Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு….! ரஷ்யாவிற்கு உதவி செய்தால்…. சீனாவுக்கு இதுதான் கதி…. எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா….!!!

ரஷ்யாவிற்கு உதவி செய்தால் உலக நாடுகளிலிருந்து சீனா தனித்து விடப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.  உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், சீனாவின் உயர்மட்ட தூதரக அதிகாரி யாங் ஜீச்சியை இத்தாலி தலைநகர் ரோமில் வைத்து சந்தித்து பேசியுள்ளார். அதில் “ஜேக் சல்லிவனிடம் ரஷ்யாவிற்கு ஆதரவு அளிக்க நினைப்பதை மாற்றிக்கொள்ளுங்கள். ரஷ்யாவை […]

Categories
உலக செய்திகள்

என்னது? எங்களிடம் ஆயுதங்கள் கேட்டார்களா…? அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுக்கும் சீனா..!!!

சீன அரசு உக்ரைனில் தாக்குதலை அதிகரிக்க ரஷ்யா தங்களிடம் ராணுவ உதவி கேட்டதாக கூறப்படும் தகவல் பொய் என்று கூறியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 19-ஆவது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. ரஷ்யப்படைகள், அந்நாட்டின் பல நகர்களில் தீவிரமாக தாக்குதல் முன்னெடுத்து வருவதால் அதிக உயிர்ப்பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனிடையே அமெரிக்கா, உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக தாக்குதல் மேற்கொள்ள சீனாவிடம் ராணுவ உதவிகளை ரஷ்யா கேட்டதாக குற்றம்சாட்டி இருக்கிறது. மேலும் அமெரிக்க அதிகாரிகள் ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

இது நல்ல இருக்கே…. “பிரபல நாட்டில் பச்சை நிறமாக ஜொலிக்கும் நதி”…. என்ன காரணம்?…. நீங்களே பாருங்க…!!!

இலினாய்ஸ் மாநிலத்தில் புனித பேட்டரி  திருவிழாவை முன்னிட்டு பச்சை நிறமாக ஜொலிக்கும் சிகாகோ நதி. அமெரிக்க நாட்டின் இலினாய்ஸ் மாநிலத்தில் ஆண்டு தோறும் மார்ச் 17ஆம் தேதி புனித பேட்டரி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையில் பச்சை நிற ஆடை அணிந்து மக்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் இந் நிகழ்ச்சிக்காக சிகாகோ நதியில் பெரிய படகுகள் மூலம் பச்சை நிற சாயம் கலக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த சாயம் நதியை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரம்… குடியிருப்பில் எரிந்த தீ…. 2-ஆம் மாடியிலிருந்து வீசப்பட்ட குழந்தை…!!!

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதால் இரண்டாவது மாடியிலிருந்து ஒரு நபர் தன் குழந்தையை கீழே தூக்கி வீசியிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கீழ்தளத்தில் திடீரென்று தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மேல்தளத்தில் இருந்தவர்கள் வெளியில் வர முடியாமல் தவித்து வந்தனர். உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த முயன்றனர். எனினும், அதிக அளவில் தீ பரவத் தொடங்கியது. உடனடியாக தீயணைப்பு […]

Categories
உலக செய்திகள்

நெதர்லாந்தின் அமெரிக்க தூதராக இந்திய பெண்… அமெரிக்க அதிபர் ஜோபைடன் அறிவிப்பு…!!!

நெதர்லாந்து நாட்டிற்கான அமெரிக்க தூதராக இந்திய பெண்ணை அதிபர் ஜோ பைடன் நியமித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தன் அரசாங்கத்தில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதன்படி, அமெரிக்க அரசாங்கத்தின் பல அதிகாரமிக்க பொறுப்புகளில் இந்திய வம்சாவளியினர் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது இந்திய பெண்ணை அதிபர் ஜோபைடன் நெதர்லாந்து நாட்டிற்கான அமெரிக்க தூதராக நியமனம் செய்திருக்கிறார். இந்தியாவைச் சேர்ந்த ஷெபாலி ரஸ்தான் துகல் என்ற 50 வயது பெண் காஷ்மீரிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்திருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை…. வடகொரியாவிற்கு அமெரிக்கா பொருளாதாரத்தடை…!!!

