Categories
உலக செய்திகள்

இறுதிச் சடங்கில் நடந்த துப்பாக்கிச் சூடு….. ஆறு பேர் படுகாயம்…. மர்ம நபருக்கு வலைவீச்சு….!!!!

இறுதிச் சடங்கின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க நாட்டில் பென்சில்வேனியா மாகாணத்தில் கடந்த 15ஆம் தேதி திடீரென துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்த ஜான் ஜேம்ஸ் என்பவருடைய இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் பீட்டர் பார்க்ஸ் நகரில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு வெளியே நடைபெ ற்றுள்ளது. அங்கு ஜான் ஜெம்ஸின் உறவினர்களும் நண்பர்களும் […]

Categories
உலக செய்திகள்

சல்மான் ருஷ்டியை கொலை செய்பவருக்கு பல கோடி டாலர் பரிசு…? ஈரான் அமைப்பிற்கு பிரபல நாடு பொருளாதார தடை…!!!!!!

பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி சாத்தானின் கவிதைகள் எனும் நூலை எழுதியதற்காக அச்சுறுத்தலுக்கு இடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றார். கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மீது ஒருவர் கொலை வெறி தாக்குதலின் நடத்தியுள்ளார். அதில் சல்மான் ருஷ்டி ஒரு கண் பார்வையை இழந்துள்ளார் அதன் பின் ஒரு கையின் செயல்பாட்டை இழந்துள்ளார். இதற்கிடையே சல்மான் ருஷ்டியை கொலை செய்பவருக்கு பல கோடி டாலர் பரிசாக அளிக்கப்படும் இனம் […]

Categories
உலக செய்திகள்

ஹைபர்சோனிக் ஏவுகணையை மீண்டும் சோதனை செய்த பிரபல நாடு…? வெளியான தகவல்…!!!!!

ஒளியை விட ஐந்து மடங்கு வேகமாக செல்லும் ஹைபர்சோனிக் ஏவுகணையை அமெரிக்கா மீண்டும் சோதனை செய்திருப்பதாக அந்த நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ராணுவம் கப்பற்படை கூட்டு திட்டத்தை ஆதரிப்பதற்காக ஹைபர்சோனிக் ஆயுத ஆராய்ச்சிக்கான தரவுகளை சோதிக்கவும் சேகரிக்கவும் வடிவமைக்கப்பட்ட 11 வெவ்வேறு சோதனைகளை ராக்கெட் கொண்டு சென்றதாகவும் அந்த நாட்டு கடற்படை கூறியுள்ளது. இந்த நிலையில் கடல் மற்றும் நிலம் சார்ந்த ஹைபர்சோனிக் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் திட்டத்தின் கீழ் […]

Categories
உலக செய்திகள்

இறப்புக்கு பின் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?…. ஆவிகளிடம் நேரடியாக கேட்ட “பிரபல நாட்டு இளம் பெண்”….!!!!

பிரபல நாட்டில் ஒரு பெண் மனிதர்களிடம் பேசுவதைப் போல ஆவிகளிடமும் பேசி வருகிறார். அமெரிக்காவில் உள்ள Wilmington என்னும் இடத்தில் ரெபேக்கா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் Wilmington என்னும் நகரம் தான் நாட்டிலேயே அதிக பேய்கள் நடமாடும் இடமாக கருதுகிறார். அந்த இடத்தில் வாழும் அவர் சற்று வித்தியாசமான அனுபவங்களை சந்தித்து வருகிறார். அதாவது ஆவி நடமாட்டம், பேய், பூதம் என பயப்படாமல் அவற்றுடன் அவர் சாதாரணமாக பேசி வருவதாக தெரிவிக்கிறார். இந்நிலையில் அப்படி […]

Categories
உலக செய்திகள்

“இனி வரும் நாட்களில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்”…? அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரிக்கை…!!!!!

இனி வருகின்ற நாட்களில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்ற நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா விளங்குகிறது அங்கு வைரசின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த சூழலில் ஒமேக்கான் வைரஸ் தொற்றை எதிர்கொள்ளும் விதமாக புதுப்பிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை ஜனாதிபதி பைடன் நேற்று முன்தினம் செலுத்திக் கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதை பார்த்ததிலிருந்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை”… இங்கிலாந்து பிரதமர் வீடியோவை பகிர்ந்த நடிகர் விக்ரம்…!!!!!

இங்கிலாந்து வரலாற்றில் முதல் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக இருப்பது அந்த நாட்டு மக்கள் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என தெரிகின்றது. அவர் கருப்பினத்தவர், வேறு நாட்டுக்காரர் நம் பிரச்சினைகளை அவரால் சரியாக புரிந்து கொள்ள முடியாது என டிவி நிகழ்ச்சியில் ஒருவர் பேசி இருக்கிறார். இதை பார்த்தத்திலிருந்து என் […]

Categories
உலக செய்திகள்

இந்த மனசு தான் கடவுள்… “அமெரிக்க பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு”… ஆசிரியர் செய்த செயல்..3 பேர் பலி…!!!!

