Categories
உலக செய்திகள்

‘நான் எதுவும் செய்யவில்லை’… ராணுவ அதிகாரியை தாக்கிய போலீசார்… இணையதளத்தில் வைரலாகும் வீடியோ…!!!

எவ்வித விசாரணையும் இல்லாமல் தாக்கிய போலீசார் மீது கறுப்பின ராணுவ அதிகாரி வழக்கு தொடர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி சேவையில் இருக்கும் கறுப்பின ராணுவ இரண்டாம் லெப்டினன் கரோன் நிசாரியோ என்பவர் அவரது வளர்ப்பு நாயை அழைத்துக்கொண்டு காரில் சென்றுள்ளார். அவர் ஓட்டி வந்த காரில் நம்பர் பிளேட் பொருத்தப்படவில்லை. எனினும், அவர் தற்காலிகமாக ஒரு நம்பர் பிளேட்டை பார்வைக்காக வைத்திருந்தார். இந்நிலையில் இரண்டு போக்குவரத்து காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

தோழியின் தந்தையை காதலிக்கும் இளம்பெண்…. தங்களது காதல் புனிதமானது என உருக்கம்…. இருவரின் சந்திப்பு எப்படி…?

அமெரிக்காவில் தோழியின் தந்தையை இளம்பெண் காதலிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நடாலிநோபிள்(19)என்ற இளம்பெண்ணும் டென்னிஸ் பயிற்சியாளர் பாபி லிண்ட்சே(48)என்பவரும் உயிருக்கு உயிராக காதலித்து வருகின்றனர். இவர்களின் காதல் கதை மிகவும் வித்தியாசமானது. இதுகுறித்து நடாலி கூறுகையில் கடந்த 2015ஆம் ஆண்டு பாபியிடம் டென்னிஸ் பயிற்சியாளராக சேர்ந்தேன் என்றும் அப்போது தான் அவரை முதலில் தெரியும் எனவும் கூறினார். மேலும் நானும் பாபியின் மகளும் டென்னிஸ் பயிற்சி பெற்று வந்தோம் என்றும் அதனால் அவளும் நானும் […]

Categories
உலக செய்திகள்

பள்ளி பேருந்தில் தனியாக இருந்த மாணவி.. சில்மிஷத்தில் ஈடுபட்ட டிரைவர்.. மாணவியின் துணிச்சல்..!!

அமெரிக்காவில் பள்ளி பேருந்தில் தனியாக இருந்த மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அமெரிக்காவில் உலகில் ஹில்ஸ்பாரோ கவுண்டி என்ற பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் ரோனால் ஜான்சன் என்ற 45 வயதுடைய நபர் பேருந்து ஓட்டுநராக பணியாற்றுகிறார். இவர் பள்ளிப் பேருந்தில் ஒரு மாணவி மட்டும் தனியாக இருந்த சமயத்தில் அவரிடம் தவறாக நடந்துள்ளார். இது குறித்து அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை கைது செய்துவிட்டனர். இதுகுறித்து ஒரு அதிகாரி […]

Categories
உலக செய்திகள்

வீடியோ கேம் விளையாடும் குரங்கு… எலான் மஸ்க் வெளியிட்ட வீடியோ….!!!

எலான் மஸ்க் என்று கூறியதும் நினைவுக்கு வருவது டெஸ்லா, ஸ்பேஷ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயர்கள்தான். MindPong வீடியோ கேம் விளையாடும் குரங்கின் வீடியோ ஒன்றை எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நியூராலிங்க் எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை எலன் மாஸ்க் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் ஆனது மனித மற்றும் விலங்குகளின் மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. அதன்படி […]

Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ!”.. JCB இயந்திரத்தில் சிறுவர்களை அழைத்துச்சென்ற தந்தை.. 2 குழந்தைகள் பலியான சோகம்..!!

அமெரிக்காவில் சிறுவர்களை மண் அள்ளும் இயந்திரத்தில் கொண்டு சென்றதால் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள Roanoke என்ற பகுதியில் மண் அள்ளுவதற்கு பயன்படுத்தும் ஜேசிபி இயந்திரத்தில் விஜேந்தர் என்ற 40 வயதுடைய நபர், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களை  அழைத்து சென்றுள்ளார். அதில் மண் அள்ளக்கூடிய பகுதியில் அவரின் குழந்தைகள் சிவ்ராஜ்(11) மற்றும் சோனாக்ஷி(7) இருந்துள்ளார்கள். அந்த சமயத்தில் என்ன நிகழ்ந்ததோ மண் அள்ளக்கூடிய பகுதியை விஜேந்தர் கீழே இறங்கியிருக்கிறார். அப்போது அதிலிருந்த இரண்டு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசிகள்…. எதிர்வினைகள் என்ன….? ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள தேசிய சுகாதார நிறுவனம்…!!

அமெரிக்க சுகாதார நிறுவனம் மாடர்னா மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளால் ஏற்படும் எதிர்விளைவுகளை கண்டறிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவில் மாடர்னா மற்றும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பிறகு ஒவ்வாமை பிரச்சனைகள் ஏற்பட்டதால் எதிர்விளைவுகளை கண்டறிய அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. இது குறித்து அமெரிக்க சுகாதார நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜனவரி மாதத்தில் ஒரு மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதில் 11.1 என்ற விகிதத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

மருத்துவர் கொலை…. குடும்பம் என்ன பாவம் செய்தது….? முன்னாள் கால்பந்து வீரரின் வெறிச்செயல்…!!

