Categories
உலக செய்திகள்

உலகிலேயே பழமையான மீன்…. 90 வயதுடைய மெதுசலா… எங்கிருக்கிறது தெரியுமா…?

அமெரிக்காவில் இருக்கும் மெதுசலா என்ற மீன் உலகின் 90 வருடங்கள் பழமை வாய்ந்த மீன் என்று கருதப்படுகிறது. கலிபோர்னியா அகாடமி ஆப் சயின்ஸின் உயிரியலாளர்கள், உலகிலேயே பழமைவாய்ந்த மீன் மெதுசலா என்று நம்பப்படுவதாக கூறியுள்ளனர். இந்த மீனிற்கு 90 வயது என்று நம்பப்படுகிறது. இது 4 அடி நீளமும், 18.1 கிலோகிராம் எடையும் உடையது. இந்த மீன் கடந்த 1938 ஆம் வருடத்தில் ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து சான் பிரான்சிஸ்கோ அருங்காட்சியகத்திற்கு எடுத்து செல்லப்பட்டிருக்கிறது. செவுள்கள் மற்றும் நுரையீரலை […]

Categories
உலக செய்திகள்

முதலாளியின் வீட்டை காப்பாற்றிய கார்ட்டூன் வாத்துகள்…. சுவாரஸ்ய சம்பவம்…!!!

பத்தாயிரம் கார்ட்டூன் வாழ்த்துகள் ஒரு தம்பதியரின் குடியிருப்பை காப்பாற்றிய சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த தோர்ன் மெல்ச்சர்- மாண்டி முஸ்ஸல்வெட் என்ற தம்பதி, வாத்துகள் வளர்க்கப்பட்டு வந்த தங்களின் அட்லாண்டா குடியிருப்பை 40 ஆயிரம் டாலருக்கு அடமானம் வைத்துள்ளனர். இந்நிலையில், வீடு திவாலாகக்கூடிய நிலை ஏற்பட்டது. எனவே, என்ன செய்வது என்று தெரியாமல் தம்பதியர் வருத்தத்தில் இருந்தனர். அப்போது, வடிவமைப்பாளரான முஸ்ஸல்வெட், நண்பர் ஒருவரின் மூலம் NFT கார்ட்டூன்களை வடிவமைத்திருக்கிறார். அவர், சுமார் இரண்டு வாரங்களில் […]

Categories
உலக செய்திகள்

இந்த வருடத்தின் முதல் மரண தண்டனை…. அப்படி என்ன செய்தார்….? வெளியான அதிர்ச்சி பின்னணி…!!!

அமெரிக்காவில் இந்த வருடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் முதல் நபர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் இந்த வருடத்தில் முதல் முறையாக ஒரு நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் வசித்த டொனால்ட் கிராண்ட் என்ற 46 வயது நபர் கடந்த 2001 ஆம் வருடத்தில் சிறையில் இருந்த தன் காதலிக்கு ஜாமீன் வாங்க ஒரு ஓட்டலில் நுழைந்து கொள்ளையடித்திருக்கிறார். அப்போது, அவரை தடுத்து ஓட்டல் பணியாளரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததோடு மற்றொருவரை […]

Categories
உலக செய்திகள்

“செவ்வாய் கிரகத்தில் பாய்ந்த தண்ணீர்!”…. இத்தனை பில்லியன் வருடங்களா….? நாசா வெளியிட்ட தகவல்…!!!

செவ்வாய்கிரகத்தில் விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததைவிட அதிக வருடங்கள் தண்ணீர் பாய்ந்ததாக கண்டறியப்பட்டிருக்கிறது. பொதுவாக செவ்வாய் கிரகத்தில் இருக்கும் நீர் சுமார் மூன்று பில்லியன் வருடங்களுக்கு முன்பாகவே ஆவியாகிவிட்டது என்ற நம்பிக்கை இருந்தது. எனினும், அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் மூலம் வெளிவந்த தகவலில், இரண்டு முதல் இரண்டரை பில்லியன் வருடங்கள் வரை அங்கே நீர் இருந்திருக்கிறது என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், செவ்வாய் கிரகத்தின் பள்ளத்தாக்குகளில் பாய்ந்த நீர் முழுமையாக ஆகியாகி விட்ட நிலையில், […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே..! 7.45 கோடியை தாண்டிய கொரோனா… என்ன செய்யப் போகிறார் ஜோ பைடன்…? பீதியில் பொதுமக்கள்…!!

அமெரிக்காவில் கடந்த ஒரே நாளில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் 3,90,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவில் கடந்த ஒரே நாளில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் 3,90,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் அந்நாட்டில் மொத்தமாக கொரோனாவால் 7.45 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனையடுத்து கடந்த ஒரே நாளில் அந்நாட்டில் 2,251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். இதனால் மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியுள்ளது.

Categories
உலக செய்திகள்

இந்த சண்டை எப்போதான் முடிவுக்கு வருமோ?….எல்லையில் அதிகரிக்கும் போர் பதற்றம்…. பேச்சுவார்த்தையில் பிரபல நாடு…!!

