மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கர்நாடகத்திற்கு இன்று வருகை தருகிறார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று கர்நாடக மாநிலத்திற்கு வருகிறார். இன்று காலை 11.30 மணிக்கு தனி விமானம் மூலம் அவர் பெங்களூரு விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். கர்நாடகத்திற்கு வருகை தரும் அமித்ஷாவை வரவேற்பதற்காக முதல் மந்திரி எடியூரப்பா உட்பட பல்வேறு மந்திரிகள் வரவேற்க உள்ளனர். பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலம் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள பத்ராவதி பகுதிக்கு செல்கிறார். […]