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் அந்த நகரையே புரட்டி போட்டுள்ளது. அமெரிக்காவில் மசூரி மாகாணத்தில் செயின் லூயிஸ் நகரில் மத்திய காட்சி மற்றும் நிகழ்கலை உயர்நிலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவரை சரமாறியாக சுட தொடங்கியுள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அலறி அடித்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர் இதற்கு இடையே தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்தனர் போலீசாரை பார்த்ததும் அவர்களை நோக்கியும் அந்த நபர் […]

Categories
உலக செய்திகள்

கல்லறையில் 4 மணி நேரம்…. கண் விழித்த போது காத்திருந்த அதிர்ச்சி….. கணவர் செய்த கொடூர சம்பவம்…..!!!!!

அமெரிக்காவை சேர்ந்த யங் சூக் ஆன் மற்றும் அவரின் கணவர் சாய் கியின் ஆகிய இருவருக்கும் நீண்ட காலமாக சொத்து பிரச்சினை இருந்துள்ளது. இதனால் இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் அக்டோபர் 16ஆம் தேதி சாய் கியொன் மனைவியை கடத்தி கை, கால்களை கட்டி காட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழி தோண்டி அவரை குழிக்குள் தள்ளி மேலே இருந்து மண்ணை அள்ளி போட்டு மூடியுள்ளார். இருப்பினும் மயக்க நிலையில் […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும்…. சிரியாவின் இறையாண்மையை மீறும் அமெரிக்கா…. கோரிக்கை விடுத்த வெளியுறவுத்துறை மந்திரி…..!!!!

ஐ.நா. சபை எங்களுக்கு உதவ வேண்டும் என சிரியா கோரிக்கை விடுத்துள்ளது. சிரியா   நாட்டிற்கு ஐ.நா தூதர் கீர் பெடர்சன்  சென்றுள்ளார். இதனையடுத்து அவரை அந்நாட்டின் வெளியுறவு துறை மந்திரி பைசல் மேத்நாத் நேரில் சந்தித்து வரவேற்றார். மேலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது   வெளியுறவு துறை மந்திரி பைசல் மேக்தாத்  கூறியதாவது. அமெரிக்க ராணுவம் சட்ட விரோதமாக சிரியாவில் முகாமிட்டுள்ளது. இதனை தடுப்பதற்கு ஐ.நா. சபை உதவி செய்ய  வேண்டும். மேலும் 2014-ஆம் ஆண்டு போரினால் பாதிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

25 ஆண்டுகளுக்கு முன் நடந்ததா….? கற்பளிப்பு குற்றச்சாட்டிற்கு…. நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அதிபர் ட்ரம்ப்….!!!!

அமெரிக்க நாட்டில் ஜீன் கரோல் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் தன்னை கற்பழி த்ததாக அவர் மீது குற்றம் சுமத்தி உள்ளார். இதனைஅடுத்து அந்தப் பெண் தன் குற்றச்சாட்டில் கூறியதாவது “1996 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் உள்ள உடைமாற்றும் அறையில் வைத்து அவர் தன்னைக் கற்பழித்துள்ளார்” என கூறியிருக்கிறார். ஆனால் ட்ரம்ப் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை திட்டவட்டமாக மறுத்து மறுத்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“பிரபல நாட்டில் கார் விற்பனை மையத்தில் திடீர் தீ விபத்து”… 2 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

அமெரிக்காவின் மரியெட்டா நகரில் கார் விற்பனை மையத்தில் நேற்று முன்தினம் மாலை மேலே பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கார் நிறுத்தும் இடத்தில் விழுந்துள்ளது. இதனை அடுத்து கார்கள் மீது மோதிய வேகத்தில் விமானத்தில் தீ பற்றி உள்ளது அதை தொடர்ந்து அடுத்தடுத்த கார்களிலும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இந்த தீ விபத்தில் பயணித்த விமானி உட்பட இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு… வரலாறு காணாத வீழ்ச்சி…!!!!!

கொரோனாவால் வீழ்ச்சியை சந்தித்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல நாடுகள் முயற்சி செய்து வருகின்ற நிலையில் உக்ரைன் ரஷ்யா இடையேயான போர்  உலகப் பொருளாதாரத்தை மேலும் பின்னோக்கி தள்ளுகின்றது. மேலும் போரால் கச்சா எண்ணெய் உணவு தானியங்களில் விலை அதிகரிக்க தொடங்கி இருக்கின்றது. இதன் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருட்களின் விலை ஏற்றமடைந்து பணவீக்கம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் பண வீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி உட்பட பல நாடுகளின் வங்கிகள் வட்டி விகிதத்தை […]

Categories
உலக செய்திகள்

கால் வலினு சென்ற பெண்… திடீரென பிறந்த குழந்தை…. நடந்தது என்ன?… அதிர்ச்சி தகவல்….!!!!

