வேப்பிலையை தினசரி நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது என்பதைப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்ப்போம். வேப்பிலை ஒரு கிருமி நாசினி பொருள். பாரம்பரிய மருத்துவ உலகில் வேப்பிலை மிகவும் பிரபலமானது. இது மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த ஓர் அற்புதமான இலை. இந்த இலைகளைக் கொண்டு பல்வேறு அபாயகரமான நோய்களையும் சரிசெய்ய முடியும். பெரும்பாலும் ஆயுர்வேத மருத்துவத்தில் நோய்களைக் குணப்படுத்துவதற்கு வேப்பிலை முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. வேப்பிலையின் நன்மைகள்: வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து, […]
