இலங்கை நாட்டில் வெடித்துள்ள மக்கள் போராட்டம் காரணமாக அந்நாட்டு அதிபர், பிரதமர் உட்பட ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் திணறி வருகிறது. இதனிடையே அந்நாட்டில் நடந்து வரும் அசாதாரண சூழலை தீர்க்க புதியதாக அமையும் அரசு உடனடியாக தீர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மீண்டுமாக வலியுறுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலிசுங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “இந்நேரத்தில் இலங்கையின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் இந்த தருணத்தை அணுகுமாறு அனைத்து தரப்பினரையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். […]
