அமெரிக்க போர்க் கப்பலில் 114 மாலுமிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கடற்படைத் தலைவர் தாமஸ் மோட்லி ராஜினாமா செய்துள்ளார். அணுசக்தியில் இயங்கிவரும் அமெரிக்க விமானம் தாங்கி போர்க் கப்பலான தியோடர் ரூஸ்வெல்ட்டில் பணியாற்றிவந்த 114 மாலுமிகள் கொரோனாவால் பாதித்திருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டு அந்தக் கப்பல் குவாம் தீவில் இருக்கும் கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டது. கப்பலின் தலைமை அதிகாரியான குரோஷியர் ஊடகங்களுக்கு கடிதம் எழுதியதன் காரணமாகவே மாலுமிகள் கொரோனா தொற்றால் பாதித்திருப்பது வெளியுலகத்திற்கு தெரிய […]
