நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் ரகளையால் 133 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகி உள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 19ம் தேதி முதல் வரும் 13ம் தேதி வரை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் மற்றும் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் திட்டமிடப்பட்ட 107 மணி நேரத்தில் 18 மணி நேரம் மட்டுமே நாடாளுமன்றம் நடந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
