உக்ரைன் ரஷ்யா போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த போரால் இருதரப்பிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் போருக்காக ரஷ்யாவிற்கு பீரங்கி குண்டுகளை வடகொரியா வழங்கியுள்ளது எனவும் இதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன எனவும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து வடகொரிய பாதுகாப்பு அமைச்சரகம் கூறியதாவது “ரஷ்யாவுக்கு நாங்கள் ஆயுதங்களை வழங்கவில்லை. அதற்கான திட்டமும் எங்களிடம் இல்லை” என்று கூறியுள்ளது.
