உத்திரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் மீது அமிலம் வீசிய கொடூர சம்பவத்தில் தொடர்புடைய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டம் பாட்ஷா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது சமூக விரோதிகள் அவர்கள் மீது ஆசிட் வீசிய தால் மூவரும் பயங்கர காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஹஸுஸ் என்ற நபரை கைது செய்தனர். […]
