Categories
தேசிய செய்திகள்

மேகவெடிப்பு எதிரொலி…. அமர்நாத் யாத்திரை நிறுத்தம்…. காணாமல் போன 40 பேர்…. வெளியான தகவல்…..!!!!

அமர்நாத் யாத்திரை என்பது இமய மலையின் மேல் பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு வருடந்தோறும் நடைபெறும் யாத்திரையாகும். அமர்நாத் பனிக் குகை நோக்கி 43 நாட்கள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். அந்த அடிப்படையில் இந்த வருடத்துக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 30 துவங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி முடிவடைகிறது. இந்த யாத்திரைக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பதிவுசெய்துள்ளனர். கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக யாத்திரை நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு யாத்திரை சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

அமர்நாத்தில் மேகவெடிப்பில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு….. மோடி இரங்கல்….!!!!

அமர்நாத்தில் மேக வெடிப்பு காரணமாக வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. அமர்நாத் புனித யாத்திரை நடந்து வரும் சூழலில் பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் இன்று திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டியது. இந்த வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதில் பலர் மாயமாகியுள்ளனர். சம்பவத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . […]

Categories
தேசிய செய்திகள்

3 ஆண்டுகளுக்குப் பின்…. பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை…..

தெற்கு காஷ்மீர், அமர்நாத் குகையில் உள்ள பனி லிங்கத்தை காண ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகள் யாத்திரை நடைபெறாத நிலையில் இந்தாண்டு மீண்டும் தொடங்கியுள்ளது. அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள நுன்வான் முகாமிலிருந்து முதல் குழு 2 ஆயிரத்து 750 பக்தர்களுடன் இன்று யாத்திரரியை தொடங்கினர். இந்த யாத்திரையை துணை ஆணையர் பியூஷ் சிங்லா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையொட்டி பக்தர்கள் யாத்திரை செல்லும் பாதையில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. அமர்நாத் யாத்திரை முன்பதிவு தொடக்கம்…!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் உள்ள அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க, நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருவது வழக்கம். இவ்வாறு ஆண்டுதோறும் சராசரியாக 3 லட்சம் பேர் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய செல்வார்கள். இந்நிலையில் கொரோனா காரணமாக இரண்டு வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை மீண்டும் இந்த வருடம் ஜூன் 30-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

2020ம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக வெளியான அறிவிப்பு வாபஸ்!

2020-ம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் வாபஸ் பெற்றது.  இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 20,471 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 3,960 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 652 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 251 பேர் உயிரிழந்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]

Categories

Tech |