வடகொரியா கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனையை மேற்கொண்டதற்கு அமெரிக்கா புதிதாக பொருளாதார தடைகளை விதித்திருக்கிறது. வடகொரியா கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை முழுவீச்சில் செலுத்த சோதனை மேற்கொண்டிருப்பதாகவும் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு சோதனைகளும் அதற்குரிய முயற்சிகள் என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டியது. கடந்த 2020 ஆம் வருடம் இராணுவ அணிவகுப்பு நடந்த சமயத்தில், ஹ்வாசோங்-17 என்ற வடகொரியாவின் மிகப்பெரிய ஏவுகணை முதல் தடவையாக காட்சிப்படுத்தப்பட்டது. அந்த ஏவுகணை ஆயுதங்களை தாங்கிச் செல்லக்கூடிய வகையில் […]

Categories
உலக செய்திகள்

உயரிய அந்தஸ்தை இழக்கும் ரஷ்யா…. அமெரிக்க அதிபரின் அதிரடி அறிவிப்பு…!!!

ரஷ்யா விரும்பத்தக்க நாடுகளின் பட்டியலில் இருந்து நீங்கப்படுவதாக அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.  உக்ரைன்  மீதான போரை தொடர்ந்து ரஷ்யா மீது பல்வேறு கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அரேபிய ஒன்றியம் ஜி 7 நாடுகளுடன் இணைந்து மிகவும் விரும்பத்தக்க நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்குவதாக கூறி உள்ளது. இதற்கான அறிவிப்பை அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ரஷ்ய பொருள்களின் மீது இறக்குமதி வரி விதிக்கப் படுவதால் ,அவற்றின் மீது  இறக்குமதி குறைந்து ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள  ரஷ்யாவின் […]

Categories
உலக செய்திகள்

“இவர்கள் போரிட அனுமதி தரப்படும்” …. உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய அதிபர் அறிவிப்பு…!!!

உக்ரைன்  படைகளுக்கு எதிராக விருப்பமுள்ள தன்னார்வலர்களை போரிட அனுமதிக்க விரும்புவதாக ரஷ்ய அதிபர்  கூறியுள்ளார். உக்ரைன் படைகளுக்கு எதிராக விருப்பமுள்ள தன்னார்வலர்களை போரிட அனுமதிக்க விரும்புவதாக ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நடந்த விவாதத்தின்போது டொனேட்ஸ்க் மற்றும் லுஹன்ஸ்க்  பகுதிகளில் உள்ள கிளர்ச்சி படைகளுக்கு உக்ரைன்  பணிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட அமெரிக்க தயாரிப்பு javalin மற்றும் stinger மிசேல் ஆயுதங்களை ஒப்படைக்கலாம் என்ற கோரிக்கையை ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் செர்ஜி முன்வைத்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால்…. விளைவுகள் மோசமாக இருக்கும்…. அமெரிக்க அதிபரின் எச்சரிக்கை…!!!!

உக்ரைனில் ரஷ்யா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா  ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம்  பேசிய ஜோ பைடன் ரஷ்யாவின் வழக்கமான வர்த்தக உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜி 7 மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் சேர்ந்து ரஷ்யாவிற்கு விருப்பமான நாடுகளின் அந்தஸ்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். சர்வதேச […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா பெலாரஸ் நாடுகளுக்கு ஏற்றுமதி தடை… அமெரிக்கா அறிவிப்பு…!!!!

ரஷ்யா மற்றும் பெலாரஸ்  நாடுகளுக்கு ஆடம்பரப் பொருட்கள் ஏற்றுமதியை தடை செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷ்யா பெலாரஸ் போன்ற நாடுகளுக்கு இடையே ஆடம்பரப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இது பற்றி அமெரிக்க வர்த்தக துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிட்ட சில மதுபானங்கள் புகையிலை பொருட்கள், ஆடைகள், நகைகள், வாகனங்கள் மற்றும் பழங்கால பொருட்கள் போன்ற ஆடம்பர பொருட்கள் ஏற்றுமதி மற்றும் பரிமாற்றத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என குறிப்பிடப்பிட்டிருக்கிறது. உக்ரைன் மீதான போர் ஐரோப்பா […]

Categories
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பல்கள் சிறைப்பிடிப்பு…. அமெரிக்கா அதிரடி நடவடிக்கை…!!!