அமெரிக்காவில் ஓமாஹா நகரில் பேய்ட்டன் ஸ்டோர்(23) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் தான் ஆசிரியர் பணியில் புதிதாக இணைந்துள்ளார். இவருக்கு கால் வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது மருத்துவர் பல அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். அதாவது அவருக்கு செய்யப்பட்ட பரிசுதனையில் அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். சோதனை தவறாக இருக்கக்கூடாது என்ற சந்தேகத்தை தீர்ப்பதற்கு இரண்டு மூன்று முறை பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. நிச்சயமாக பேய்ட்டன் கர்ப்பமாகத்தான் இருக்கிறார் என்று […]

Categories
உலக செய்திகள்

“உலகத்தில் இதுதான் ஆபத்தான நாடு”…. ஜோ பைட்டனின் கருத்துக்கு பதிலடி கொடுத்த பிரபல நாடு…. வெளியான தகவல்….!!!!

அமெரிக்காவின் ஜனாதிபதி பிரபல நாடு குறித்து வெளியிட்ட கருத்து பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 14-ஆம் தேதி  ஆளும் ஜனநாயக கட்சியின் பிரசார குழு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி ஜோ பைடன்  கூறியதாவது. உலகின் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான். ஏனென்றால் அந்த நாடு எவ்வித ஒற்றுமையும் இல்லாமல்  ஆயுதங்களை கொண்டுள்ளது எனக் கூறியுள்ளார். இது உலக அளவில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இவரின்  கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள […]

Categories
உலக செய்திகள்

“அடடே! உலக சாதனை”…. உலகிலேயே வயதான மருத்துவர் இவர் தான்….!!!

அமெரிக்க நாட்டில் ஹோவர்ட் டக்கர் என்பவர் உலகிலேயே அதிக வயது கொண்ட மருத்துவராக  கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். அமெரிக்க நாட்டின் ஓஹியோ மாகாணத்தில் இருக்கும் க்ளீவ்லேண்ட் என்ற நகரில் வசிக்கும் ஹோவர்ட் டக்கர் என்ற மருத்துவர் 75 வருடங்களாக மருத்துவராக இருக்கிறார். காலையில் 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை தொடர்ச்சியாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் அவர் கொரோனா தொற்று காலகட்டத்திலும் கூட காணொளி வாயிலாக மருத்துவ சேவையை தொடர்ந்து கொண்டிருந்தார். ஓய்வு […]

Categories
உலக செய்திகள்

மொத்தம் 23 லென்ஸ்…. பெண்ணின் கண்ணில் இருந்து எடுக்க எடுக்க….. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!!!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய கண்களில் 23 கான்டக்ட் லென்ஸ் வைத்திருந்துள்ளார். இதை அங்குள்ள மருத்துவர் ஒருவர் நீக்கி உள்ளார். இதனை அந்த மருத்துவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கண்ணில் லென்ஸ் வைத்துக்கொண்டு இரவில் தூங்காதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த பெண் தொடர்ந்து 23 நாட்கள் தினமும் இரவில் கண்களில் இருந்து லென்ஸ் எடுக்க மறந்து பிறகு மீண்டும் காலையில் புதிய காண்டாக்ட் லென்ஸை வைத்துள்ளார். அவருடைய கண்களிலிருந்து அனைத்து லென்ஸ்களையும் எடுக்கும் […]

Categories
உலகசெய்திகள்

“இதுதான் உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடு”…? அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேச்சு…!!!!

பாகிஸ்தான் உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடு என அமெரிக்க அதிபர் பேசியது அதிக கவனம் பெற்றுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் ஜனநாயக கட்சியின் எம்பிக்கள் பிரச்சார குழு  வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோபைடன் பல்வேறு பிரச்சனைகள் பற்றி பேசியுள்ளார். அப்போது அமெரிக்காவிற்கு கடும் சவால் அளித்துவரும் சீனாவையும் ரஷ்யாவையும் திட்டி தீர்த்த ஜோபைடன் பாகிஸ்தான் பற்றியும் பேசி உள்ளார். ஆனால் பாகிஸ்தான் பற்றி பேசியது கவனம் பெற்றுள்ளது […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 725 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவி… பிரபல நாடு வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

உக்ரைனுக்கு 725 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உக்ரைன்  ரஷ்யா போரானது தொடர்ந்து எட்டு மாதங்களுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் ரஷ்ய இராணுவத்திற்காக அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணிதிரட்ட உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் உக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவியை அமெரிக்கா அனுப்பும் என கூறப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

கருக்கலைப்பு விவகாரம்… “இந்த தீர்ப்பு கோர்ட் மற்றும் நாட்டிற்கு சோகமான நாள்”…? அமெரிக்க அதிபர் ஜோ.பைடன் பேச்சு….!!!!!

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 1973 ஆம் வருடம் அமெரிக்காவில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை மற்றும் அரசியலமைப்பு உரிமை என அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட் அரசு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேபோல 1992 ஆம் வருடம் நடைபெற்ற வழக்கில் 22 முதல் 24 வார கால கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டபூர்வமாக கலைத்துக் கொள்ளலாம் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பானது பல்வேறு மாகாணங்களில் சட்ட வடிவில் இருக்கிறது இந்த சூழலில் 15 வாரத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இனவெறியா..? பதவி விலகிய இந்திய வம்சாவளி எம்.பி…!!!

அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி Tulsi Gabbard பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். அந்த வகையில், அந்நாட்டின் ஜனநாயக கட்சியில் எம்.பி பதவியில் இருந்தவர் Tulsi Gabbard. இன்னிலையில், திடீரென்று அவர் எம்.பி பதவியை விட்டு தான் விலகுவதாக அறிவித்திருக்கிறார். மேலும், ஜனநாயக கட்சியில் இன வெறியும், போர் வெறியும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

ஆஸ்கர் விருது பெற்ற பிரபல நடிகை மரணம்…. தூங்கி கொண்டிருந்த போதே பிரிந்த உயிர்…!!!

அமெரிக்க நாட்டில் ஆஸ்கர் விருது பெற்ற புகழ்பெற்ற நடிகையான ஏஞ்சலா லான்ஸ்பெரி வீட்டில் தூங்கிய நிலையில் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் 1984 ஆம் வருடத்திலிருந்து 1996 ஆம் வருடம் வரை ஒளிபரப்பு செய்யப்பட்ட மர்டர் ஷி ரைட் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த ஏஞ்சலா மிக பெரிய அளவில் புகழ்பெற்றார். தற்போது 97 வயதான நிலையில், வயது முதிர்வு காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் அவருடைய வீட்டில் தூங்கி நிலையிலேயே அவரின் உயிர் பிரிந்தது. […]

Categories
உலகசெய்திகள்

அமெரிக்காவில் உயர்மட்ட தலைவர்களுடன்… மத்திய நீதி மந்திரி இரு தரப்பு பேச்சுவார்த்தை…!!!!!

அமெரிக்காவிற்கு அரசு முறை சுற்றுப்பயணமாக மத்திய நிதி மந்தி நிர்மலா சீதாராமன் சென்றுள்ளார். வாஷிங்டன் டிசி நகரில் அந்த நாட்டு நிதி மந்திரி ஜேனட் எல்லனை நேரில் சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் நடப்பு சர்வதேச பொது பொருளாதார சூழ்நிலை உள்ளிட்ட பரஸ்பர நலன்களுக்காக பிற விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதனை மத்திய நிதி அமைச்சகம் தனது ட்விட்டரில் கூறியுள்ளது. மேலும் இந்த சந்திப்பில் வருகிற நவம்பரில் இந்தியாவில் நடைபெற இருக்கின்ற […]

Categories
உலக செய்திகள்

வேலை நேரத்தில் வெப்கேம் ஆன் செய்யாத ஊழியர்… பணி நீக்கம் செய்த நிறுவனம்… கோர்ட் விதித்த அதிரடி உத்தரவு…!!!!

பணி நேரத்தின் போது வெப் கேமராவை ஆன் செய்ய சொன்ன நிறுவனத்தின் மீது கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் ளோரிடா மாகாணத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் டெலி மார்க்கெட்டிங் நிறுவனம் சேட்டு. இந்த நிறுவனத்தின் கிளை அலுவலகம் ஒன்று நெதர்லாந்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அலுவலகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் நெதர்லாந்து சேர்ந்த ஒரு நபர் ஊழியராக பணிக்கு சேர்ந்துள்ளார். இவர் வேலைக்கு சேர்ந்து சுமார் ஒரு வருடம் கழித்து அந்த […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே! வேலையை இழக்கும் ஐடி ஊழியர்கள்…. முன்னணி நிறுவனத்தின் அறிவிப்பால் பெரும் அதிர்ச்சி….!!!!

உலக அளவில் கடந்த 2020-ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல் படுத்தப் பட்டதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இதனால் வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் வேலைகளை செய்ய ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஐடி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அதிகரித்தது. இதனால் உலகில் உள்ள பல்வேறு ஐடி நிறுவனங்கள் வேலைக்கு பணியாளர்களை நியமித்ததோடு அவர்களுக்கு வேண்டிய சம்பள உயர்வு, விடுப்பு உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இந்திய மாணவரை கொன்றது ஏன்..? இதுதான் காரணமா..? கொரிய மாணவர் வாக்குமூலம்…!!!!

அமெரிக்காவின் இன்டியானா பர்டூ பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு இந்தியாவைச் சேர்ந்த வருண் மணீஷ் சேடா (20) என்ற மாணவரும் இவருடன் கொரியாவை சேர்ந்த மின் ஜிம்மி ஷா என்ற மாணவரும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் இவர்கள் இருவரும் அறையில் இருந்த போது மின் ஜிம்மி ஷா திடீரென மணீஷ் சேடாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனை அடுத்து போலீசுக்கு போன் செய்து தான் […]

Categories
உலக செய்திகள்

ஆடைக்குள் மறைத்து கொண்டு வந்த நபர்…. உள்ளே இருந்தது என்ன தெரியுமா?…

அமெரிக்காவிற்கு, கனடா நாட்டிலிருந்து Calvin Bautista என்ற வகை பாம்புகளை எடுத்து வந்த நபர் கைதான நிலையில், அவருக்கு 20 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் வசிக்கும் 36 வயதுடைய Calvin Bautista என்ற நபர் கடந்த 2018 ஆம் வருடத்தில் ஜூலை மாதம் 15 ஆம் தேதி அன்று கனடாவிலிருந்து Burmese என்ற மூன்று பாம்புகளை பேன்ட்டிற்குள் மறைத்து கடத்தி வந்த வழக்கில் கைதானார். இந்நிலையில் சில […]

Categories
உலக செய்திகள்

“இந்திய பொருளாதாரம் மட்டுமல்ல உலக பொருளாதாரமும் சரிவை சந்திக்கும்”…? சர்வதேச நிதியம் கணிப்பு….!!!!!