ரஷ்யா-உக்ரைன் இடையிலான பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ரஷ்யா கருங்கடல் அருகே ஒரு லட்சம் படைவீரர்களை குவித்து உக்ரைனுக்கு போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இதனால் அமெரிக்கா ரஷ்யாவிடம்  தனது  படைவீரர்களை திரும்பப் பெற வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இதனை ரஷ்யா ஏற்க மறுத்துவிட்டது. இதனையடுத்து ரஷ்யாவின் நிபந்தனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த […]

Categories
உலக செய்திகள்

தாயுடன் பயங்கரமாக சண்டையிட்ட மகன்…. தடுக்கச் சென்ற அதிகாரிகள் பலி… அமெரிக்காவில் கொடூரம்…!!!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பணியில் இருந்தபோது வீரமரணமடைந்த காவல்துறை அதிகாரிகளுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ஒரு பெண், காவல் துறையினரைத் தொடர்பு கொண்டு, என் மகன் என்னுடன் கடுமையாக சண்டையிடுகிறார் என்று புகார் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, உடனடியாக அவர்களின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் மீது, அவரின் மகன் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில், 2 அதிகாரிகள் படுகாயமடைந்தனர். எனினும், அதில் ஒரு அதிகாரி, அந்த நபரை துப்பாக்கியால் சுட்டார். ஆனால், படுகாயமடைந்த […]

Categories
உலக செய்திகள்

“பல லட்சம் கோடி மதிப்புடைய ஆயுதங்கள்!”…. எகிப்திற்கு ஏற்றுமதி செய்யும் அமெரிக்கா…!!!

எகிப்திற்கு, அமெரிக்கா பல லட்சம் கோடி மதிப்புடைய ஆயுதங்களை இறக்குமதி செய்ய ஒப்புதல் வழங்கியிருக்கிறது. எகிப்தில் அவசர நிலை பிரகடனம், ஆட்சி கவிழ்ப்பு, இஸ்லாமியர்கள் சிறையில் அடைக்கப்பட்டது போன்ற பல மனித உரிமை மீறல்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டிற்கு 187.17 லட்சம் கோடி மதிப்பில் ஆயுதங்கள் விற்பனை செய்ய அமெரிக்க அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இதில், 164.17 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட 12 சூப்பர் ஹெர்குலிஸ் சி-130 போக்குவரத்து விமானம், 26.57 கோடி […]

Categories
சினிமா

“ஓஹோ! இது தா சங்கதியா…? தனுஷை அசிங்கமாக பேசிய ஐஸ்வர்யா…. நடிகைகளால் ஏற்பட்ட சண்டை..!!!

அமெரிக்காவில் வைத்து தனுஷை ஐஸ்வர்யா கேவலமாக பேசி சண்டையிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நடிகர் தனுஷ் மற்றும் அவரின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் 10 நாட்களுக்கு முன் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இந்நிலையில் இவர்களுக்குள் இருந்த பிரச்சனை ஒவ்வொரு நாளும் இணையதளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. மேலும், இருவரும் மகன்களை கருத்தில் கொண்டு உங்களது முடிவை பரிசீலனை செய்யுங்கள் என்று ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனினும் இவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை எல்லை மீறி சென்று விட்டதாகவும், […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”…. உலகிலேயே அதிக வயதுடைய… 4 தலைமுறைகளை கண்ட கொரில்லா மரணம்….

உலகிலேயே அதிக வயதுடைய கொரில்லா மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் அட்லாண்டா உயிரியல் பூங்காவின் நிர்வாகம், ஒஸி என்ற உலகிலேயே அதிக வயதுடைய கொரில்லா இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்திருக்கிறது. இந்த ஒஸி, பேரன் கொள்ளுப்பேரன், என்று நான்கு தலைமுறைகளை கண்டுவிட்டது. தற்போது 61 வயதாகும் ஒஸி திடீரென்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவு வந்த பின் ஒஸியின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒஸி, கடந்த வருடம் கொரோனா பாதித்து, அதிலிருந்து மீண்டு […]

Categories
உலக செய்திகள்

இவங்க என்ன சாப்பிடலாம்னு சொல்லுங்க…. 7 கோடி வெல்லுங்க… நாசா அசத்தல் அறிவிப்பு…!!!

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையமானது, விண்வெளி வீரர்களுக்கு தகுந்த சாப்பாடு வழங்க ஐடியா தந்தால் 7.4 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. விண்வெளிக்கு செல்லக்கூடிய வீரர்கள் அங்கு அதிகமான சவால்களை சந்திப்பார்கள். அங்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், உணவுகள் மற்றும் உடைகள் போன்ற எல்லாவற்றிலும் அதிக கட்டுப்பாடுகள் இருக்கிறது. மேலும் அவர்களுக்கென்று சிறப்பாக உணவுகள் தயார் செய்யப்படுகிறது. What's cookin'? Seriously, we want to know. Phase 2 of the Deep Space […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! அடுத்து கிளம்பிருச்சு… கொத்துகொத்தா சாகுறாங்க… பதறும் பிரபல நாடு…!!