அமெரிக்கா, ஈரான் நாட்டின் எண்ணெய் கப்பல்களை கைப்பற்றியிருப்பதாக தெரிவித்திருக்கிறது. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து, அமெரிக்கா கடந்த 2018 ஆம் வருடத்தில் வெளியேறியது. அப்போதிருந்து இரண்டு நாடுகளுக்குமிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும், அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா சேர்வது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் இருக்கிறது. தற்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஈரான் நாட்டின் மீது இருக்கும் பொருளாதார தடைகளை நீக்க தீர்மானித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஈரான் […]

Categories
உலக செய்திகள்

200 வகை பொருட்களின் ஏற்றுமதி தடை…. அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த ரஷ்யா…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையால் உலக அளவில் உணவுப் பொருட்களுக்கான விலை அதிகரிக்கும் என்று எச்சரித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததால், மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா அந்நாட்டின் மீது கடும் பொருளாதாரத் தடைகளை அறிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் தங்கள் சேவைகளை ரஷ்ய நாட்டில் நிறுத்திக் கொள்வதாக அறிவித்து வருகிறது. இதனால் ரஷ்ய நாட்டின் பொருளாதாரம் வரும் வருடங்களில் கடுமையாக பாதிப்படையும் என்று கூறப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை கண்காணிக்க…. செயற்கைகோள்கள் ஏவப்படும்… வடகொரியா வெளியிட்ட தகவல்…!!!

வடகொரியா, அமெரிக்கா மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளை உளவு பார்க்க விண்ணில் செயற்கைகோள்களை ஏவ இருப்பதாக கூறியிருக்கிறது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தேசிய விண்வெளி மேம்பாட்டு நிர்வாகத்தை ஆய்வு செய்தார். அதன் பிறகு, அவர் கடந்த வருடத்தில் அறிவித்தவாறு ராணுவ உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக கூறியிருக்கிறார். அந்த செயற்கை கோள்கள், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகள் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வடகொரியா இதற்கென்று இரண்டு கட்ட […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு….! ரஷ்யாவின் 280 வாகனங்கள் அழிப்பு…. உக்ரைனுக்கு உதவிய அமெரிக்கா….!!!

ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதால் அதனை அழிக்கும் வகையில் அமெரிக்க ராணுவம் உக்ரைனுக்கு “எப் ஐ எம்-92ஏ” எனப்படும்  ‘ஸ்டின்ஜெர் மிசைல்’ ஆயுதத்தை வழங்கி உள்ளது உக்ரைன் மீது ரஷ்யா ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் விதத்தில் நோட்டா அமைப்பு ராணுவ ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க ராணுவம் உக்ரைனுக்கு உதவும் வகையில்  “எப் ஐ எம்-92ஏ” எனப்படும்  ‘ஸ்டின்ஜெர் மிசைல்’ ஆயுதங்களை வழங்கி உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

வேற லெவல்…. 9 மருத்துவமனைகள், 549 நாட்கள்…. கொரோனாவிடம் இருந்து போராடி மீண்ட நபர்….!!!

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 9 மருத்துவமனைகளில் 549 நாட்களுக்கு பிறகு குணமைடைந்து வீடு திரும்பி உள்ளார்.  சீனாவில் முதன்முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸை தடுப்பதற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதால் தற்போது கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க நாட்டின் நியூமெக்சிகோ மாநிலம் ரோஸ்வெல் நகரைச் சேர்ந்தவர் டானல் ஹண்டர் (வயது 43) . இவருக்கு அக்டோபர் மாதம் 2020 ஆம் ஆண்டு […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு….! ரஷ்யாவின் எச்சரிக்கை…. கண்டுகொள்ளாமல் அதிரடி முடிவு எடுத்த அமெரிக்கா…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள்  இறக்குமதிக்கு தடைவிதித்துள்ளார்.  உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் ரஷ்யா அதிக வருவாயிடும் ஏற்றுமதிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் […]

Categories
உலக செய்திகள்

அய்யயோ….! “மான்களுக்கும் பரவும் தொற்று”…. அமெரிக்க விஞ்ஞானிகள் வெளிட்ட தகவல் ….!!!

நியூயார்கில் வாழும் மான்களுக்கு ஓமைக்ரான் தொற்று உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.  அமெரிக்க நாட்டின் அயோவா மாநிலத்தில் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை அங்கு வாழும் 131 மான்களின் திட்ட மாதிரியை சேகரித்து அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் 19 மான்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்ட 68 மான்களில் மூக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டதில் 7 […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சி…. 300 பேருடன் கடலில் கவிழ்ந்த படகு….!!!

ஹைதி நாட்டை சேர்ந்த சுமார் 300 அகதிகளோடு அமெரிக்காவிற்குள் செல்ல முயற்சித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதி என்ற கரீபியன் தீவு நாட்டில் கடந்த வருடத்தில் அரசியல், பொருளாதார ரீதியில் ஏற்பட்ட குழப்பத்தால் அதிபர் ஜோவினல் மொசி, கூலி படைகளால் கொல்லப்பட்டார். எனவே, அந்நாட்டிலிருந்து மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், ஹைதியை சேர்ந்த சுமார் 300 க்கும் அதிகமான மக்கள் ஒரு படகில் அமெரிக்காவை நோக்கி பயணித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள புளோரிடா […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனை… அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி…!!!