அமெரிக்காவில் சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு உலக பொருளாதார பார்வை பற்றிய தனது வருடாந்திர  அறிக்கையை சர்வதேச நிதியம் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் (2021-2022) இந்திய பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டி (2022-2023) இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக குறையும் என சர்வதேச நிதியம் கணித்திருக்கின்றது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டுள்ள கணிப்பில் இந்திய பொருளாதார […]

Categories
உலக செய்திகள்

இவர் மனுசனா? மிஷினா?… அசாத்திய திறமையால் அசர செய்த இளைஞர்….!!!

அமெரிக்க நாட்டை சேர்ந்த ஒரு இளைஞர் இசை ஒலிக்கும் வேகத்திற்கு ஏற்ப அதிவேகத்தில் சுழன்று நடனமாடிய வீடியோ லட்சக்கணக்கான மக்களை கவர்ந்திருக்கிறது. அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் வசிக்கும் மேத்யூ டிலோச் என்ற இளைஞர் தொழில்முறை நடன கலைஞராக இருக்கிறார். இவர், யூடியூபில் நடனம் குறித்து பல வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார். இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் அவர் பகிர்ந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. https://www.instagram.com/reel/CjEduAzMUVK/?utm_source=ig_web_copy_link அந்த வீடியோவில் முதலில் மெதுவாக ஆடத் தொடங்கும் மேத்யூ டிலோச், […]

Categories
உலக செய்திகள்

2 வாரத்தில் 7-ஆம் முறையாக ஏவுகணை சோதனை…. வடகொரிய அதிபர் அதிரடி…!!!

வடகொரிய நாட்டின் அதிபரான கிங் ஜாங் உன் தலைமையில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரிய கடற்படையினர் அமெரிக்க கடற்படையினரோடு சேர்ந்து கூட்டாக போர் பயிற்சி கொரிய எல்லைப் பகுதியில் போர் பயிற்சி மேற்கொள்வதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது மட்டுமல்லாமல் தென்கொரியாவையும் அமெரிக்காவையும் அச்சுறுத்துவதற்காக 14 நாட்களாக தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று தொடர்ந்து இரண்டு குறுகிய தூரத்திற்கு செல்லும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை சோதனை […]

Categories
உலக செய்திகள்

இன்போசிஸ் நிறுவனத்தின் மீது வழக்கு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

இன்ஃபோசிஸ் நிறுவனம் பாரபட்சமாக பணிக்கு ஆட்களை சேர்ப்பதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் மறுத்துள்ளது. இன்போசிஸ் என்னும் பிரபல ஐடி நிறுவனத்தினுடைய ஆட்கள் சேர்க்கும் பிரிவில் துணை தலைவராக இருந்த ஜில் ப்ரீஜீன் அந்நிறுவனத்தின் மீது புகார் தெரிவித்திருக்கிறார். அதாவது பாலினம், தேசியம் மற்றும் வயது போன்ற அடிப்படையில் இன்போசிஸ் நிறுவனம் பாரபட்சமாக நடத்துவதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இது பற்றி அவர் தெரிவித்ததாவது, இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருக்கும் சட்டவிரோதமான பாகுபாடான கலாச்சாரத்தை பார்த்து நான் அதிர்ந்தேன். […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு செல்கிறீர்களா?… ரொம்ப எச்சரிக்கையா இருங்க…. பிரபல நாடு தங்கள் மக்களுக்கு அறிவுரை…!!!

அமெரிக்க அரசு குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பாலும் தீவிரவாத தாக்குதலாலும் இந்தியாவிற்கு பயணம் செய்யும் தங்கள் மக்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்திருக்கிறது. அமெரிக்க வெளியுறவு துறை நேற்று முன்தினம் தங்கள் மக்களுக்கு பயண அறிவுறுத்தல் தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இந்தியாவில்  அதிகரித்துக் கொண்டிருக்கும் குற்றங்களில் பாலியல் வன்கொடுமை ஒன்றாக இருக்கிறது என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இதில் சுற்றுலா தளங்களிலும் மற்ற பகுதிகளிலும் பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அந்நாட்டின் முக்கிய பகுதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

2024 ஆம் வருடம் முடிவதற்குள்… அமெரிக்காவிற்கு இணையான சாலை உட்கட்டமைப்பு…? மத்திய மந்திரி பேச்சு…!!!!

