டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரி உட்பட 5 பேருக்கு இன்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அலுவலகம் இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல குஜராத்தில் உள்ள போர்பந்தரில் கடற்படையில் பயிற்சி பெறும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. போர்பந்தரில் ராணுவ மருத்துவமனை இல்லாததால் ஜாம்நகர் மருத்துவமனையில் 16 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,36,657 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 6,642 ஆக […]