அமெரிக்காவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை, மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியானது, இந்தியா போன்ற இருபதுக்கும் அதிகமான நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், உலக சுகாதார மையமும் அவசரகால  பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. எனினும், தற்போது வரை அமெரிக்கா இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கவில்லை. அந்நாட்டில், கோவேக்சின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் இருந்த சமயத்தில் அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, கடந்த நவம்பர் மாதத்தில் இந்த பரிசோதனையை  […]

Categories
உலக செய்திகள்

குடும்பத்தோடு வெளியேற்றப்பட்ட 50 ரஷ்ய தூதரக அதிகாரிகள்… அமெரிக்கா அதிரடி…!!!

உக்ரைனில் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவிலிருந்து ரஷ்ய தூதரக அதிகாரிகள் 50 பேர் வெளியேற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த 24-ம் தேதியன்று ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 13-வது நாளாக அங்கு தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனால், அமெரிக்கா, ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை அறிவித்தது. மேலும் இந்த பிரச்சனையில், அமெரிக்கா உலகநாடுகளை ரஷ்யாவிற்கு எதிராக திரட்டி வருகிறது. இதனால், அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே மோதல் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைக்கு எதிரான தாக்குதல்…. உக்ரைன் படையில் சேர விரும்பும்… 3000 அமெரிக்கர்கள்…!!!

அமெரிக்காவைச் சேர்ந்த 3000 மக்கள் ரஷ்ய படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்த விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி, ரஷ்ய தாக்குதல்களை சமாளிக்க தங்கள் நாட்டின் சர்வதேச பாதுகாப்பு படையில் சேர்வதற்கு பிற நாடுகளுக்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறார். அதன்படி, அமெரிக்க மக்கள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர்  உக்ரைன் அதிபரின் அழைப்பிற்கு இணங்கி ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிடுவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். இதில் அதிகமானோருக்கு ஈராக், போஸ்னியா போன்ற நாடுகளில் போர் முனையில் தாக்குதலில் ஈடுபட்ட அனுபவம் […]

Categories
மாநில செய்திகள்

அமெரிக்காவில் பயங்கர சூறாவளி… ஆறு பேர் பலி…!!!

அமெரிக்காவின் அயோவா மாகாணத்திலுள்ள மேடிசன் கவுன்ட்டி பகுதியில் பயங்கர சூறாவளி காற்று தாக்கியுள்ளது. இதனால் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் உயிருக்குப் போராடி வருகின்றனர். பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். தற்போது அங்கு மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. முடிந்த பிறகே இறந்தவர்கள் குறித்த தகவல்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Categories
உலக செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை…. வடகொரியாவிற்கு அமெரிக்கா கடும் கண்டனம்…!!!

அமெரிக்கா, வட கொரியா ஏவுகணை சோதனை செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. வட கொரியா, அமெரிக்காவுடன் அணு ஆயுத பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் அடிக்கடி ஏவுகணை பரிசோதனை செய்து பிற நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. அதன்படி, வடகொரியா கடந்த ஜனவரி மாதத்தில் தொடர்ச்சியாக சுமார் எழு தடவை ஏவுகணை சோதனைகளை செய்திருக்கிறது. மேலும், கடந்த பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி அன்று கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணையை வடகொரியா சோதனை செய்திருக்கிறது. இந்நிலையில் மீண்டும் வடகொரியா நேற்று ஏவுகணை […]

Categories
உலக செய்திகள்

“இந்தியா மற்றும் சீனா நினைத்தால் போர் முடிவடையும்!”…. நம்பிக்கை தெரிவித்த உக்ரைன்…!!!

உக்ரைன் அரசு, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் நினைத்தால் போரை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 11-ஆம் நாளாக கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் அரசும் அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பதால் இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. ரஷ்ய படைகள் தொடர்ச்சியாக பீரங்கி தாக்குதல், துப்பாக்கிச் சூடு தாக்குதல், ஏவுகணை தாக்குதல், வெடிகுண்டு தாக்குதல் என்று உக்ரைனை நிலைகுலைய செய்து வருகின்றன. இதனைத்தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி…. குழந்தைகள் உட்பட 6 பேர் பலி…!!!