உத்திரபிரதேசத்தின் லக்னோ நகரில் 81 வது வருடாந்திர இந்திய சாலைகள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது நான் யோகிஜிக்கு வாக்குறுதி அளித்துள்ளேன். 2024 ஆம் வருடம் முடிவதற்குள் உத்தரபிரதேசத்தில் அமெரிக்காவிற்கு இணையான சாலை உட்கட்டமைப்பை நாங்கள் ஏற்படுத்தி தருவோம். இதற்காக உத்தரப்பிரதேசத்தில் ரூபாய் 5 லட்சம் கோடி மதிப்பில் சாலை திட்ட பணிகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதனை […]

Categories
உலக செய்திகள்

நெதர்லாந்திற்கான அடுத்த அமெரிக்க தூதர் நியமனம்… இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?…

அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை நெதர்லாந்திற்கான தூதராக பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். அமெரிக்க அரசு நெதர்லாந்திற்கான அடுத்த அமெரிக்க தூதராக ஷெபாலி ரஸ்தான் டுகால் என்பவரை நியமித்திருக்கிறது. இவரை நியமனம் செய்ததற்கு அமெரிக்க செனட் சபை அனுமதி வழங்கி இருக்கிறது. அமெரிக்க நாட்டின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ், ஷெபாலிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். இது குறித்து கமலா ஹாரிஸ் தெரிவித்திருப்பதாவது, நெதர்லாந்து நாட்டிற்கான அடுத்த தூதராக ரஸ்தான் டுகாலை […]

Categories
உலக செய்திகள்

“ஒரே நேரத்தில் இரண்டு மார்க்கமாக”…. அமெரிக்க ராணுவத்தின் அதிரடியால்…. நிலைகுலைந்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு….!!!!

அமெரிக்கா ராணுவத்தின் அதிரடி தாக்குதலால் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் கொல்லப்பட்டனர். சிரியா நாட்டில் பல பகுதிகளில் ஐ.எஸ் பயங்கரவாதிகளினுடைய ஆதிக்கம் மீண்டும் ஓங்கி வருகின்றது. இதனை ஒடுக்குவதற்காக அமெரிக்க ராணுவப் படைகளின் உதவியுடன் சிரியா ராணுவம் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது. இந்த நிலையில் அந்நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள காமிஷ்லி நகரில் இருக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளினுடைய நிலைகளை குறி வைத்து அமெரிக்க ராணுவ படைகள் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலானது ஒரே நேரத்தில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரம்…. இரத்தம் படிந்த ஆடையுடன் சென்ற நபர்…. என்ன நடந்தது?…

அமெரிக்க நாட்டின் லாஸ் வேகாஸ் நகரில் பயங்கர கத்தி குத்து தாக்குதல் நடந்ததில் ஒரு நபர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டின் லாஸ் வேகாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு சூதாட்ட விடுதியின் முன்புறத்தில் நேற்று காலையில் திடீரென்று கத்தி குத்து தாக்குதல் நடந்துள்ளது. இதில் ஒரு நபர் பலியானதாகவும் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதனைத்தொடர்ந்து சூதாட்ட விடுதிக்கு முன்புறம் ஆடைகளில் அதிக அளவு ரத்தத்துடன் […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”… திடீரென்று வெடித்து சிதறிய ஆப்பிள் வாட்ச்… மருத்துவமனையில் பயனாளர்…!!!

அமெரிக்க நாட்டில் ஆப்பிள் வாட்ச் ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியதில் பயனாளர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க நாட்டில் ஒரு நபர் பயன்படுத்தி வந்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சின் பேட்டரி அளவு திடீரென்று பெரிதாகியுள்ளது. அதை தொடர்ந்து, வாட்ச் வெடித்து சிதறி விட்டது. அதற்கு முன் வாட்ச்சில் அதிக சூடு இருந்திருக்கிறது. அதனைத்தொடர்ந்து அதிக அளவில் புகையும்  வெளியேறியுள்ளது. வாட்ச் வெடித்து சிதறியதில் அதன் பயனாளர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் இந்திய வம்சாவளி மாணவர் படுகொலை… சக மாணவர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் இந்தியனா போலிஸ் நகரத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவர் வருண் மணி சேட்டா (20)என்பவர் பர்டூ பல்கலைக்கழகத்தில் தரவு அறிவியல் படிப்பு பயின்று வந்துள்ளார். அந்த பல்கலைக்கழகத்தின் மேற்கு முனையில் உள்ள மேட்கட்சான் அரங்கில் உள்ள அறையில் அவர் தங்கி உள்ளார். இந்த நிலையில் அவர் தனது அறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் அவரது உடலில் கூர்மையான காயங்கள் இருந்துள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கொடூரம்… கடத்தப்பட்ட குடும்பத்தினர்… சடலங்களாக கிடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்த 36 வயதுடைய ஜஸ்தீப் சிங், அவரின் மனைவி, அவர்களின் கைக்குழந்தை மற்றும் உறவினர் அமன்தீப் சிங் ஆகிய 4 பேரை சிலர் கடந்த திங்கட்கிழமை அன்று துப்பாக்கி முனையில் கடத்தி சென்றிருக்கிறார்கள். இவர்களை யார் கடத்தினார்கள்? என்ன காரணம்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இது குறித்து காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட எட்டு மாத குழந்தை…. இந்திய குடும்பத்தின் நிலை என்ன….? அமெரிக்காவில் பரபரப்பு….!!!!

