தமிழக குத்துச்சண்டை வீரருக்கு ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அபூர்வ அறுவை சிகிச்சை அளித்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். கடலூரைச் சேர்ந்தவர் பாலாஜி(21). இவர் சென்னையில் இருக்கின்ற கல்லூரியில் பி.ஏ பொருளாதாரம் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார். இவருக்கு குத்துச்சண்டை மீது மிகுந்த ஆர்வம். அதனால் சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சேர்ந்து சேம் எபனேசர் என்ற பயிற்சியாளர் மூலம் குத்துச்சண்டை முறையாகக் கற்றுக் கொண்டுள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடந்த […]