முன்னாள் கால்பந்து வீரர் மருத்துவரின் குடும்பத்தையும் உதவியாளரையும் கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அமெரிக்கா தென் கரோலினா பகுதியில் மருத்துவரின் குடும்பம் மற்றும் மருத்துவரின் உதவியாளரை கொலை செய்தது முன்னாள் கால்பந்து நட்சத்திரம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து யார்க் கவுண்டி அலுவலகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் முன்னாள் கால்பந்து வீரர் ஆதம் மருத்துவரின் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார்கள் என்றும் அவர் மருத்துவர் ராபர்ட் லெஸ்லி(70) அவரது மனைவி பார்பரா லெஸ்லி(69) அவரது […]

Categories
உலக செய்திகள்

யாரோ துப்பாக்கியோடு விரட்டுவதாக குழந்தையுடன் ஓடிய பெண்.. காவல்துறையினர் வனப்பகுதியில் பார்த்த காட்சி..!!

அமெரிக்காவில் வனப்பகுதியில் ஒரு பெண் தன்னை துப்பாக்கியுடன் யாரோ துரத்துவதாக கூறிக்கொண்டு கையில் குழந்தையுடன் ஓடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் நேற்று காலை 8:30 மணிக்கு கையில் குழந்தையுடன் ஒரு பெண் வனப்பகுதியில் தன்னை ஒருவர் துப்பாக்கியோடு விரட்டி வருவதாக கூறிக்கொண்டு ஓடியுள்ளார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக கலிபோர்னியாவின் ஓக்லாண்ட் பகுதி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வனப்பகுதியில் தேடிப் பார்த்தபோது ஒரு புதருக்குள் அந்த பெண் மறைந்திருந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“அது என் விருப்பம்”.. பேருந்தில் கர்ப்பிணியிடம் சில்மிஷம் செய்த நபர்.. கணவர் செய்த செயல்..!!

அமெரிக்காவில் இளம் கர்ப்பிணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒரு நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா என்ற நகரில் 19 வயதுடைய இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது அவரின் பின் நின்றுகொண்டிருந்த பேட்ரிக் டெரி என்ற நபர் அந்த பெண்ணின் மீது கை வைத்ததோடு தவறாக நடந்திருக்கிறார். இதனால் கோபமடைந்த அந்த பெண் அவரை எச்சரித்துள்ளார். ஆனால் அவரோ, “அது என்னுடைய விருப்பம் நான் என்னவேண்டுமானாலும் செய்வேன். வேண்டுமென்றால் உன்னை […]

Categories
உலக செய்திகள்

வேகமா போனது தப்பு…. சீட் பெல்ட்டும் போடல…. பரிதாபமாக போன உயிர்…!!

அமெரிக்காவில் முதியவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடா ஒன்ராறியோவில் வில்லியம் வில்காக்ஸ்(65) என்பவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் அமெரிக்கா கேஸ் சிட்டி சாலையில் ஏப்ரல் 5ம் தேதி செவ்வாய்க்கிழமை 11 மணியளவில் செமி ட்ராக்டர் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மரத்தின் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் வில்லியம் வில்காக்ஸ் டிராக்டரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார் என்றும் சீட் பெல்ட் அணியாதது தான் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதித்தவர்களுக்கு ஏற்படும் விளைவுகள்.. ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்..!!

கொரோனாவால் கடந்த 6 மாதங்களில் பாதிப்படைந்தவர்களுக்கு கடும் பக்க விளைவுகள் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.   கொரோனாவால் கடந்த ஆறு மாதங்களாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மனச்சோர்வு, மன நோய், பக்கவாதம், பைத்தியம் போன்றவை ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சித் தகவலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதி நபர்களுக்கு மனரீதியாகவும் உளவியல் அல்லது நரம்பியல் பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் மருத்துவமனை மற்றும் தீவிர சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி பாஸ்போர்ட் வழங்க தடை… அமெரிக்க வெள்ளை மாளிகை உத்தரவு…!!!

 கொரோனா  பாதிப்பால் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது  சர்வதேச அளவில் கட்டுப்பாடுகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. உலக நாடு முழுவதும் கொரோனா  பாதிப்பில் சிக்கிக்கொண்டு இருந்த நிலையில் சர்வதேச அளவில் விமான போக்குவரத்திற்கு  முழுமையாக தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பல கட்டுபாடுகளுடன் விமானத்தை இயக்குவதற்கு முடிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சர்வதேச அளவில் பயணம் செய்யும் பயணிகள் இதனைத் தொடர்ந்து சர்வதேச அளவில் பயணம் செய்யும் பயணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட விவரங்கள் […]

Categories
உலக செய்திகள்

என் பிறந்தநாளிற்கு வந்த அப்பா எல்லாரையும் கொன்னுடாரு.. பதற்றத்துடன் காவல்துறையினரை அழைத்த சிறுமி..!!