அமெரிக்காவில் உள்ள அயோவா என்னும் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியில்  குழந்தைகள் உட்பட 6 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள அயோவா மாகாணத்தின் மேடிசன் கவுண்டி என்னும் பகுதியில் மிகப்பெரிய சூறாவளி உருவானது. இதன் தாக்கத்தால், பல குடியிருப்புகள் சேதமடைந்ததோடு குழந்தைகள் உட்பட 6 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சூறாவளி கடந்து சென்ற பின்  பாதிப்படைந்த பகுதிகளில், மீட்பு குழுவினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு  வருவதாக […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுக்கு எதிரான “நியாயமான ஒருங்கிணைப்பை” முன்னெடுப்பார்…. 2 வார சுற்றுப்பயணம்…. தகவல் வெளியிட்ட அமெரிக்கா….!!

ரஷ்யா உக்ரேன் போருக்கு மத்தியில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹரிஷ் அடுத்த 2 வாரத்திற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24 ஆம் தேதி போர்தொடுக்க ஆரம்பித்துள்ளது. அவ்வாறு தொடுக்கப்பட்ட போர் தொடர்ந்து நேற்றோடு 10 ஆவது நாளை எட்டியுள்ளது. இந்த போர் விவகாரத்தில் அமெரிக்கா ரஸ்யாவிற்க்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அது மட்டுமின்றி அமெரிக்கா ரஷ்யாவிற்கு எதிராக உலக நாடுகளை அணிதிரட்டுவதில் முனைப்பு காட்டி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா….! ராணுவத்திற்கு 230 பில்லியன் டாலர்….பட்ஜெட்டில் சீனா ஒதுக்கீடு…!!

கடந்த ஆண்டைவிட சீன ராணுவத்திற்கு 7.1 சதவீதம் கூடுதலாக  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகத்திலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடாக இரண்டாவது இடத்தை  சீனா பிடித்துள்ளது. இந்நிலையில் சீனா அரசு நடப்பு ஆண்டிற்கான வரவு, செலவுத் திட்டங்கள் பற்றிய அறிக்கை ஒன்றை  அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளது. இதனை அடுத்து கடந்த ஆண்டைவிட 7.1 சதவீதம் கூடுதலாக சீன ராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு […]

Categories
உலக செய்திகள்

“திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்”…. ஒருவர் பலி…. பீதியில் மக்கள்…!!

அமெரிக்காவில் நேற்று கேளிக்கை விருது நிகழ்ச்சியில் திடீரென துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் நிவேடா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று இரவு மாடி குடியிருப்பில் கேளிக்கை விருது நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 10 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கேளிக்கை விருது நிகழ்ச்சியில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த […]

Categories
உலக செய்திகள்

“எங்களை நீங்கள் போட்டியாக நினைக்க வேண்டாம்”…. அமெரிக்காவுக்கு பிரபல நாடு வலியுறுத்தல்….!!

அமெரிக்கா சீனாவின் வளர்ச்சியை போட்டியாக கருத வேண்டாம் என்று சீன பத்திரிக்கையாளர் ஜான் யேசுய் கூறியுள்ளார்.  சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களால் மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா சீனாவின் வளர்ச்சியை போட்டியாக கருத வேண்டாம் என்று சீனா கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக சீன நாடாளுமன்றத்தின் பத்திரிக்கையாளர் ஜான் யேசுய் கூறியதாவது. “சீனாவின் வளர்ச்சியை ஒரு சாக்காக பயன்படுத்தியும், போட்டியாளராக நினைத்துக் கொண்டு இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நம்பிக்கையையும், ஒத்துழைப்பையும் சிதைப்பது […]

Categories
உலக செய்திகள்

புடினை கொன்றால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும்… அமெரிக்க எம்பி அதிரடி…!!!

அமெரிக்காவின் எம்பி, புரூட்டஸ், ஜூலியஸ் சீசரை கொன்றதை குறிப்பிட்டு ரஷ்யாவில் புரூட்டஸ் இருக்கிறாரா? என்று கேட்டிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருவதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க செனட்சபையின் மூத்த உறுப்பினரான லிண்ட்சே கிரஹாம், உக்ரைனில் போர் நிறுத்தப்பட வேண்டுமெனில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கொல்லப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார். Is there a Brutus in Russia? Is there a more successful Colonel […]

Categories
உலக செய்திகள்

“ராக்கெட் என்ஜின்கள் இனி உங்களுக்கு வழங்க மாட்டோம்”…. ரஷ்யாவின் அதிரடி முடிவு….!!