இந்திய குடும்பத்தை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் சென்ட்ரல் வெலி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இந்திய நாட்டை பூர்விகமாக கொண்ட ஜஸ்தீப் சிங் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 36 வயது ஆகின்றது. இவருடைய குடும்பத்தில் ஜஸ்தீப்பின்  மனைவி ஜாஸ்லீன் கவூர், எட்டு மாத குழந்தை மற்றும் உறவினர் அமந்தீப் சிங் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் 8 மாத குழந்தை உட்பட 4 இந்தியர்கள் கடத்தல்… தீவிர மீட்பு பணியில் போலீசார்..!!!!!

அமெரிக்காவில் நான்கு இந்தியர்களை கடத்தியவர்களை தீவிரமாக மீட்க முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா நகரை சேர்ந்த ஜஸ்தீப் சிங் (36) ஜஸ்லின் கவுர் (27) தம்பதியினர், இவர்களின் எட்டு மாத குழந்தை அரூஹி தெரி மற்றும் அமன்தீப் சிங்(39)  போன்றோர் கடத்தி செல்லப்பட்டிருக்கின்றார்கள். அதாவது நெடுஞ்சாலையில் அவர்கள் பணி புரியும் இடத்திற்கு அருகே அவர்களை கடத்தல்காரர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றிருக்கின்றார்கள். மேலும் அவர்களிடம் ஆயுதம் இருந்ததாகவும் ஆபத்தானவர்கள் என கூறிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதால் மேற்கொண்ட […]

Categories
உலக செய்திகள்

இங்கு என்னால் வாக்களிக்க முடியாது…. நடிகை பிரியங்கா சோப்ரா வருத்தம்….!!!!

பெண்கள் எப்பொழுதும் விதிவிலக்காக இருக்கக் கூடாது என  பிரபல நடிகை கூறியுள்ளார். முன்னாள் உலக அழகி என்று போற்றப்படுபவர் பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் மூலம்  ஹீரோயினாக அறிமுகமானார். மேலும் இமான் இசையில் விஜயுடன் இணைந்து ஒரு பாடலையும் பாடினார். இதனையடுத்து பாலிவுட்டில்   பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் தொடரில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தற்போது அமெரிக்காவில் […]

Categories
உலக செய்திகள்

“வெப்ப காற்று பலூன் திருவிழா”…. வானை அலங்கரிக்கும்…. வண்ண வண்ண பலூன்கள்….!!!!

வெப்ப காற்று பலூன் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. அமெரிக்க நாட்டில் வருடந்தோறும்  வெப்ப காற்று பலூன் திருவிழா கோலாகலமாக நடைபெறுவைத்து வழக்கம். அதேபோல் இந்த வருடமும் இத்திருவிழா வெகு விமர்சையாக தொடங்கி உள்ளது. அல்புகெர்கி நகரில் பிரம்மாண்டமாக தொடங்கிய இந்த வெப்ப காற்று பலூன் திருவிழா ஒன்பது நாட்கள் நடைபெறும். 1972 ஆம் ஆண்டு முதல் முதலில் இந்த திருவிழா நடத்தப்பட்டது. அப்போது 13 பலூன் மட்டுமே பறக்க விடப்பட்டுள்ளன. ஆனால் தற்போது 600 முதல் 700 […]

Categories
உலக செய்திகள்

“சீனாவின் நன்னடத்தை பற்றி ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறோம்”… அமெரிக்க பாதுகாப்பு துறை மந்திரி பேச்சு…!!!!!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புத்துறை மந்திரிகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை அமெரிக்காவில் பசுபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க ராணுவ தலைமை செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் தங்கள் நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு அதிகரிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஆஸ்திரேலிய மற்றும் ஜப்பான் பாதுகாப்பு துறை மந்திரிகளை வரவேற்ற அமெரிக்க பாதுகாப்பு துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் பேசும் போது, […]

Categories
உலக செய்திகள்

விண்வெளிக்கு செல்லும் முதல் பூர்வீக அமெரிக்க பெண்மணி… வரலாறு சாதனை படைப்பு…!!!!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் பணியாற்றி வருகின்றார்கள். இதில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மொத்தம் ஐந்து ஆராய்ச்சி கூடங்கள் அமைந்துள்ளது. ரஷ்யாவிற்கு சொந்தமான இந்த சிறிய ஆராய்ச்சி கூடங்களும் அமெரிக்கா ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு தலா ஒரு ஆராய்ச்சி கூடங்களும் இருக்கிறது இந்த ஆராய்ச்சி கூடங்களில் ஆண் மற்றும் பெண் வீராங்கனைகள் பணியாற்றி வருகின்றார்கள். இந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து விண்வெளிக்கு செல்லும் முதல் பூர்வீக அமெரிக்க பெண்மணி எனும் பெருமையை […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பிரபல நாட்டில் உருவெடுத்துள்ள இயான் புயல்…. அதிகரித்துள்ள உயிரிழப்புகள்….!!!!!