அமெரிக்காவில் 9 வயதுடைய சிறுமி ஒருவரின் பிறந்தநாளன்று அவரின் தந்தை மொத்த குடும்பத்தையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் அவசர உதவி குழுவினரை தொடர்பு கொண்டு, என் பிறந்தநாளிற்காக வீட்டிற்கு வந்த அப்பா அனைவரையும் சுட்டு விட்டார் என்று பதற்றமாக கூறியுள்ளார். இதனால் உடனடியாக நியூயார்க்கில் இருக்கும் அந்த குறிப்பிட்ட முகவரிக்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர். அதன் பிறகு காவல்துறையினர் அந்த வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அப்போது Rasheeda Barzey (45) […]

Categories
உலக செய்திகள்

கடற்கரையில் ஒதுங்கிய கண்ணிவெடி.. விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள்.. அதன் பின் நடந்த சம்பவம்..!!

அமெரிக்காவின் கடற்கரையில் ஒதுங்கிய கண்ணிவெடிகுண்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா கடற்கரையில் ஒரு பொருள் கரையொதுங்கியுள்ளது. அந்த பொருளை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பதறிக்கொண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதாவது அந்த மக்கள் கடலுக்கு அடியில் பயன்படுத்தக்கூடிய கண்ணிவெடியை தான் பார்த்துள்ளார்கள். இதனால் உடனடியாக அந்த பகுதிக்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர். அதன் பின் அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், அது போலியானது என்று தெரியவந்துள்ளது. அதாவது வெடிமருந்து நிரப்பப்படாமல் கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக […]

Categories
உலக செய்திகள்

நாடாளுமன்றத்தில் மர்ம நபர் தாக்குதல்…உயிரிழந்த பாதுகாப்பு அதிகாரி…அதிபர் ஜோ பைடன் …!!!

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கேபிடால் கட்டிடத்தின் முன்பு மர்மநபர் தாக்கியதில் அதிகாரி உட்பட சக ஊழியர்கள் உயிருக்கு போராடி வருகின்றனர். அமெரிக்கா அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் முன்பு மர்ம நபர் ஒருவர் செரான் என்ற நீல நிற காரில் வேகமாக வந்து பாதுகாப்பு பணியில் இருந்த 2 அதிகாரிகளின் மீது மோதியதால் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். மேலும் காரிலிருந்து ஓட்டுநர் கீழே குதித்து அதிகாரியை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும்  உயிரிழந்தவர் 18 […]

Categories
உலக செய்திகள்

ரத்த வெள்ளத்தில் 3 சடலங்கள்…. மூன்று நாட்களாக தவித்த குழந்தைகள்…. வெளியான பகிர் தகவல்…!!

அமெரிக்காவில் பெற்றோர் மற்றும் சகோதரன் கொலை செய்யப்பட்ட ரத்தவெள்ளத்தில் 2 குழந்தைகள் 3 நாட்கள் கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா வர்ஜீனியாவில் மைக்கேல் கோல்மன் என்பவர் அவரது மனைவி ரேச்சல்ஒசுனா(34) அவரது மகன் கைரஸ்ஒசுனா(14) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி கோல்மன்,அவரது மனைவி மற்றும் 14 வயது மகனையும் கழுத்தறுத்து ஐவர் கொண்ட கும்பல் ஒன்று கொலை செய்துள்ளது. இது குறித்து விசாரணை […]

Categories
உலக செய்திகள்

14 அடி சுவரிலிருந்து கீழே போடப்பட்ட குழந்தைகள்.. பதற வைக்கும் வீடியோ காட்சிகள்.. கடத்தல்காரர்களை தேடும் பணி தீவிரம்..!!

மெக்சிகோ எல்லையில் உள்ள 14 அடி சுவரிலிருந்து இரண்டு குழந்தைகள் அமெரிக்காவிற்குள் வீசப்படும் காட்சிகள் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  மெக்ஸிகோவின் எல்லையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நள்ளிரவு கடும் இருட்டில் சுமார் 14 அடி உயரம் கொண்ட இரண்டு குழந்தைகள் அமெரிக்காவில் வீசப்படும் பகீர் வீடியோ வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவின் எல்லையை கேமரா மூலமாக கண்காணிக்கும் அலுவலகத்தில் இருந்த நபர் இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். https://video.dailymail.co.uk/preview/mol/2021/03/31/5010510747327772159/636x382_MP4_5010510747327772159.mp4 அவர் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் […]

Categories
உலக செய்திகள்

தலையில் கருப்பு முடி, முகக்கவசம்…. “APRIL FOOL” அதிபர் மனைவி இப்படி செய்யலாமா…? அதிர்ந்த நிருபர்கள்…!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் விமான நிலையத்தில் பிராங்க் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் மனைவி ஜில் பைடன் பிராங்க் செய்துள்ளார். அவர் கருப்பு நிற முடியை வைத்துக் கொண்டும், முகக்கவசம் அணிந்து கொண்டும் கலிபோர்னியாவில் இருந்து வாஷிங்டனுக்கு செல்லும் விமானத்தில் “ஜாஸ்மின்” என்ற பணிப்பெண் போல் வேடமிட்டு வந்துள்ளார். அப்போது விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் இனிப்பு வழங்கியுள்ளார். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

2 டிரில்லியன் டாலர் செலவில் புதிய திட்டம்…. ஜோ பைடன் அறிவிப்பு…!!!