அமெரிக்காவுக்கும் ராக்கெட் என்ஜின் ஏற்றுமதியை நிறுத்த ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான முடிவெடுத்துள்ளது.  உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ளதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் ரஷ்யாவிடம் இந்த போரினை நிறுத்துமாறு வலியுறுத்தியது. இதனை ஏற்க மறுத்ததால் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ரஷ்யா மற்றும் அந்நாடு அதிபர் புதின் மீதும் அடுத்தடுத்து பொருளாதார தடைகளை விதித்து வரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சர்வதேச […]

Categories
உலக செய்திகள்

‘டெஸ்ட் டு ட்ரீட்’…. அமெரிக்க அதிபரின் புதிய முயற்சி….!!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ‘டெஸ்ட் டு ட்ரீட்’   என்னும் புதிய முயற்சியை அமைச்சர் ஜோ பைடன் தொடங்கியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா  வைரஸை கட்டுப்படுத்துவதற்காக`டெஸ்ட் டு ட்ரீட்’   என்னும் பெயரில் புதிய முயற்சியை அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் கையில் எடுத்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது இதுகுறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதன்படி அமெரிக்க மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள மருந்தங்களிலேயே கொரோனா  பரிசோதனை செய்து கொள்வதற்கு தேவையான வசதிகளை அரசு ஏற்படுத்தித்தந்துள்ளது. ஒருவேளை அந்த பரிசோதனையின் […]

Categories
உலக செய்திகள்

“நீங்கள் ஐரோப்பியர்கள் என்பதை நிரூபியுங்கள்”….. உக்ரைனின் விண்ணப்பம் குறித்து வாக்கெடுப்பு….!!

உக்ரைன் உலக நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து உக்ரைன் தனியாக நின்று ரஷ்யப் படையினரை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் உலக நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறது. இந்த வகையில் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு ஆதரவு… உக்ரைனுக்குள் நுழைந்த பெலாரஸ் படைகளால் பரபரப்பு …!!

உக்ரைனின் வடக்கு பகுதி வழியாக பெலாரஸ் படைகள் நுழைந்து ரஷ்யாவுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் உக்ரைனுக்கு  இராணுவ உதவிகளை வழங்கி வருவதன் காரணமாக ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் களம் இறங்கலாம்  என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரேனின் வடக்கு பகுதி வழியாக படைகள் நுழைந்துள்ளதாக நாடாளுமன்ற செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

ரஷ்ய விமான நிறுவனங்களின் சேவைகள் நிறுத்தம்… அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு…!!!

அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனம், ரஷ்ய விமான நிறுவனங்களுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 7வது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் ராணுவத் தளங்கள் பெரும்பாலானவை ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, உக்ரேன் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பொதுமக்களும் வீதிகளில் இறங்கி ஆயுதங்களுடன் ரஷ்ய படைகளை எதிர்த்து வருகிறார்கள். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

உச்சத்தை தொட்ட கொரோனா… அந்த நாட்டிற்கு செல்லாதீர்கள்… அமெரிக்க அரசு அறிவிப்பு…!!!

அமெரிக்கா, ஹாங்காங்கில் பெற்றோரிடமிருந்து, பிள்ளைகள் பிரிக்கப்படும் நிலை இருப்பதால் அங்கு பயணிக்க வேண்டாம் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹாங்காங்கில் தற்போது கொரோனா தொற்று உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இதனால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் அங்கு பல மக்கள் பசியில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் ஒவ்வொரு நாளும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அரசு, ஹாங்காங்கிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று தங்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அங்கு […]

Categories
உலக செய்திகள்

“ஊழியர்கள் வெளியேறலாம்”…. பெலாரஸில் தூதரக செயல்பாடுகள் நிறுத்த…. பிரபல நாட்டின்உத்தரவால் பரபரப்பு….!!!

மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் மிக அத்தியாவசிய பணிகளை தவிர்த்து பிற ஊழியர்கள்  தாமாக வெளியேறும்படி அமெரிக்கா  அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யாவின் ஆதரவு நாடான பெலாரஸில் தூதரக செயல்பாடுகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. ரஷ்யாவில் இருந்து வெளியேற விரும்பும் அமெரிக்க தூதரக அதிகாரிகளும் குடும்பத்தினரும் வெளியேறலாம் என அமெரிக்கா கூறியுள்ளது. மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் மிக அத்தியாவசிய பணிகளை தவிர்த்து பிற ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தாமாக வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளது. மேலும் படையெடுப்பிற்கு கடுமையான பதிலடியாக […]

Categories
உலக செய்திகள்

“ஆஹா செம!”… அமெரிக்க இராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை… யார் தெரியுமா…?

