மதுரை அரசடி பகுதியில் உள்ள இறையியல் கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு கேக் வெட்டி கிறிஸ்துமஸை கொண்டாடினார். அதன் பிறகு விழாவில் கலந்து கொண்டவர்களிடம் டிடிவி தினகரன் பேசினார். அவர் பேசியதாவது, சிலர் மதத்தின் பெயரில் மக்களை பிரித்து பிரிவினை வாதத்தை ஏற்படுத்துகிறார்கள். மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்து இன்று தீவிரவாதம் மனித குலத்தையே அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது. அதன்பிறகு சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை என கூறி […]