கொரோனா பாதிப்பின் முதல் இடத்தில் உள்ள அமெரிக்கா தற்போது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது. கொரோனா பாதிப்பு கடந்த வருடம் நாடு முழுவதும் பரவியது. இதில் அமெரிக்கா அதிக பாதிப்பை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக  அமெரிக்கா அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும் பாதிப்பை கட்டுப்படுத்துவதுடன் அதிபர் ஜோ பைடன் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பல புதிய திட்டங்களை அறிமுகபடுத்த உள்ளார். இதனை தொடர்ந்து அமெரிக்காவில் வேலைவாய்ப்பு மற்றும் உள்கட்டமைப்பு […]

Categories
Uncategorized உலக செய்திகள்

அமெரிக்காவில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம் ..!!வெளியான அதிர்ச்சி தகவல் ..!!

அமெரிக்காவில் 9 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை பற்றி அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது . அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின்  தென்கிழக்கில் உள்ள ஆரஞ்சு நகரில்  வியாழக்கிழமை அன்று மர்ம நபர் ஒருவரால்  9 வயது சிறுவன் உட்பட 4 பேர் சரமாரியாக சுட்டுக் கொல்லப்பட்டனர். சமீபத்தில் 44 வயதான aminadab gaxiola gonzalez  துப்பாக்கி சூடு நடத்தியதாக அவர் காயமடைந்த நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் […]

Categories
உலக செய்திகள்

15 வயது சிறுமியை துன்புறுத்திய இளைஞர்.. திரைப்பட பாணியில் விரட்டி பிடித்த காவல்துறையினர்..!!

அமெரிக்காவில் 15 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட இளைஞரை ஒரு வருடத்திற்கு பின் போராடி காவல்துறையினர் கைது செய்துவிட்டனர்.  அமெரிக்காவில் உள்ள லிங்கோல்மஓ என்ற பகுதியில் வசிக்கும் 25 வயது இளைஞர் அகமது பக்லுலி. இவர் அங்குள்ள பூங்காவிற்கு 15 வயதுடைய ஒரு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியுள்ளார். இச்சம்பவம் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நடந்துள்ளது. அன்றிலிருந்து அகமதுவை கைது செய்ய காவல்துறையினர் பல வழிகளில் போராடி திணறி வந்தனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

“அதிகரிக்கும் வன்முறை” வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு… போலீசார் கூறுவது என்ன…?

அமெரிக்காவின் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஆரஞ்சு நகரில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 202W லிங்கன் அவென்யூவில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றது என்றும்  அதிகாரிகள் சென்ற […]

Categories
உலக செய்திகள்

ஹரி-மேகனின் நீண்ட நாள் ஆசை.. வரலாற்றில் இடம் பிடிப்பார்களா..? அதிகரிக்கும் எதிர்பார்ப்புகள்..!!

பிரிட்டன் இளவரச தம்பதி ஹரி-மேகன் தங்களுக்கு பிறக்கவுள்ள இரண்டாம் குழந்தையை அமெரிக்காவில் உள்ள தங்களின் பெரிய வீட்டில் பெற்றெடுக்க முடிவெடுத்துள்ளனர்.  பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் Monecitoவில் கடந்த வருடத்தில் சுமார் 14.5 மில்லியன் டாலர் மதிப்புடைய மிகப்பிரம்மாண்டமான வீட்டை வாங்கினர். இந்நிலையில் இரண்டாவதாக அவர்களுக்கு பிறக்க இருக்கும் குழந்தையை அந்த வீட்டில் பெற்றெடுக்க முடிவு செய்துள்ளனர். அதாவது அந்த குழந்தை அமெரிக்காவில் பிறக்கும் பட்சத்தில், பிரிட்டனின் அரச […]

Categories
உலக செய்திகள்

இறப்பதற்கு முன் போலீஸ் அதிகாரிகளிடம் கெஞ்சிய ஜார்ஜ் பிளாய்டு …வைரலாக பரவி வரும் வீடியோ காட்சிகள் ..!!

அமெரிக்காவை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு இறப்பதற்கு முன் போலீஸ் அதிகாரிகளிடம்’ நான் கெட்டவன் அல்ல, ப்ளீஸ் ‘என்று கெஞ்சிய காட்சிகள் வெளியாகியுள்ளது . அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜார்ஜ் பிளாய்டு மரணம் போலீசுக்கும்,இனவாதத்திற்கும் இடையில் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தியது. தற்போது மிநீயாபொலிஸ்  நீதிமன்றத்தில் அவர் கொல்லப்பட்டதற்கான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றது. மேலும் தாமஸ் லேன் ஜே, அலெக்சாண்டர் குயெங் மற்றும் டோ தோ ஆகியோர் தான்  ஜார்ஜை கைது செய்த அதிகாரிகள். அவர்களின்  உடம்பில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் […]

Categories
உலக செய்திகள்

சிறுவர்களுக்கு முழு பலன் அளிக்கும் தடுப்பூசி.. கொரோனா தொற்று இல்லை.. மகிழ்ச்சியான தகவல்..!!

12-15 வயதுடைய சிறுவர்களுக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி 100% பலனளித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.  உலகில் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி திட்டம் முதியவர்களுக்குதான் அதிகமாக செயல்பட்டு வருகின்றது. பிரிட்டனில் சுமார் 80 வயதிருக்கும் அதிகமான முதியவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அதன்பின்பு அனைத்து குடிமக்களுக்கும் படிப்படியாக அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை 16 வயதிற்கு அதிகமான நபர்களுக்கு செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதைவிட குறைந்த வயது நபர்களுக்கு தற்போது […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் 7 வயது சிறுவன் மீது குற்றசாட்டு ..வெளியான அதிர்ச்சி தகவல் ..!!

