அமலாக்கத்துறை இயக்குநா் சஞ்சய்குமாா் மிஸ்ராவின் பதவிக் காலத்தை புதியதாக ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழு ஒப்புதல் வழங்கி இருப்பதாக மத்திய பணியாளா் அமைச்சகம் தெரிவித்தது. சஞ்சய்குமாா் மிஸ்ரா(62) சென்ற 2018-ம் வருடம் நவம்பா் 19ம் தேதி, இரண்டு வருடங்களுக்கு என அமலாக்கத்துறையின் இயக்குநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து சென்ற 2020ம் வருடம் நவம்பா் 13ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில், முன்பு வெளியிட்ட இரண்டு ஆண்டு பதவிக்காலத்துக்கு பதில் மூன்றாண்டுகள் என […]