அமெரிக்காவில் கொரோனாவின் டெல்டா வகை மாறுபாட்டை போன்றே ஓமிக்ரானால் தற்போது நாளொன்றுக்கு 2000 பேர் உயிரிழக்கிறார்கள் என்ற அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. தென்னாபிரிக்காவின் முதல் முதலாக தோன்றிய ஓமிக்ரான் தற்போது உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவின் முந்தைய மாறுபாடான டெல்டாவை போன்றே தற்போது உலக நாடுகளுக்கு பரவும் ஓமிக்ரானால் அமெரிக்காவில் நாளொன்றுக்கு 2,000 பேர் உயிரிழக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஓமிக்ரானால் அமெரிக்காவில் தற்போது வரை சிகிச்சை பலனின்றி 8,66,000 […]

Categories
உலக செய்திகள்

“பெற்றோர்களே கவனமா இருங்க!”…. குழந்தைகளை பறிக்கும் பெண்…. பிரபல நாட்டில் பகீர் சம்பவம்….!!!!

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸில் தாய் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு அவருடைய கையில் வைத்திருந்த ஒரு வயது குழந்தையை பார்த்த Rebecca Lanette Taylor (வயது 49) என்ற பெண் அவர்களை நெருங்கி சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுவனின் தங்க நிற தலை முடியும், நீலநிறக் கண்களும் அழகாக உள்ளது. அவனுடைய விலை என்ன ? என்று சிறுவனின் தாயிடம் Rebecca கேட்டிருக்கிறார். அதனை வேடிக்கையாக எடுத்துக் கொண்ட அந்த […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவில் பயங்கரம்!”… ஆசையாக பேசி அழைத்த பெண்!”… மயங்கிய இளைஞர்… இறுதியில் நேர்ந்த கொடூரச்சம்பவம்….!!!

அமெரிக்காவில் ஒரு இளம்பெண், இளைஞரை ஆசைக்காட்டி அழைத்து சென்று, ஒரு உயிரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் நியூ மெக்ஸிகோ என்னும் பகுதியில் வசிக்கும் நிகோலஸ் என்ற இளைஞர் அனபெல்லா என்ற 18 வயது இளம் பெண்ணுடன் இணையதளத்தில் அறிமுகமாகி இருக்கிறார். அதன்பின்பு, அனபெல்லா அந்த இளைஞரிடம் ஆசையாக பேசி அருகில் இருக்கும் ஒரு பூங்காவிற்கு வரவழைத்திருக்கிறார். அங்கு நிகோலஸ் சென்றவுடன், அந்தப் பெண்ணுடன் இளைஞர்கள் மூவர் இருந்திருக்கின்றனர். அவர்கள், நிக்கோலஸிடம் நகை மற்றும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீது படையெடுத்தால்…. அவ்வளவு தான்…. ஜோ பைடன் கடும் எச்சரிக்கை…!!!

உக்ரைன் மீது போர் தொடுத்தால், ரஷ்யா கடும் சந்திக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, போர் உண்டாவதை நாங்கள் விரும்பவில்லை. அமைதியான நிலையை உண்டாக்குவதற்குரிய  நடவடிக்கைகளை செய்தால், அதை நாங்கள் ஆதரிப்போம் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா, உக்ரைனை தன் நேட்டோ கூட்டணியில் இணைக்க முயல்கிறது. அதனை, உக்ரைன் அரசும் விரும்புகிறது. ஆனால் ரஷ்யா, தன் பக்கத்து நாடான உக்ரைன், நேட்டோ கூட்டணியில் இணைந்தால், அது […]

Categories
உலக செய்திகள்

“அடடே! என்ன வீடு”….. முக்கிய அம்சமே டாய்லெட் தா… எத்தனை கோடி தெரியுமா…?

அமெரிக்காவில் 3.36 கோடி விற்பனைக்கு வந்த வீட்டில் நான்கு கழிப்பறைகள் இருப்பது பலரை கவர்ந்துள்ளது. அமெரிக்காவில் இருக்கும் விஸ்கான்சின் என்னும் மாகாணத்தில் அமைந்திருக்கும் ஒரு வீட்டில் 6 படுக்கையறைகள், முழு வசதியுடன் 2 குளியலறைகள், பாதி வசதியுடன் 2 குளியலறைகள் என்று மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கிறது. இந்த வீட்டின் முக்கிய அம்சமே கழிப்பறைகள் தான். அதாவது ஒரு பாத்ரூமுக்கு 4 கழிப்பறைகள் இருக்கிறது. அதிலும் எந்த தடுப்பு சுவரும் இன்றி, சிறிய இடைவெளிகளில் நாற்காலிகள் போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

“நடுக்கடலில் பதற்றம்!”…. 39 பேர் மாயம்… வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

அமெரிக்காவில் அகதிகளின் படகு கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 39 பேர் மாயமான சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் இருக்கும் மியாமி பகுதியில் கடலோர காவல் படையினர் சோதனை பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது ஒரு படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனை பார்த்த, காவல்படையினர் உடனடியாக அங்கு சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு நபரை மீட்டனர். இது பற்றி அந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. […]

Categories
உலக செய்திகள்

73-ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா…. அமெரிக்க அரசு வாழ்த்து…!!!