அமெரிக்காவில் 7 வயது சிறுவன் மீது வன்புணர்வு குற்றம் சாட்டப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 7 வயது சிறுவன் மீது வன்புணர்வு குற்றசாட்டை  போலீசார் பதிவு செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் சிறுவன் என்பதால் அவன் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் குறித்த செய்திகளை போலீசார்  வெளியிடவில்லை. இதனையடுத்து குயின்ஸ் பகுதியை சேர்ந்த சட்டத்தரணியான அந்தோணி மர்டோன் சிறுவன் மீது குற்றச்சாட்டு வைத்ததற்காக அதிகாரிகளை வன்மையாக கண்டித்துள்ளார். மேலும்  சிறுவனுக்கு தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாது […]

Categories
உலக செய்திகள்

வீரர்களோடு புறப்பட்ட விமானம்…. திடீரென என்ன நடந்தது…? அவசரமாக தரையிறங்கிய விமானிகள்…!!

அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட விமானத்தின்  மீது பறவை மோதியதால் அதன் எஞ்சின் செயலிழந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கூடைப்பந்து அணி வீரர்கள் உதாஹஜஸ். இவர்கள் மெம்பிஸ் க்ரிஸ்லிஸ் அணியுடன் விளையாடுவதற்காக டெல்டா 8944 என்ற விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த விமானம் சால்ட் லேக் நகர விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென எதிரே வந்த பறவையின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தின் எஞ்சின் செயலிழந்துள்ளது. இதனால் விமானிகள் அவசர […]

Categories
Uncategorized உலக செய்திகள்

அமெரிக்காவில் டிக்டாக் சவாலால் மூளை சாவடைந்த சிறுவன் ..அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ..ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர் ..!!

அமெரிக்காவில் டிக்டாக் சவாலை முயற்சித்த சிறுவன் மூளைச்சாவடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 12 வயதான யோசுவா ஹைலீஸஸ் என்ற சிறுவன் டிக் டாக் சவால் ஒன்றை முயற்சித்து  மார்ச் 22ஆம் தேதி குளியலறையில் பேச்சு மூச்சின்றி கிடந்ததை அவனின் இரட்டை சகோதரர்  கண்டு பெற்றோருக்கு கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர் யோசுவா டிக் டாக் சவாலின்  ஒரு பகுதியாக ஷூலேஸால் மூச்சு திணற வைத்துள்ளதாக கூறுகின்றனர் . மேலும் 3 நாட்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவருக்கு ஏற்பட்ட பக்க விளைவு ..எந்த தடுப்பூசி நிறுவனம் தெரியுமா ?

கொரோனா தொற்றுக்கான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை  போட்டுக் கொண்ட அமெரிக்கர் ஒருவருக்கு அதிபயங்கர பக்க விளைவு ஏற்பட்டுள்ளது . அமெரிக்காவின் விர்ஜினியாவை சேர்ந்த 74 வயதான ரிச்சர்ட் என்பவர் கொரோனா தொற்றுக்கான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை இம்மாதம் மார்ச் 6ஆம் தேதி செலுத்திக் கொண்டுள்ளார் .தடுப்பூசி போட்டுக் கொண்ட நான்கு நாட்களில் அவர் உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு சிவப்பு நிற பெரும் புள்ளிகள்கள் தோன்றியுள்ளது .உடம்பு முழுவதும் சிவப்பு நிறமாக […]

Categories
உலக செய்திகள்

ஆசியர்கள் மீதான தாக்குதல்…. கறுப்பினத்தவரின் வெறிச்செயல்…. வெளியான வீடியோ காட்சி…!!

அமெரிக்காவில் உள்ள ஆசியர்கள் மீது கறுப்பினத்தவர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த கருப்பினத்தவர்கள் கடந்த சில நாட்களாக ஆசியர்களின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆசிய பெண் ஒருவர் மன்ஹாட்டன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கருப்பினத்தவர் அவரை எட்டி உடைத்துள்ளார். இதனால் அந்தப் பெண் நிலை தடுமாறி கீழே விழுகின்றார். அதன்பின்னர் கறுப்பினத்தவர் திரும்பவும் அந்த பெண்ணை காலால் பலமுறை எட்டி மிதித்து விட்டு அங்கிருந்து […]

Categories
உலக செய்திகள்

நடந்து வந்த பெண்ணை கொடூரமாக தாக்கிய நபர்.. இரக்கமின்றி வேடிக்கை பார்த்த செக்யூரிட்டிகள்.. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் ரோட்டில் நடந்துகொண்டிருந்த 65 வயது பெண்மணியை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் என்ற பகுதியில் 65 வயதுடைய பெண் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரின் எதிரில் ஒரு கருப்பினத்தவர் வந்து அந்த பெண்மணியை கடுமையான வார்த்தைகளால் திட்டியதுடன் கொடூரமாக அடித்து உதைத்துள்ளார். இச்சம்பவம் அருகில் இருந்த ஒரு கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. https://video.dailymail.co.uk/preview/mol/2021/03/30/7591464912853221887/636x382_MP4_7591464912853221887.mp4 மேலும் அந்த நபர் மனிதாபிமானம் இல்லாமல் அந்தப் பெண்ணை ஓங்கி […]

Categories
உலக செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட சென்ற தம்பதிகள்…. சாலையில் சரிந்து விழுந்த மரம்…. ஐந்து குழந்தைகளை அனாதையாக்கிய கோர விபத்து….!!