அமெரிக்காவில் இயான் புயலால் 30 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் புளோரிடா   மாகாணத்தை இயான் என்ற புயல் தாக்கியுள்ளது. இதுகுறித்து தேசிய புயல் மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புயலால் பலத்த காற்று வீசி மின்கம்பங்கள் அறுந்து விழுந்துள்ளது. இதனால் 22 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளது. மேலும் பல நகரில் அவசர நிலை […]

Categories
உலக செய்திகள்

எங்கள் மகனை சராசரி உயிராக பாருங்கள்…. “18-வது ஆண்டில் அடி எடுத்து வைத்த இரட்டை முகம் கொண்ட வாலிபர்…. கோரிக்கை விடுத்த தாய்….!!!!

மருத்துவர்களின் கணிப்பை  பொய்யாக்கி ஒரு வாலிபர் தனது 18-வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அமெரிக்காவில் உள்ள மிசவுரி   பகுதியில் டிரெஸ் ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிறக்கும்போதே இரண்டு முகங்களுடன் பிறந்துள்ளார். இதனை மருத்துவர்கள் கிரானியோபேஷியல் டூப்ளிகேஷன் என்று கூறுகின்றனர். இவர் தற்போது தனது  18-வது பிறந்தநாளை  கொண்டாடியுள்ளார். இந்த நோயால் இதுவரை உலகம் முழுவதும் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   மேலும் இவருக்கு ஒரு நாளைக்கு 400   முறை வலிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் மருத்துவர்களின் தொடர் […]

Categories
உலக செய்திகள்

“இவங்க இப்போதைக்கு அணு ஆயுதத்தை பயன்படுத்த வாய்ப்பில்லை”… அமெரிக்கா கருத்து…!!!!!

ரஷ்ய அதிபர் புதின் அணு ஆயுத மிரட்டல் தீவிரமானது என்றும் ஆனால் தற்போதைக்கு ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்த வாய்ப்பில்லை எனவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சலீவன் கூறியிருக்கிறார். இது பற்றி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, புதினின் மிரட்டல் பற்றி ஆபத்தை அமெரிக்கா மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டதாகவும் ரஷ்யா இந்த இரண்டு பாதையில் இறங்கினால் அமெரிக்கா எத்தகைய தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் என்பது பற்றி […]

Categories
உலக செய்திகள்

மிஸ்டர் புதின் நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம்…. நாங்கள் தொடர்ந்து தடைகளை விதிப்போம்…. அமெரிக்க ஜனாதிபதி பேட்டி….!!!!!

ரஷியாவிற்கு எதிராக தடைகளை தொடர்ந்து அமெரிக்கா விதிக்கும் என ஜனாதிபதி ஜோ  பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியான ஜோ பைடன் செய்தியாளர்களிடம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். அதில் ரஷிய அதிபர் புதின் உக்ரைன்  நாட்டின் மீது நடத்தி வரும் தாக்குதல் உலக நாடுகளை அச்சுறுத்துகிறது. மேலும் அவரின் பொறுப்பற்ற வார்த்தைகள் மற்றும் அச்சுறுத்துதகளால் அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் பயப்பட போவதில்லை. மேலும் புதினின்  இந்த செயல்பாடுகள் அவர் போராடிக் கொண்டிருப்பதை தான் காட்டுகிறது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! 24 வருடங்களாக ஐடி பிசினஸ்…. அமெரிக்காவில் கலக்கும் நெப்போலியன்….. நீங்க வேற லெவல் சார்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த  நெப்போலியன் நடிகர், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்து வேடங்களிலும் அசத்தக்கூடியவர். இவரை தற்போது படங்களில் பார்ப்பது மிகவும் அரிதாக மாறிவிட்டது. ஏனெனில் நடிகர் நெப்போலியன் தற்போது தன்னுடைய குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அதாவது நடிகர் நெப்போலியனின் ஒரு மகனுக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அமெரிக்காவுக்கு சென்ற நெப்போலியன் சிகிச்சைக்காக அங்கேயே தங்கி விட்டார். இவர் அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருக்கிறார். அமெரிக்காவில் வசித்து வரும் […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. அமெரிக்கா-ரஷியா இடையே அணு ஆயுதம் கட்டுப்பாடு தொடர்பான ஒப்பந்தம்…. வெளியான தகவல்….!!!!!

 பிரபல 2 நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுக்கு இடையே அணு ஆயுதம் கட்டுப்பாடு தொடர்பான ஒப்பந்தம் போடப்படுகிறது. இந்த ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும்  பயன்படுத்தக்கூடிய வகையில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை வரம்புகளை தீர்மானிக்கவும், ஒருவருக்கொருவர் அணு ஆயுதங்களை சரிபார்த்தல் மற்றும் ஆய்வு செய்வதற்கான விதிமுறைகளை கோடிட்டுக்  காட்டுவதாகவும் அமைந்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் […]

Categories

Tech |