இந்திய நாட்டின் 73 வது குடியரசு தின விழாவிற்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்திருக்கிறது. இந்தியாவிற்கு இது 75-வது சுதந்திரதின வருடம். இந்த வருடத்தில், இன்று 73 வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. எனவே, தலைநகர் டெல்லியில் இருக்கும் ராஜபாதையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார். அதன்பின்பு 21  குண்டுகளின் முழக்கத்துடன் தேசியகீதம் ஒலித்தது. அதற்கு முன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து […]

Categories
உலக செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. “இனி போன்லயே கொரோனா டெஸ்ட்”…. அசத்திய விஞ்ஞானிகள்….!!!!

செல்போனில் கொரோனா பரிசோதிக்கும் முறை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், செல்போனில்  கொரோனா பரிசோதனை செய்வதற்கான வழிமுறையை கண்டறிந்துள்ளனர். இம்முறை, ஹார்மனி கொரோனா பரிசோதனை எனப்படுகிறது. இதில், சார்ஸ் கோவ்-2 வைரஸிற்கான  மரபணுப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பேரி லூட்ஸ் தெரிவித்திருப்பதாவது, குறைவான விலையில், எந்த இடத்திலும் பயன்படும் அளவிற்கு எளிய முறையில் இந்த பரிசோதனையை கண்டறிந்திருக்கிறோம். இந்த பரிசோதனை உலகம் முழுக்க அணுகக்கூடிய வகையில் இருக்கும். […]

Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ!”… மைக் ஆன்லையா இருந்துச்சி… வசமா மாட்டிய ஜோபைடன்… வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பணவீக்கம் தொடர்பில் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை ஒருமையில் திட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறார். அப்போது கடைசியாக ஒரு பத்திரிக்கையாளர், நாட்டில் பணவீக்கம் அதிகரித்து கொண்டிருப்பது குறித்து கேள்வி கேட்டிருக்கிறார். பத்திரிகையாளர்கள் சந்திப்பு முடிந்துவிட்டதால் மைக் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது என்று கருதிய, ஜோ பைடன் அந்த பத்திரிக்கையாளரை, “அது மிகப்பெரிய சொத்து., அதிக பணவீக்கம், முட்டாள்” என்று ஒருமையில் […]

Categories
உலக செய்திகள்

பத்திரிகையாளர் கேட்ட கேள்வி …”கோபத்தில் முணுமுணுத்த ஜோ பைடன்”… அதிர்ச்சியான செய்தியாளர்கள்…!!!

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிதானத்தை இழந்து  திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலைவாசி உயர்ந்து வருவதை கட்டுப்படுத்த சில விதிகளில் மாற்றம் செய்வதற்காக வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது” 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்து உள்ளது” என ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்தின் பத்திரிக்கையாளர்  பீட்டர் டூசி கேள்வி எழுப்பினார். இதனால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோபம் அடைந்தார். முணுமுணுத்தபடி அவர் பத்திரிக்கையாளரை திட்டும் பொழுது […]

Categories
உலக செய்திகள்

தென் சீன கடல் பகுதியில் பதற்றம்…. விபத்துக்குள்ளான போர் விமானம்…. காயமடைந்த வீரர்கள்…!!!

தென் சீன கடல் பகுதியில், அமெரிக்காவை சேர்ந்த போர் விமானம் விபத்துக்குள்ளாகி 7 வீரர்கள் காயமடைந்திருக்கிறார்கள். சீனா, தென் சீன கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதை தடுப்பதற்காக அங்கு அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் சோதனை பணியை மேற்கொண்டு வருகின்றன. மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த போர் விமானங்களும் சோதனை பணியில் இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த யுஎஸ்எஸ் கர்ல் வின்சன் என்ற போர்கப்பல், பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்தது. அப்போது பயிற்சிக்குப் பின், எஃப் 35சி வகை போர் […]

Categories
உலக செய்திகள்

இங்க உங்க வாலை ஆட்டாதீங்க… ! ”ஒட்ட நறுக்கிடுவோம்” சீனாவை எச்சரித்த அமெரிக்கா ..!!

தைவான் விவகாரம் தொடர்பாக சீனாவுக்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனா ஏற்கனவே தைவானை தன் நாட்டின் ஒரு பகுதியாக கருதி வருகிறது. இந்த நிலையில் அணுவாற்றலால்  இயங்கும் தன்மைகொண்ட விமானம் தாங்கி கப்பல்கள் இரண்டை அமெரிக்க கடற்படை பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள கடற்பகுதிக்கு அனுப்பி திடீரென போர் பயிற்சியை நடத்தியது. அதேபோல் ஜப்பானிய போர் கப்பலும் அமெரிக்க போர் கப்பலுடன் இணைந்து விமான பயிற்சியில் ஈடுபட்டது. இது தைவான் நாட்டின் உள்விவகாரத்தில் சீனா தேவைல்லாமல் தலையிட […]

Categories
உலக செய்திகள்

உலகில் 35 கோடி பேர் பாதிப்பு… தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா… வெளியான தகவல்…!!!