அமெரிக்காவில் சாலையில் மரம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த தம்பதிகள் ஜேகேவுட்ருப் (36 வயது) – ஜெசிக்கா (45 வயது). இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜெசிக்காவின் 45வது பிறந்தநாள் வந்துள்ளது. இந்த பிறந்தநாளை கலிஃபோர்னியா கடற்கரையில் வைத்து கொண்டாடுவதற்காக தம்பதிகள் இருவரும் அப்பகுதிக்கு காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது திடீரென சாலையின் ஓரமாக இருந்த 175 அடி உயரமுடைய மரம் முறிந்து […]

Categories
உலக செய்திகள்

சிறுவனை துன்புறுத்தி தெருவில் வீசி சென்ற நபர்.. சிசிடிவி காட்சியில் வெளியான பதற வைக்கும் காட்சி..!!

அமெரிக்காவில் ஒரு சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து வாகனத்திலிருந்து தூக்கி வீசிச்சென்ற /நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  அமெரிக்காவிலுள்ள மியாமி  என்ற பகுதியில் இருக்கும் Brownsville பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று மதியம் 2 மணியளவில் கருப்பு நிறத்திலான ஒரு வாகனத்திலிருந்து ஒரு சிறுவன் கீழே விழுந்துள்ளார். அதன் பின்பு அச்சிறுவன் எழுந்து உடல் முழுவதும் இரத்தக்காயங்களுடன் தெருவில் நடந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் அந்த வழியாக சென்ற இருவர் அச்சிறுவனுக்கு உதவி செய்ய நினைத்துள்ளனர். அதன் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி… ஏப்ரல் 19ம் தேதிக்குள்… அதிபர் அதிரடி அறிவிப்பு…!!!

அமெரிக்காவில் மிக விரைவில் 90%மக்களுக்கு  கொரோனா  தடுப்பூசி போடும் பணி நிறைவடையும் என அந்நாட்டு  அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு  எதிரான தடுப்பூசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் ஹெலிகாப்டர்… கீழே விழுந்து நொறுங்கி விபத்து …5 பேர் பலியான சோகம் …!!!

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்ததில், 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவிலுள்ள  அலாஸ்கா மாநிலத்திலிருந்து ,நேற்று  6 பேருடன் ஹெலிகாப்டர் ஒன்று  புறப்பட்டு   சென்றது . ஹெலிகாப்டர் ஆன்கரேஜ் என்ற இடத்தின் வழியாக சென்றுள்ளது . அப்போது திடீரென்று நிலைதடுமாறிய ஹெலிகாப்டர்,  கட்டுப்பாட்டை இழந்துள்ளது . இதனால் ஹெலிகாப்டர்  நிலைதடுமாறி கீழே விழுந்ததில்  விபத்து ஏற்பட்டது  . கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், மிக வேகமாக கீழே விழுந்ததில்,நொறுங்கியது. இந்த ஹெலிகாப்டரின் பயணம் செய்த […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க முன்னாள் அதிபரின் வீட்டில் சோகம்.. பராக் ஒபாமாவின் பாட்டி மரணம்..!!

அமெரிக்க முன்னாள் அதிபரின் வளர்ப்பு பாட்டி தன் 99 வயதில் இன்று மருத்துவமனையில் காலமானார்.  அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவின் 99 வயதுடைய வளர்ப்பு பாட்டியான சாரா ஒபாமா இன்று கென்யாவில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் காலமானார். இவரது மகள் கொரோனா தொற்று அவருக்கு ஏற்படவில்லை என்று உள்ளூர் ஊடகத்தில் தெரிவித்துள்ளார். சாரா ஒபாமா, ஒபாமாவின் தாத்தாவிற்கு மூன்றாம் தாரம் ஆவார். இவர் அதிபர் ஒபாமாவை முஸ்லிம் என்றும், அவர் பிறந்தது கென்யாவில் என்றும் விமர்சனங்கள் […]

Categories
உலக செய்திகள்

படுக்கையறையில் இருந்த பதுங்கு குழி… திறந்து பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

அமெரிக்காவில் படுக்கை அறைக்கு கீழே பதுங்கு குழியை கண்டு பெண் ஓருவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அமெரிக்காவில் ஜெனிபர் லிட்டில் என்பவர் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி  வருகிறார். அவருக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக   இருந்துள்ளது. அதனால் கடந்த 1951 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வீடு ஒன்றை  வாங்கி அதில்  தற்போது  வசித்துவருகிறார் .அந்த வீட்டில்  அவரது படுக்கை அறையில்  ஒரு சாக்கடை மூடி இருப்பதை […]

