மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்ததாக அப்போலா மருத்துவர் பாபு மனோகர் ஆறுமுகசாமி ஆணையத்திடம் தெரிவித்துள்ளார். மேலும் 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா பதவியேற்கும் நாளுக்கு முன்பாகவே அவருக்கு மயக்கம், தலைசுற்றல் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் இன்று (மார்ச் 7) மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளது. நாளொன்றுக்கு 16 மணி நேரம் வேலை இருப்பதாக ஜெயலலிதா கூறினார் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். […]