உலகம் முழுக்க கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 கோடியை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை புரட்டிப் போட்டு வரும் கொரோனா தொற்று உருமாறி பரவிக்கொண்டிருக்கிறது. உலக அளவில் மொத்தமாக 35,01, 26, 907 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 56, 14, 788 பேர் பலியாகியுள்ளனர். மேலும் தற்போது வரை 27, 98, 52,23 நபர்கள் முழுமையாக கொரோனாவிலிருந்து குணமடைந்து இருக்கிறார்கள். மேலும் உலக அளவில் கொரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளான நாடு அமெரிக்கா […]

Categories
உலக செய்திகள்

“பட்டப்பகலில் பயங்கரம்!”….. சாலையில் சிறுமியை கொன்ற கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்காவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் வசிக்கும் Melissa என்ற 8 வயது சிறுமி நேற்று முன்தினம் அவரின் தாயோடு சாலையில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது சில மர்ம நபர்கள் ஒரு இளைஞரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அப்போது தவறுதலாக சிறுமி மீது குண்டு பாய்ந்தது. அதன்பிறகு சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுமி […]

Categories
உலக செய்திகள்

மக்களே..! விருந்துக்கு போனா “இனி ஜாக்கிரதை”…. சி.சி.டி.வியில் தூக்குமா போலீஸ்…? நள்ளிரவில் பதறிய மக்கள்….!!

அமெரிக்காவில் விருந்து நடைபெற்ற வீடு ஒன்றில் மர்ம நபர்கள் நள்ளிரவில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் என்னும் பகுதியிலிருக்கும் வீடு ஒன்றில் இரவு நேரத்தில் விருந்து நடைபெற்றுள்ளது. இந்த விருந்தின்போது நள்ளிரவில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்கள். இந்தத் துப்பாக்கிச் சூட்டினால் விருந்தில் பங்கேற்ற 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இதுகுறித்து தகவல்றிந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார்கள். […]

Categories
உலக செய்திகள்

வெட்டப்பட்ட கையை வைத்துக்கொண்டு ஓடி வந்த நபர்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்…!!

அமெரிக்காவில் வெட்டப்பட்ட தன் ஒரு கையை மற்றொரு கையில் வைத்துக்கொண்டு அலறியடித்தபடி ஓடி வந்த நபரால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் Lewiston என்னுமிடத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சந்தையில் பணியாற்றிய நபர் திடீரென்று அலறியடித்துக்கொண்டு ஓடி வந்திருக்கிறார். மேலும் அவரின் கையில் வெட்டப்பட்ட அவரின் மற்றொரு கையை வைத்திருந்திருக்கிறார். இதைப்பார்த்த பொதுத்துறை ஊழியர்கள் இருவர் ஓடிச்சென்று அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பொதுத்துறை பணியாளர்கள் தகுந்த நேரத்தில் […]

Categories
உலக செய்திகள்

பெற்றோர்களே ALERT: பிள்ளைங்க முன்னாடி “போன் யூஸ்” பண்ணாதீங்க…. “2 வயது குழந்தையால்” வந்தது பாரு பெருசா…. ஷாக்கான தம்பதியர்கள்….!!

அமெரிக்காவிலுள்ள 22 மாத குழந்தை ஒன்று தனது தாயின் இணையத்தை பயன்படுத்தி 1.4 லட்சம் மதிப்புடைய மரச்சாமான்களை ஆர்டர் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பிரமோத் மற்றும் மது என்ற தம்பதியினர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அலெக்ஸ் குமார் என்ற 22 மாத குழந்தை ஒன்று உள்ளது. இதனையடுத்து குமார் தனது தாய் இணையத்தை பயன்படுத்துவதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது தாய் செய்வது போலயே 22 மாத குழந்தையான குமார் […]

Categories
உலக செய்திகள்

அடப்பாவிகளா….! “இதெல்லாம் ரொம்ப ஓவர்”…. இதுக்கு 2000 ம்மா…? நாங்க “ரோட்டு கையிலேயே” வாங்குவோம்…. இணையத்தில் கொந்தளித்த இந்தியர்கள்…!!

அமெரிக்காவில் shop alley என்ற நிறுவனம் இந்தியர்கள் குளிர் காலங்களில் அதிகமாக பயன்படுத்தும் monkey cap பை 2,000 த்துக்கு விற்பனை செய்துள்ளது. அமெரிக்காவிலுள்ள shop alley என்ற நிறுவனம் குளிர்காலங்களில் இந்தியர்கள் பயன்படுத்தும் monkey கேப்பை 2000 ரூபாய்க்கு ஆன்லைனில் விற்பனை செய்துள்ளது. இதனால் கொந்தளித்த இந்தியர்கள் இணையத்தில் தங்களது கருத்தை பதிவிட்டுள்ளார். அதாவது சாலையோர கடைகளில் இந்த மங்கி கேப் 100 முதல் 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்கள்.

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவின் அச்சுறுத்தலில் பிரபல நாடு!”…. அக்கறை காட்டும் அமெரிக்கா…. வெளியான முக்கிய தகவல்….!!!!

