மதக்கோவில்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதலுக்கு அமெரிக்க அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. வங்காளதேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையின மக்களாக உள்ளனர். அங்கு அண்மை காலமாகவே அவர்கள் மீது தாக்குதல்கள் அதிகமாக நடத்தப்படுகின்றன. மேலும் கடந்த 13 ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் பரவிய பொய்யான செய்தியின் காரணமாக குலாமி என்ற இடத்தில் நடந்து கொண்டிருந்த துர்கா பூஜையில் வன்முறை வெடித்தது. இதனை அடுத்து இந்துக்கள் மற்றும் அவர்களின் வீடுகள், கோவில்கள் என அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. […]