Categories
உலக செய்திகள்

பிரபல கோடீஸ்வரர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

அமெரிக்காவில் செக் குடியரசினுடைய கோடீஸ்வரர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்துள்ளார்.  அமெரிக்காவிலுள்ள அலாஸ்கா என்ற மாநிலத்தில் ஹெலிஹாப்டர் விபத்து நடந்ததில் செக் குடியரசினுடைய கோடீஸ்வரரான கெல்னர் மரணமடைந்துள்ளார். இச்செய்தியை அவரின் சொந்த முதலீட்டுக் குழு ppf உறுதி செய்திருக்கிறது. இதற்கு முன்பு Anchorage என்ற நகரின் கிழக்கு பனிப்பாறையின் அருகிலும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் விமானி, வழிகாட்டிகள் இருவர், செக் குடியரசை சேர்ந்த மற்றோரு நபர் ஆகிய 5 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கெல்னர் மட்டுமே உயிர்பிழைத்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

239 பயணிகளுடன் காணாமல் போன விமானம்.. அமெரிக்கா காரணமா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

மலேசிய விமானம் காணாமல் போன விவகாரத்தில் அமெரிக்காவிற்கு தொடர்பிருப்பதாக புலனாய்வு பத்திரிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார்.  மலேசிய விமானம் MH 370, சுமார் 239 பயணிகளுடன் காணாமல் போன சம்பவத்தில் அமெரிக்காவிற்கு  தொடர்புள்ளதாக ஹொங்ஹொங்கை சேர்ந்த Florence De Changy என்ற புலனாய்வு பத்திரிகையாளர் அவரின் புத்தகத்தில் கூறியுள்ளார். இந்தப் புத்தகத்தின் தலைப்பு “The Disappearing Act: The Impossible Case of MH 3704”. இந்த விமானம் சீனாவின் முக்கிய மின்னணு சாதனங்களை கொண்டு சென்றுள்ளது. இதனை தடுப்பதற்காகவே […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி…. இரண்டு உயிர்களை பாதுகாக்க மேற்கொண்ட ஆய்வு…. தகவலை வெளியிட்ட மருத்துவ இதழ்…!!

அமெரிக்காவில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவினை மருத்துவ பத்திரிகை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசியினை செலுத்துவதற்கு குறித்து அமெரிக்காவின் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின் முடிவினை அமெரிக்கன் ஜெர்னல் ஆப் ஒபிஸ்ட்ரிக்ஸ் அண்ட் ஜெனிகாலஜி என்ற மருத்துவ பத்திரிகையில் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அந்த வகையில்  […]

Categories
உலக செய்திகள்

பனி சறுக்கை பார்க்கணும்…. ஆசையுடன் ஹெலிகாப்டரில் ஏறிய சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

அமெரிக்காவில் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அங்கோரேஜ் என்ற இடத்தில் உள்ள பனி படர்ந்த பகுதியினை கண்டு ரசிப்பதற்காக மூன்று சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் ஏற்படும் பனி சறுக்கை பார்பதற்க்காக இரண்டு வழிகாட்டிகளை அழைத்துக்கொண்டு அங்குள்ள ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த ஹெலிகாப்டர் நிக் பனிப்பாறையின் அருகே சென்றுகொண்டிருக்கும் போது திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் காரை கடத்த முயன்ற சிறுமிகள் ..கார் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழப்பு ..!!போலீசாரால் கைது ..!!

அமெரிக்காவில் காரை கடத்த முயன்ற சிறுமிகளிடமிருந்து காரை காப்பாற்ற முயன்றவர் பரிதாபமாக கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியாவை சேர்ந்த 66 வயதான முகமது அன்வர் என்பவர் உபேர் இட்ஸ் நிறுவனத்திற்காக கார் ஓட்டி கொண்டிருந்திருக்கிறார் .அப்போது திடீரென்று காருக்குள்  தென்கிழக்கு வாஷிங்டன் டிசியை சேர்ந்த  13 வயது சிறுமி மற்றும் போர்ட் வாஷிங்டன் என்ற பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி இருவரும் அன்வரை மின்சாரம் கொடுக்கும் கருவியால் தாக்கி காரை எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

காதலனை பார்க்க போறேன்…. ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்…. “என்ன நடந்தது?” போலீஸ் விசாரணை….!!

அமெரிக்காவில் காதலனை தன் நாயுடன் பார்க்கச் சென்ற பெண் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மாசசூசெட்ஸ் மாகாணத்தை சேர்ந்த Sinéad Lyons என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் செல்லப் பிராணியான நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். Sinéad Lyons இரண்டு வாரங்களுக்கு முன் தன் நாயுடன்  காதலனை பார்க்க போவதாக அவர் தோழியிடம் கூறி விட்டு  சென்றவர் நியூ ஹாம்ப்ஷயர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் 26 ஆம் தேதி பகல் […]

Categories
உலக செய்திகள்

“என்னை பேட்டி எடுங்க”… ஓப்ரா வின்ஃப்ரே-க்கு கடிதம் கொடுத்துள்ள மேகனின் தந்தை… என்ன காரணம் தெரியுமா…?

மேகனின் தந்தை தாமஸ் மெர்க்கல் ஓப்ரா வின்ஃப்ரே-யின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது பாதுகாவலரிடம் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவியான மேகனின் தந்தை தான் தாமஸ் மெர்க்கல். இவர் நேற்று கலிபோர்னியாவில் உள்ள ஓப்ரா வின்ஃப்ரே-யின் பங்களாவிற்கு நேரில் சென்று அங்கு பணிபுரியும் பாதுகாவலரிடம் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில், தனது கதையை ஓப்ராவிடம் சொல்ல விரும்புகிறேன் என்று எழுதியதாக தெரியவந்துள்ளது. இது எதற்காக என்றால், பிரிட்டன் இளவரசர் ஹரியும்- மேகனும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா கடற்கரையில் திடீரென்று மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கி சூடு ..இருவர் பலி ..போலீசார் விசாரணை ..!!