அமெரிக்கா உக்ரைனுக்கு சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்பில் முதல்கட்டமாக பாதுகாப்பு சாதனங்களை அனுப்பியுள்ளது. அந்த பாதுகாப்பு சாதனங்கள் தற்போது உக்ரைன் தலைநகர் கிவ்-ஐ சென்றடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரஷ்யா தனது படைகளை உக்ரைனின் எல்லையில் நிறுத்தி அந்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்க அரசு கடந்த மாதம் பாதுகாப்பு உதவியினை உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி அமெரிக்கா உக்ரைனுக்கு அணு ஆயுதங்களை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா செல்பவர்கள் கவனத்திற்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

அமெரிக்க நாட்டிற்குள் வரும் அனைத்து கனடா மக்களும் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க அரசு இன்றிலிருந்து தங்கள் நாட்டிற்கு வரும் அனைத்து கனடா மக்கள் மற்றும்  அமெரிக்க குடியுரிமை இல்லாதவர்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறது. அத்தியாவசிய காரணங்கள் அல்லது தேவையற்ற காரணங்களாக என்று எதுவாக இருந்தாலும் அமெரிக்காவிற்குள் நுழைய விரும்பும் அனைவரும் முழுமையாக தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதற்கான ஆதாரம் […]

Categories
உலக செய்திகள்

125 கொடிய விஷப்பாம்புகளுக்கு மத்தியில் கிடந்த உடல்…. மர்ம மரணம்… அமெரிக்காவில் பரபரப்பு…!!!

அமெரிக்காவில் 120 கூண்டுகளில் பயங்கர விஷத்தன்மை கொண்ட பாம்புகளை தன் குடியிருப்பில் வளர்த்த நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அமெரிக்காவில் இருக்கும் Pomfret என்னும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 49 வயதுடைய David Riston என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று இரவு நேரத்தில் அவரின் பக்கத்து வீட்டில் இருப்பவர் david-ஐ முதல் நாள் பார்க்கவில்லை. எனவே, அவரை காண சென்றிருக்கிறார். ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டிற்குள் […]

Categories
உலக செய்திகள்

துயரம்: 5 நாட்கள்… இறந்த தாயுடன் போராடிய “பிஞ்சு குழந்தை”…. பதற வைக்கும் பின்னணி…. பிரபல நாட்டை உலுக்கிய சம்பவம்….!!

அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதி வீடற்றவர்களுக்கான இல்லத்தில் பிறந்து 15 மாதங்களேயான குழந்தை ஒன்று இறந்த தாயாருடன் 5 நாட்கள் போராடிய சம்பவம் தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தில் 26 வயதுடைய shelbi என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 4 மாதங்கள் தனது கணவரிடமிருந்து பிரிந்து வீடற்றவர்களுக்கான இல்லத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதி shelbi அதிக மருந்தினை உட்கொண்டு […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 3 லட்சம் பேர் பாதிப்பு…. அமெரிக்காவில் தீவிரமடையும் கொரோனா…!!!

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 3.12 லட்சம் நபருகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அங்கு கடந்த ஒரே நாளில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 314 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அங்கு மொத்தமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியுள்ளது. கடந்த ஒரே நாளில் 841 நபர்கள் கொரோனா தொற்று பாதித்து பலியாகியுள்ளனர்.

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

அடுத்தடுத்து மோதிய கார்….. “தப்பிய பிரபல ஹாலிவுட் ஹீரோ அர்னால்ட்டு”… நடந்தது என்ன?

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சென்ற கார் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட்டில் பிரபலமான நடிகராக இருப்பவர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர். உலக அளவில் பிரபலமான இவர் தற்போது படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் அர்னால்டு சென்ற கார் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியது. அர்னால்டு சென்ற காரின் முன்பாக சென்ற இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதனால் பின்னால் […]

Categories
உலக செய்திகள்

“ஆஹா! அசத்தல்”…. 10 மணி நேரங்களாக நடந்த அறுவை சிகிச்சை… பிரிக்கப்பட்ட இரட்டை குழந்தைகள்…!!!

அமெரிக்காவில் ஒட்டி பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் பத்து மாதங்களுக்கு பிறகு அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் லில்லியானா மற்றும் ஃபிலடெல்ஃபியாவில் ஏடி ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி பிறந்திருக்கிறது. இரண்டு குழந்தைகளும் வயிறு மற்றும் மார்பு பகுதிகள் ஒட்டிய நிலையில் இருந்தது. இந்நிலையில், குழந்தைகள் பிறந்து 10 மாதங்கள் கடந்த பின் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக இரண்டு குழந்தைகளும் பிரிக்கப்பட்டிருக்கிறது. சுமார், 10 மணி நேரங்களாக அறுவை சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

“நெஞ்சம் பதறுது!”…. 4 இந்தியர்கள் குளிரில் உறைந்து பலி… கனடா பிரதமர் வேதனை…!!!

அமெரிக்கா மற்றும் கனடா எல்லைப்பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கடும் பனியில் உறைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரமாக இருக்கிறது என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ கூறியிருக்கிறார். கனடா நாட்டிலிருந்து எல்லை பகுதி வழியே அமெரிக்க நாட்டிற்குள் நுழைய முயற்சித்த இந்தியர்கள் 5 பேரை எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் வழிமறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் ஒரு நபர் எங்களை அழைத்து வந்ததாக தெரிவித்தனர். மேலும், 11 மணி நேரங்களாக நடந்து வந்து கொண்டிருக்கிறோம் […]

Categories
உலக செய்திகள்

பெரும் அதிர்ச்சி….. கடும் பனியில் உறைந்து உயிரிழந்த குடும்பம்… கனடா எல்லையில் பரிதாபம்…!!!

