கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு (3.6 மில்லியன் டாலர்) ரூ.27 கோடி நிதியுதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்ட பணிகளுக்காக நிதி வழங்கப்படுவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகாணத்தில் உருவான இந்த கொரோனா வைரஸ் சுமார் 180க்கும் மேற்பட்ட நாடுகளை பதம் பார்த்து வருகிறது. அதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா தான். தற்போது வரை அமெரிக்காவில் 1,385,850 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
