமானிகள் உயிரிழப்பு…!!

அமெரிக்காவில் ராணுவ ஜெட் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 14 ஆவது படைப் பிரிவை சேர்ந்த T-38  ரக விமானத்தில்  விமானிகள் நேற்று பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போதுமிசிசிப்பியில் உள்ள கொலம்பஸ் விமானத்தளத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் புளோரிடாவின் டல்லாஹஸ்ஸிக்கு செல்வதாக இருந்தது. இந்நிலையில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இந்த விமானத்தில் பயணித்த இரு விமானிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் விவரங்களை விமானப்படை வெளியிடவில்லை

Categories
உலக செய்திகள்

“கொரோனா தடுப்பூசிக்காக வயதான வேடம்”…. வசமாக சிக்கிய பெண்கள்…?

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் ஒர்லாண்டோவில் கொரோனா  தடுப்பு மருந்தை பெறுவதற்காக வயதானவர்களை போல வேடமிட்ட பெண்களை சுகாதாரத்துறையினர் அடையாளம் கண்டு பிடித்தனர். அந்த பெண்கள் 24 மற்றும் 44 வயது என்பதை கண்டறிந்தனர். பெண்கள் இருவரும் தங்களது இரண்டாவது கொரோனா தடுப்பு மருந்தை பெற வந்திருந்த போது கையும் களவுமாக சிக்கி இருந்தன. இருந்தாலும் அவர்கள் இருவரும் தங்கள் முதல் தடுப்பு மருந்து எப்படி பெற்றனர் என்பது புரியாத புதிராக இருந்து வருகிறது. இது எவ்வாறு நடந்தது […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் குளோனிங் மூலம்… அரியவகை உயிரினம் உருவாக்கம்…!!

அமெரிக்காவில் க்ளோனிங் மூலம் அரிய வகை உயிரினத்தை உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் அழிந்து வரும் விலங்குகளில் ஒன்றான ஃபெரெட் என்ற விலங்கை குளோனிங் முறையில் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். குளோனிங் முறையில் செம்மறி ஆடு, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் உருவாக்கப்பட்ட நிலையில் தற்போது மரநாய் இனத்தை சேர்ந்த ஃபெரெட் என்ற விலங்கு உருவாக்கப்பட்டுள்ளது. மீன் மற்றும் வனவிலங்கு சேவை மையத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் ஃபெரெட்க்கு எலிசபெத் ஆண் என பெயரிடப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு […]

Categories

Tech |