அமெரிக்கா-கனடா எல்லையில் கைக்குழந்தை உட்பட நால்வர் கடுமையான பனியில் உறைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவின் எல்லை பகுதிக்குள் உறைந்து போன நிலையில் உயிரிழந்து கிடந்த 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. இவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பில் மனித கடத்தல் கும்பலை சேர்ந்த ஒரு நபரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அமெரிக்க நாட்டின் எல்லை பகுதிக்கு அருகில் கனடாவின் எல்லைக்குள் கைக்குழந்தை உட்பட நான்கு […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் பதற்றம்…. புறப்பட்ட இடத்திற்கே திரும்பி சென்ற விமானம்… என்ன காரணம்…?

விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது ஒரு பயணி முகக்கவசம் அணியாததால் புறப்பட்ட இடத்திற்கே விமானம் திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் ஜெட்லைனர் விமானம் 179 பயணிகள் மற்றும் 14 விமான பணியாளர்களுடன்  மியாமியிலிருந்து லண்டன் புறப்பட்டிருக்கிறது. நடுவானத்தில் விமானம் சென்றுகொண்டிருந்த போது ஒரு பயணி முகக்கவசம் அணியாமல் இருந்திருக்கிறார். எனவே, விமான பணியாளர்கள் அவரிடம் முகக்கவசம் அணியுமாறு கூறியுள்ளனர். எனினும், அதனை அவர் கண்டுகொள்ளவில்லை. எனவே, வேறு வழியில்லாமல் விமானம் மீண்டும் மியாமிக்கு திரும்பியிருக்கிறது. அங்கு, […]

Categories
உலக செய்திகள்

5G சேவை எதிரொலி…. அமெரிக்காவுடனான 8 விமான சேவைகள் ரத்து….. ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி….!!!

ஏர் இந்தியா நிறுவனம் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே 8 விமான சேவைகளை ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் புதிதாக 5G மொபைல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் விமானம் பயணிப்பதற்கு தேவையான அதிநவீன கருவிகளில் பாதிப்பு ஏற்படும் என்று தெரியவந்தது. எனவே, அச்சத்தில் விமான நிலையங்கள் அமெரிக்காவுடனான விமான சேவைகளை ரத்து செய்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவிற்குரிய ஏர் இந்தியா நிறுவனமானது அமெரிக்க நாட்டுடனான 8 விமான சேவைகளை ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

உலகில் மொத்தம் எத்தனை பேருக்கு கொரோனா….? வெளியான தகவல்….!!!

உலக நாடுகளில் மொத்தமாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 33.89 கோடியாக உயர்ந்திருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தடுப்பு செலுத்தும் பணிகள்  தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக நாடுகளில் மொத்தமாக 33 கோடியே 89 லட்சத்து 73 ஆயிரத்து 839 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஒரே நாளில் கொரோனா தொற்று அதிகம் பதிவான நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்கா இருக்கிறது. இரண்டாம் இடத்தில் இந்தியா […]

Categories
உலக செய்திகள்

இதோ வந்துட்டு “அடுத்த வீடியோ”…. வழக்கு தொடர்ந்த பிரபல நிறுவனம்…. பதிலடி கொடுத்த அமெரிக்கா….!!

ஆப்கானிஸ்தானின் தலைநகரில் கடந்தாண்டு ஐ.எஸ் தீவிரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதலுக்கு தங்கள் நாட்டின் உளவுத்துறை கொடுத்த பதிலடி தொடர்பான வீடியோவை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரிலுள்ள விமான நிலையத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்கள் கடந்தாண்டு அதிபயங்கர தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் உளவுத்துறை ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் சிக்கி 7 குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இதுதொடர்பாக நடந்த விசாரணையில் அமெரிக்கா ட்ரோன் […]

Categories
உலக செய்திகள்

WARNING: “இங்கெல்லாம்” கொரோனா வெயிட் பண்ணுது… யாரும் எட்டி கூட பார்க்காதீங்க… பிரபல நாட்டின் பரபரப்பு தகவல்…!!

கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல் ஆஸ்திரேலியா உட்பட 22 நாடுகளை அமெரிக்கா பயணப் பட்டியலில் மிகவும் ஆபத்தான பகுதியில் சேர்த்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா மீண்டும் தலைதூக்கியுள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டுவருகிறார்கள். அதன்படி அமெரிக்கா தங்கள் நாட்டு மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது அமெரிக்கா கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இஸ்ரேல், ஆஸ்திரேலியா உட்பட 22 நாடுகளை பயணப் பட்டியலில் […]

Categories
உலக செய்திகள்

5G சேவையால் உண்டான பிரச்சனை…. அமெரிக்க விமான சேவையில் மாற்றம்… ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு…!!

அமெரிக்காவில் 5G மொபைல் சேவை தொடங்கயிருக்கும் நிலையில் இந்தியாவிலிருந்து செயல்படுத்தப்படும், ஏர் இந்தியாவின் சில விமானங்கள் தற்காலிகமாக செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டில் 5G மொபைல் சேவை தொடங்கப்படவிருந்தது. இந்நிலையில், மொபைல் சேவை அலைக்கற்றைகள் மூலமாக, விமானத்தின் சேவையில் பாதிப்பு ஏற்படும். மேலும் விமானத்தில் இருக்கும் அதிநவீன பாதுகாப்பு கருவிகளுக்கும் பாதிப்பு உண்டாகும் என்று விமான நிறுவனங்கள் குற்றச்சாட்டுகள் வைத்தது. இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம், 5ஜி சேவையால் ஏற்படும் பாதிப்பால் அமெரிக்க நாட்டுடனான, தங்களின் […]

Categories
உலக செய்திகள்

5G மொபைல் சேவையால் பிரச்சனை…. அமெரிக்க விமானங்கள் ரத்து… அதிரடியாக அறிவித்த துபாய்…!!!

