அமராவதி அணையில் பாதுகாப்பற்ற படகு சவாரி நடப்பதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டிருக்கின்றது. அணைக்கு முன்பாக பூங்கா, ராக் கார்டன் அமைந்திருக்கின்றது. இயற்கை எழில் நிறைந்த இந்த அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றார்கள். இந்த நிலையில் சென்ற ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் அணை முழு கொள்ளளவை எட்டியது. […]