முதல்முறையாக தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நடிகை அமெரிக்க ராணுவத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021-ஆம் வருடத்தில் சமூகக் கருத்தை மையமாகக் கொண்டு திகில் திரைப்படமாக வெளிவந்தது, ‘காதம்பரி’. இத்திரைப்படத்தில் அகிலா நாராயணன் என்பவர் கதாநாயகியாக அறிமுகமானார். அமெரிக்காவில் வசிக்கும் இவர் கலை மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்ததால், தனியாக முயற்சி மேற்கொண்டு தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகியிருந்தார். நடிப்பு மட்டுமின்றி பிரபல பாடகியாகவும் இருக்கும் அகிலா நாராயணன், ராணுவத்தில் சேர வேண்டும் என்று தீர்மானித்தார். […]

Categories
உலக செய்திகள்

இதுக்கு முக்கிய காரணமே அமெரிக்கா தான்…. கடுமையாக சாடும் வடகொரியா…!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க முக்கிய காரணம் அமெரிக்கா தான் என்று வடகொரியா குற்றம்சாட்டியிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க தொடங்கி 4-ஆம் நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது வரை, இதில் குழந்தைகள் மூவர் உட்பட 198 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்நிலையில், வடகொரியா, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுக்க மிக முக்கிய காரணம் அமெரிக்கா தான் என்று தெரிவித்துள்ளது. இதுபற்றி வடகொரியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, ரஸ்யாவினுடைய நியாயமான […]

Categories
உலக செய்திகள்

உக்கிரம் அடையும் போர்… 26,000 கோடி ராணுவ உதவி…. அமெரிக்கா அறிவிப்பு…!!!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போரில் மீண்டும் ரூ 26 ஆயிரம் கோடி இராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உக்ரேன் மீது ரஷ்ய படைகள் மூன்றாவது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. மும்முனைத் தாக்குதல் நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக ரஷ்யாவுக்கு  பதிலடி கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில் உக்ரைனுக்கு அமெரிக்கா பண உதவி வழங்கி வருகிறது. ஏற்கனவே 4,500 […]

Categories
உலக செய்திகள்

இவங்க ஒத்துழைப்பு தரலைனா…. இதுதான் நடக்கும்…. இந்தியா, சீனாவிற்கு எச்சரிக்கை விடும் ரஷ்யா….!!!

அமெரிக்கா ஒத்துழைப்பு தர மறுப்பதால் 500 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி மையம் இந்தியா மற்றும் சீனா மீது விழும் என்று ரஷ்ய விண்வெளி துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் மூன்றாவது நாளாக நடந்து வருகிறது. மேலும் ரஷ்யா மீது அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்யாவிற்கு பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ரஷ்ய விண்வெளி துறையை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா நடவடிக்கை மேற்கொள்ளுமா…? உற்று நோக்கி வரும் சீனா… காரணம் என்ன…?

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்திருப்பதை தொடர்ந்து, அமெரிக்கா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா? என்று சீனா கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்திருப்பது, வருங்காலத்தில் சீனாவும் தைவான் மீது போர் தொடுப்பதற்கான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. தைவான் நாட்டின் மீது சீனா போர் விமானங்களை அனுப்புவது வருத்தமளிக்கும் நிலையை உண்டாக்கியிருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவித்து, அமெரிக்கா தங்கள் படைகளை அனுப்பும் பட்சத்தில் தைவான் நாட்டிற்கும் நாளை இதே நிலை ஏற்படும் என்று […]

Categories
உலக செய்திகள்

நீண்ட வருடத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும்… ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை… அமெரிக்கா அறிவிப்பு…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்த ரஷ்யாவை தண்டிப்பதற்காக புதிதாக பொருளாதார தடைகளை விதித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து இரண்டாம் நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இதை ஒரு உலக நாடுகள் எதிர்த்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய நாட்டின் மீது புதிதாக பொருளாதார தடைகளை விதித்திருக்கிறார். இது பற்றி அவர் தெரிவித்திருப்பதாவது, விளாடிமிர் புடின் ஆக்கிரமிப்பாளர். அவர் தற்போது படையெடுப்பை தேர்ந்தெடுத்திருக்கிறார். அவரும், அவராலும், […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: “இந்தியாவின் ஆதரவு” ரஷ்யாவிற்கா….? ஐ.நாவில் வாக்கெடுப்பு…. அமெரிக்காவின் உறவில் புதிய விரிசல்….!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் வாக்கெடுப்பில் இந்தியா உட்பட பல முக்கிய நாடுகள் பங்கேற்கவில்லை. உக்ரேனின் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து 3 ஆவது நாளாக தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனையடுத்து ரஷ்யப் படைகளை அந்நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை தாக்கி அழித்துள்ளார்கள். இவர்களுக்கு உக்ரேன் ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஐ.நா சபையில் இன்று உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைன் மீதான போரை நிறுத்துங்கள்!”… வெள்ளை மாளிகைக்கு வெளியில் போராட்டம்…!!!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உக்ரைனில் நடக்கும் போரை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி, போராட்டம் நடைபெற்று வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க தங்கள் படைகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பிற நாடுகள் இதில் தலையிட்டால் வரலாறு காணாத கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என்று கடுமையாக எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் போரை தொடங்கியுள்ளன. இதில், டினிப்ரோ, கார்கிவ், கீவ் ஆகிய நகரங்களில் […]