அமெரிக்க நாட்டில் புதிதாக நிறுவப்பட்டிருக்கும் புதிய சி பேண்ட் 5-ஜி சேவை விமானங்களின் பயண உயரத்தை காண்பிக்கும் அல்டி மீட்டர் கருவிக்கு பாதிப்பை உண்டாக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ, மியாமி, ஆர்லண்டோ, டல்லாஸ், பாஸ்டன் மற்றும் சியாட்டில் போன்ற பல நகர்களின் விமான சேவை இதன் காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக துபாய்க்குரிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. எனினும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் விமானங்கள் செயல்படும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் சீனர்களை வெறுக்கும் அமெரிக்கர்கள்…. கொலை செய்யப்பட்ட சீனப்பெண்…!!!

நியூயார்க் நகர தண்டவாளத்தில், தள்ளி விடப்பட்டு உயிரிழந்த சீன பெண்ணின் நினைவஞ்சலிக்கு வந்தவர்கள் சீன மக்களை வெறுக்கும் மனப்பான்மையை கைவிடுங்கள் என்று வலியுறுத்தினர். கொரோனா தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து அமெரிக்க மக்களுக்கு, சீன மக்கள் மீது இருக்கும் வெறுப்பு பல மடங்காக அதிகரித்திருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. இந்நிலையில் சீன வம்சாவளியைச் சேர்ந்த 40 வயதுடைய மிச்சல் கோ என்ற பெண், காலை நேரத்தில் அலுவலகத்திற்கு செல்வதற்காக நியூயார்க் ரயில் நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது, ஒரு நபர் அந்த பெண்ணை […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவோடு வாழ பழகுங்கள்!”…. அமெரிக்க நிபுணர்கள் வெளியிட்ட தகவல்….!!!

கொரோனா தொற்றுடன் வாழ பழக வேண்டும் என்று அமெரிக்காவின் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். உலக நாடுகளில் ஒமிக்ரான் தொற்று பரவிக்கொண்டிருக்கிறது. எனவே, தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், ஒமிக்ரான் தொற்று அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது. தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், உயிரிழப்பு ஏற்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலாண்டு பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் பிரிவு தலைவரான பஹீம் யூனுஸ், கொரோனோ தொற்றுடன் வாழ்வதற்கு நாம் பழக வேண்டும் என்று கூறியிருக்கிறார். மேலும், தரமான […]

Categories
உலக செய்திகள்

தற்போதைய நிலவரப்படி…. மீண்டும் 2-வது இடத்தில் “இந்தியா”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா மனித இனங்களுக்கு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கான கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதனைத் […]

Categories
உலக செய்திகள்

பனிப்போர் மனநிலையை கைவிடுங்கள்…. அது ஒருபோதும் தீர்வாகாது…. -சீன அதிபர்….!!!

சீன அதிபர் ஸி ஜின்பிங் உலகம், பனிபோர் மனநிலையிலிருந்து நீங்கி அமைதி மற்றும் பரஸ்பர வெற்றியை நோக்கி நகர வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். உலக பொருளாதார அமைப்பு மாநாட்டில் காணொளி வாயிலாக கலந்து கொண்ட சீன அதிபர் ஸி ஜின்பிங் பேசியதாவது, பிரத்யேகமான சிறிய அமைப்பு போன்று செயல்படும் சில நாடுகள் உலகை கட்டுப்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினார். மேலும், அவர் கூறியதாவது, ஆதிக்கம் மற்றும் மோதல் நிலை அதிகரித்திருக்கிறது. இது பிரச்சனைகளுக்கான முடிவை தராது என்று […]

Categories
உலக செய்திகள்

“அடப்பாவிகளா!”…. சரக்கு ரயிலையும் விட்ட வைக்கலயா….? மொத்தமா ஆட்டைய போட்ட திருடர்கள்….!!!

அமெரிக்காவின் யூனியன் பசிபிக் ரயில் நிறுவனமானது, சரக்கு ரயில்களில் பொருட்கள்  திருடப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவில் சரக்கு ரயில்களில் திருடப்பட்டிருப்பதாக யூனியன் பசிபிக் என்ற ரயில் நிறுவனம் கூறியிருக்கிறது. சரக்கு ரயில்களில் இருக்கும் கண்டெய்னர்களின் பூட்டை உடைத்து அதில் இருக்கும் பொருட்களை திருடிவிட்டு, வெறும் பெட்டிகளை திருடர்கள் தூக்கி வீசுகிறார்கள். அவ்வாறு தூக்கி வீசப்பட்ட காலி பெட்டிகளை சிலர் புகைப்படம் எடுத்து இணையதளங்களில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் மட்டும் வருடத்திற்கு சுமார் 160% திருட்டு அதிகரித்திருக்கிறது […]

Categories

Tech |