நடப்பாண்டில் அமெரிக்க நாட்டில் பெரியளவில் 381 துப்பாக்கிசூடு சம்பவங்கள் அரேங்கேறியுள்ளது. இது நாள் ஒன்றுக்கு சராசரியாக 1.7க்கும் கூடுதலான பெரியளவிலான துப்பாக்கிசூடு எண்ணிக்கை ஆகும். அந்த நாட்டில் அதிகரித்துவரும் துப்பாக்கி வன்முறைக்கு வேதனை தெரிவித்த அதிபர் பைடன், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை பாதுகாக்க தாக்குதல் நடத்தகூடிய ஆயுதங்களை தடைசெய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என கூறினார். இதையடுத்து சென்ற ஜூன் 22ஆம் தேதி துப்பாக்கி பாதுகாப்பு மசோதா கொண்டு வருவதற்கான முடிவுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. […]