அமெரிக்கா கடற்கரையில் திடீரென்று துப்பாக்கிதாரிகள் சுட்டதில்  இருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளதாக  தகவல் வெளியாகின . அமெரிக்காவில் வர்ஜினியா கடற்கரையில் இரவில் துப்பாக்கிதாரிகள் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களை போலீசார் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.அந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாகவும்  பலர் காயங்களுடன் தப்பி விட்டதாகவும் போலீசார் தகவல் வெளியிட்டனர். இதனை குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் பற்றி தெரியவில்லை என்று கூறப்படுகிறது. துப்பாக்கி சூடு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை தாக்கிய …சக்தி வாய்ந்த புயலுக்கு … 5 பேர் பலியான சோகம் …!!!

அமெரிக்காவில் அலபாமா பகுதியில் சக்தி வாய்ந்த புயல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் கொரோனா தொற்று பாதிப்பால், மக்கள் போராடி கொண்டிருக்கும் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள கால நிலை மாறுபாட்டால் அடிக்கடி புயல் தாக்கம் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று அலபாமா பகுதியில் சக்தி வாய்ந்த புயல் ஒன்று தாக்கியது . இந்தப் புயலானது பல மைல் வேகத்திற்கு சுழன்று அடித்தபடி சூறாவளி காற்றை  ஏற்படுத்தியது. இதனால் 100 க்கும் மேற்பட்ட […]

Categories
உலக செய்திகள்

மொபைல வாங்கி இப்படி பண்ணுவாங்களா….? இளம்பெண்ணுக்கு வந்த மிரட்டல்கள்…. தைரியமாக எடுத்த நடவடிக்கை….!!

வங்கிக்கு வந்த பெண்ணின் செல்போனிலிருந்து அவரது புகைப்படங்களை   ஊழியர் எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஹாரிஸ் கவுண்டியை சேர்ந்த ஜுயன் எஸ்டீபன்(27) என்பவர் வங்கியில் பணியாற்றி வருகிறார். அவர் வங்கிக்கு வரும் ஊழியர்களிடம் செல்போனை வாங்கி அதிலுள்ள அவர்களின் நிர்வாண படங்களை எடுத்து வைத்து அவர்களை மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வங்கிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி சென்றுள்ளார். அதேபோல் அந்த பெண்ணிடமும் வங்கிக் […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் ஜாலி ரைடு சென்ற சிறுமிகள்…. சாலையோரம் தூங்கி கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கொடூரம்…. கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்…!!

அமெரிக்காவில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு நபரின் மீது கார் ஏறி விபத்தை ஏற்படுத்தியதாக தகவல் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் மெக்சிகோ நகரத்தை சேர்ந்தவர்கள் மேடியோ சல்வடோர் (33 வயது), சோபியோ சொடேலோ டோரிஸ் (51 வயது). இவர்கள் இருவரும் சாண்டியாகோ கவுண்டியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் தோட்ட வேலை செய்து வருகின்றனர். மேலும்  சம்பவத்தன்று இவர்கள் வேலையை முடித்துவிட்டு சாலையோரம் படுத்து தூங்கியுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் யாருக்கும் தெரியாமல் காரை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் அதிகரித்து வரும் இனவெறி தாக்குதல் ..வெளியான இலங்கையர் ஒருவரை தாக்கிய புகைப்படம் ..!!

அமெரிக்காவில் ஆசியா மீதான இனவெறி தாக்குதல் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று முதலில் பரவ தொடங்கியதிலிருந்து கொரோனாவை பரப்பி விட்டது ஆசியர்கள் தான் என்று கூறி அமெரிக்கர்கள் அவர்களை முதலில் அடித்தார்கள் .தற்போது காரணமே இல்லாமல் அவர்களை பார்க்கும் இடம் எல்லாம் அடித்து தாக்குகிறார்கள். அதில் செவ்வாய்க்கிழமை அன்று நியூயார்க்கில் பெண்மணி ஒருவர் மீது வெள்ளையர்கள் சிறுநீர் கழித்து உள்ளனர். அதேபோன்று நியூயார்க் சுரங்க ரயிலில் 68 வயதான நாராயன்ஜெ  போதி  என்ற இலங்கையர் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் அதிகரிக்கும் இனவெறி தாக்குதல்..ஆசிய முதியவரை தாக்கிய இளைஞன் ..!!வெளியான வீடியோ காட்சிகள் ..!!

அமெரிக்காவில் ஆசியா நாட்டு முதியவர் ஒருவரை கொடூரமாக தாக்கிய நபரின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் ஆசியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதியில் 84 வயதான ராங் சின் லியோ என்பவர் பிரான்சிஸ்கோவில் பேருந்திற்காக சாலை ஓரத்தில் வாக்கரில் அமர்ந்தபடி இருந்துள்ளார்.அப்போது திடீரென்று ஒரு இளைஞன் வந்து லியோவை மிதித்து கீழே தள்ளி உள்ளான்.அதன்பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனைத்தொடர்ந்து லியோவை தாக்கிய  23 வயதான எரிக் […]

Categories

Tech |