மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாலை விலைக்குக் கொடுக்காமல் இலவசமாக கொடுத்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலியில் ஏலேகாவ் கவாலி என்ற கிராமம் இருக்கின்றது. இந்த கிராமத்தில் 90 சதவீத வீடுகளில் கால்நடைகள் இருக்கின்றன. ஆனாலும் இந்த கிராம மக்கள் பாலை விற்பனைக்கு கொடுக்காமல் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். இந்த செயல் குறித்து அந்த கிராமத்தை சோ்ந்த ராஜா பாவு மன்டாடே கூறுகையில், ‘‘கிராமத்தின் பெயரான ஏலேகாவ் கவாலி என்றாலே பால்காரர்களின் ஊர் என்பது […]