Categories
உலக செய்திகள்

WOW SUPER: “கொரோனா அலர்ஜியால்” பாதிக்கப்பட்ட குழந்தைகள்… மருந்து கண்டறிந்த அமெரிக்க அறிவியலாளர்கள்….!!

அலர்ஜி சார்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அமெரிக்க மருந்தியல் நிபுணர்கள் மருந்து ஒன்றை கண்டறிந்துள்ளார்கள். குழந்தைகளை அறிகுறியில்லாத மற்றும் லேசான கொரோனா பாதித்த சில வாரங்கள் கழித்து பல விதமான அலர்ஜி சார்ந்த நோய்கள் அவர்களுக்கு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த கொரோனா தாக்கத்தால் ஏற்படும் அதிகமான காய்ச்சல் மற்றும் அலர்ஜியால் உடலின் பல முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் மேல் குறிப்பிட்டுள்ள அலர்ஜி சார்ந்த கொரோனாவால் […]

Categories
உலக செய்திகள்

“நான் அதிபராக இருந்திருந்தால்”… இது நடந்திருக்காது… -முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப்…!!!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தற்போது நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தால், உக்ரைன் போர் நடந்திருக்காது என்று தெரிவித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் படைகளும், அதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், மக்கள், பாதுகாப்பு படையினர் என்று மொத்தமாக 150- க்கும் அதிகமானோர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப், ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்தது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, சரியாக நிலையை கையாண்டால், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லிட்டில் ஜான் படத்தில் நடித்தவரா இது…. ஆளே மாறிட்டாரே…. எப்படி இருக்காரு நீங்களே பாருங்க…!!!

சினிமா துறையில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள்அந்த மொழிகளில் சார்ந்தவர் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலிருந்து நடிப்பவர்களும் உள்ளார்கள். அந்தவகையில் தமிழ் திரைப் படங்களில் வில்லனாக, ஹீரோவாக மற்றும் குணசித்திர நடிகர்களாக பல நடிகர் நடிகைகள் வெளிநாடுகளிலிருந்து வந்து நடித்து வருகிறார்கள். 2001ஆம் ஆண்டு வெளிநாட்டு ஹீரோவாக நடிக்க வைத்து  வெளிவந்த லிட்டில் ஜான் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார் பென்ட்லி மிச்சம். மேலும் இந்த படத்தில் ஜோதிகா, அனுபம், கேர் நாசர் ,பிரகாஷ்ராஜ் போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”… வேற லெவல்… ஹை ஹீல்சுடன் குதித்து உலக சாதனை… வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்காவில் தடகள வீராங்கனை ஒருவர் அதிக உயரம் உடைய ஹீல்ஸ் அணிந்துகொண்டு அதிக முறை தாவிக்குதித்து கின்னஸ் சாதனையில் இடம் பிடித்திருக்கிறார். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் சாண்டா மோனிகா கடற்கரையில் என்ற கடற்கரையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் ஓல்கா ஹென்றி என்ற தடகள வீராங்கனை உயரமான ஹீல்ஸ் அணிந்தவாறு கயிற்றின் மீது அதிகமுறை தாவி குவித்து உலக சாதனை படைத்திருக்கிறார். https://www.instagram.com/p/CaP0TwODkc_/ அவர், ஒரு நிமிடத்தில் இந்த சாகசத்தை செய்திருக்கிறார். கின்னஸ் உலக […]

Categories
Uncategorized உலக செய்திகள்

உக்ரைன் நாட்டிற்கு தொடர்ச்சியாக ஆயுதங்கள் வழங்குவோம்…. -அதிபர் ஜோ பைடன்…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் நாட்டிற்கு தற்காப்பு ஆயுதங்களை மேலும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் நாடு, ரஷ்யா, நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்தது. எனவே, அந்நாட்டின் எல்லைப்பகுதியில் ஒரு லட்சம் படை வீரர்களை குவித்திருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், உக்ரைனை எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா ஆக்கிரமித்து விடலாம் என்று எச்சரித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா, இந்த விவகாரம் தொடர்பில் ரஷ்யா மீது முதல்கட்ட பொருளாதார தடையை விதித்திருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ […]

Categories

Tech |